முடிவுற்ற கருத்திட்டங்கள் - மின்வலு அமைச்சு
மொரகொல்ல நீர் மின் பலகத் திட்டம் (மெகா வோட் 31)
மொரகொல்ல மின் உற்பத்திக் கருத் திட்டம் என்பது மகாவலி ஆற்றுப் படுகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இறுதி நீர் மின் உற்பத்திக் கருத் திட்டமாகும். இந்தக் கருத்திட்டத்தின் பிரதேசம் கண்டி மாவட்டத்தின் உலப்பனே பகுதியில் அமைந்துள்ளது. இந்த மின் உற்பத்திக் கருத் திட்டத்திலிருந்து எதிர்பார்க்கப்படும் ஆண்டு சக்தி உற்பத்தி 100 கிவொம ஆகும். அணைக்கட்டு நிர்மாணம் சுரங்கம் தோண்டுதல், மின் உற்பத்தி நிலையத்தின் நிர்மாணம் மற்றும் மின் உற்பத்திப் பொறித்
தொகுதி உருவாக்கம் ஆகிய பணிகள் நடைபெற்று வருகின்றன. ஒட்டுமொத்த முன்னேற்றம் 59%. 2024 ஆம் ஆண்டு திசம்பர் மாதத்திர் இந்த மின் உற்பத்திக் கருத்
திட்டத்தை நிறைவு செய்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத் திட்டத்தின் மொத்த மதிப்பிடப் பட்டுள்ள செலவு USD 114 மில்லியன்களாகும்.
புரோட்லண்ட் நீர் மின் திட்டம் (35 மெகாவாட்)
புரோட்லண்ட் நீர் மின் திட்டம் (35 மெகாவாட்)
பிராட்லேண்ட்ஸ் நீர்மின் திட்டம் என்பது களனி ஆற்றில் கட்ட திட்டமிடப்பட்ட ஒரு நதி-ஆற்றின் வகை திட்டமாகும். தற்போதுள்ள பொல்பிட்டிய மின் நிலையத்தின் கீழ் நீரோடை மின்சக்தியைப் பயன்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த திட்டம் 35 மெகாவாட் நிறுவப்பட்ட திறன் கொண்டது மற்றும் ஆண்டுக்கு 126 ஜிகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. திட்டத்தின் முக்கிய இடங்கள் கித்துல்கலவிற்கு அருகில் அமைந்துள்ளன. பிரதான அணை, மாற்று அணை, பிரதான சுரங்கப்பாதை, திசை திருப்பும் சுரங்கப்பாதை, இரண்டு 17.5MW டர்பைன் ஜெனரேட்டர் அலகுகள் கொண்ட மின் நிலையம், சுவிட்ச்யார்ட் மற்றும் டிரான்ஸ்மிஷன் லைன் ஆகியவை திட்டங்களில் உள்ள முக்கிய கூறுகளாகும்.
