முகவுரை

கடந்த சில தசாப்தங்களாக சக்தித் துறையில் நாம் பல சாதனைகளை அடைந்துள்ளோம்.

மேலும், இலங்கையின் சக்தி துறையில் நாம் பல சவால்களுக்கும் முகம்கொடுக்க வேண்டியுள்ளோம்.

எமது நாடு முழுமையான மின்சார வசதியை அடைந்துள்ளதுடன்இலங்கையின் தேசிய சக்திக் கொள்கையும் மூலோபாயங்களும் (2008) என்ற ஆவணத்தில் குறிப்பீடுசெய்யப்பட்டுள்ள ஏனைய பல கொள்கை இலக்குகளையும் மைல்கற்களையும் அடைந்துள்ளது. குறைந்து வருகின்ற சக்தி பாதுகாப்பை கொண்ட  உலகில் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளத்தின் பாரிய பங்கைக்கொண்டு இலங்கை ஏனைய நாடுகளுக்கு மத்தியில் உயர்ந்த நிலையிலுள்ளது. நாட்டின் பொருளாதார மீள்திறத்தின்இந்த முக்கிய சிறப்பம்சத்தை தொடர்ந்தும் தக்கவைத்துக்கொள்ளக்கூடிய உறுதியானஒரு பொறுப்புணர்வுடன் எமது நாடு முன்னோக்கி நகர்கின்றது.  நிலையானஒருபொருளாதாரத்திற்குபங்களிக்கும்  இந்தக் கொள்கைக் கூற்று நாட்டின் சக்தித் துறையினது எதிர்கால மார்க்கத்தை தெளிவாக குறிப்பிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல தசாப்த கால உள்ளக நெருக்கடிகளிலிருந்து மீண்டு வந்தாலும், முழு நாட்டிற்கும் இடையறாத மின்சார விநியோகத்தை வழங்கி வந்துள்ளது. நாடு முழுதிலுமுள்ள பாரிய மற்றும் சிறு அளவான நிறுவனங்கள்c மின்சாரத்தின் கிடைப்புத்தன்மையுடன், மூலப்பொருட்களையும், மனித வளங்களையும் சிறந்தமற்றும்உற்பத்தித்திறனான விதத்தில் பயன்படுத்துவதற்கும் எதிர்பார்க்கின்றன. சகல பிரஜைகளுக்கும் நவீன சக்தி வடிவங்களுக்கான பிரவேசத்தைப் பெற்றுக்கொடுப்பதன் தேவையை உணர்ந்து, திரவநிலை மற்றும் எரிவாயு பெற்றோலிய எரிபொருட்கள் போன