கித்துல்கல பிரதேசத்தில் ஒயிட் வாட்டர் ராஃப்டிங் விளையாட்டைப் பாதுகாப்பதற்காக உறுதியான நீர் வெளியீட்டை பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டதுடன், இதன் விளைவாக வருடாந்த ஆற்றல் உற்பத்தியில் குறைப்பு ஏற்படும். உற்பத்தி இழப்பைக் குறைப்பதற்காக மினி நீர்மின் நிலையம் மூலம் தண்ணீர் விடப்படுகிறது. திட்டத்தின் மொத்த அசல் மதிப்பிடப்பட்ட செலவு 82 அமெரிக்க டாலர்கள். மொத்த மதிப்பிடப்பட்ட செலவில், 85% சீனாவின் தொழில்துறை மற்றும் வணிக வங்கியால் (ICBC) நிதியளிக்கப்பட்ட கடனினால் ஈடுசெய்யப்பட்டது. ஏனைய 15% இலங்கையின் ஹட்டன் நேஷனல் வங்கியின் கடனினால் பூர்த்தி செய்யப்படும். ICBC கடனின் செல்லுபடியாகும் காலம் 16.12.2019 அன்று காலாவதியானது. எனவே, எஞ்சியுள்ள வேலைகளை நிறைவு செய்வதற்கு தேவையான மீதி நிதியை பூர்த்தி செய்ய கடனை இறுதி செய்ய, மக்கள் வங்கியுடன் CEB பேச்சுவார்த்தை நடத்தியது. இயற்பியல் முன்னேற்றத்தின் அடிப்படையில், 79% நிறைவடைந்துள்ளது மற்றும் ஜூன் 2021க்குள் செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேல்கொத்மலை
UKHP 150 மெ.வொ ஒரு நிலையான கொள்திறனையுடைய (75 மெ.வொ இரண்டு அலகுகள் அடங்கிய) ஓடிப்பாயும் ஓர் ஆற்று நீர்வலுக் கருத்திட்டம் ஆகும். இந்தக் கருத்திட்டம் ஆண்டொன்றுக்கு 409 GWh மின்சக்தியை உற்பத்தி செய்யும். இது பின்வரும் ஆக்கக்கூறுகளைக் கொண்டுள்ளது:
- 35.5 மீற்றர் உயரமொன்றையும்,180 மீற்றர் உச்சி நீளமொன்றையும் உடைய தலவாக்கலை நகரத்தை அண்மித்து அமைந்திருக்கும் ஓர் அணைக்கட்டு
இது 0.25 சதுர கிலோ மீற்றர் (60 ஏக்கர்கள்) மேற்பரப்புப் பகுதியொன்றுடன் கூடிய ஒரு பயன்மிகு 0.8 MCM கொள்திறனுடைய 2.5 MCM முழுமொத்த நீர் சேமிப்பு ஆற்றல் வாய்ந்ததாகும். நீர்த்தேக்கத்திற்கான முழு விநியோக மட்டமானது, கடல் மட்டத்திலிருந்து சராசரியாக (கமச) 1,194 மீற்றர்களுக்கு மேலாகக் காணப்படும். ஆகக்குறைந்த இயக்க மட்டமும் சாதாரண பிற்புற நீர் மட்டமும் முறையே கடல் மட்டத்திலிருந்து சராசரியாக (கமச) 1,190 மீற்றருக்கும் 703 மீற்றருக்கும் மேலாகக் காணப்படும்
- 4.5/5.8 மீற்றர் விட்டத்தில் வரியிடப்பட்டதும் வரியிடப்படாததுமான 12.89 கிமீ நீளத்தையுடைய, அணைக்கட்டின் வடக்குத் திசையிலிருந்து பூண்டுலு ஒயாவை நோக்கிச் செல்லும் ஓர் தலைமை சுரங்கவழி
இந்த சுரங்கவழி திரும்ப முன்னர் வடமேற்குத் திசையை நோக்கி ஏற்கனவே அமைந்துள்ள கொத்மலை அணைக்கட்டுடனும் நீர்த்தேக்கத்துடனும் இணைகின்றது. (நீர்த்தேக்கத்திற்கும் மின்னுற்பத்தி நிலையத்திற்கும் இடையிலுள்ள ஆகக்கூடிய முழுமொத்தத் தலைமைப்பகுதி 491 மீற்றர் ஆகும்).
- 12 மீற்றர் விட்டத்தில் 98 மீற்றர் உயரமுடைய மின்னுற்பத்தி நிலையத்தின் உச்சியில் அமைந்திருக்கும் ஓர் வரையறுக்கப்பட்ட திறந்த மேலருவிக் கணைதாங்கி
- 4.5 மீற்றர் விட்டமொன்றைக் கொண்டு ஆரம்பமாகி 1.45 மீற்றர் வரை குறைந்து செல்லும் நிலகீழ் உள்வளைந்த ஒரு கணையினால் உருவான நீர்காவிக் குழாய்மார்க்கம்
இந்த நீர்காவிக் குழாய்மார்க்கம் 793 மீற்றர் நீளத்தையும், 745 மீற்றர் உடைய வழியொன்றையும் இன்னும் 48 மீற்றர் உடைய இரண்டு வழிகளையும் கொண்டமையும்.
- நியம்கம்தொர என்றவிடத்தில் அமைந்திருக்கும் (பூனா ஒயாவும் கொத்மலை ஒயாவும் சங்கமிக்கும் 2 கிமீ மேலருவிப் பகுதியில்) கிமீ 66.3 மீ L x 18.8 மீ விட்டங்களையுடைய ஓர் நிலகீழ் மின்னுற்பத்தி நிலையம்
இது 77,000 Kw டேர்பைன்கள் உடைய இரண்டு நிலை அலகுகளுக்கான W x 36.5 மீ H, மற்றும் இரண்டு நிலைக்குத்து அச்சுகள், த்றீ பேfஸு 88,000 kVA மின்பிறப்பாக்கிகள், இரண்டு த்றீ (3) பேfஸுகள், மின்மாற்றிகள், 220 kV எரிவாயு இன்ஸியுலேட்டர் ஸ்விட்ஜியர் (ஜிஐஎஸ்) உடைய ஓர் உபமின்னிலையம் என்பவற்றைக் கொண்டுள்ளது.
- 220 kV இரட்டைச் சுற்று மின்சார செலுத்துகை மார்க்கமொன்றுக்கு மின்னுற்பத்தி நிலையத்தை இணைப்பதற்காக நியம்கம்தொர என்றவிடத்தில் அமைந்திருக்கும் 36.5 மீ அகலமும் 130 மீ நீளமும் உடைய ஓர் வெளிக்கள ஆளிப்பலகை
- உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை ஏற்கனவே அமைந்திருக்கின்ற கொத்மலை உப மின்னிலையத்திற்கும் அதனுடன் இணைந்த ஆளிப்பலகை விஸ்தரிப்புகளுக்கும் செலுத்துவதற்கான 18 கிமீ நீளமுடைய 220 kV இரட்டைச் சுற்று மின்சார செலுத்துகை மார்க்கம்
கருத்திட்ட ஆகுசெலவு
மொத்தக் கருத்திட்ட ஆகுசெலவு: ரூ. 37,269 மில்லியன்
- ஜப்பான் சர்வதேச கூட்டுறவு முகவராண்மை (ஜசகூமு) வழங்கிய வெளிநாட்டுக் கடன்: ரூ. 28,271 மில்லியன் (ஜப்பான் யென்கள் – ரூ. 37,817 மில்லின்)
- இலங்கை அரசாங்கம்: ரூ. 8,548 மில்லியன், நிறைவுசெய்ய எதிர்பார்க்கப்பட்ட திகதி: 2011 திசம்பர் இறுதி
லக்விஜய மின் நிலையம்
ஆரம்பிக்கப்பட்ட திகதி 2007 யூலை 23
தற்போதைய முன்னேற்றம் நிறைவடைந்துள்ளது
நிதி 455 மில்லியன் அ.டொ (சீனாவிலிருந்து கிடைத்த கடன்)
2% வட்டியில் 300 மில்லியன் அ.டொ
6% வட்டியில் 155 மில்லியன் அ.டொ
ரூ. 5300 மில்லியன்
இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்புப் பின்னணி
நுரைச்சோலை அனல் சக்தி மின் பொறித்தொகுதி 1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்க எதிர்பார்க்கப்பட்டது. ஆயினும், பல்வேறுபட்ட நிறுவனங்களிலிந்து வந்த அழுத்தங்களின் காரணமாக இது நிறுத்தி வைக்கப்பட்டது. எனினும், மேன்மை தங்கிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை நடைமுறைப்படுத்தத் தீர்மானித்தார். அதனைத் தொடர்ந்து 2005 ஆம் ஆண்டில் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டு, 2006 ஆம் ஆண்டில் ஒப்பந்தமும் கைச்சாத்திடப்பட்டது.
இதன் பணி 2007 ஆம் ஆண்டு யூலை மாதம் 23 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டது. தற்போதைய முன்னேற்றம் – 94% நிறைவடைந்துள்ளது.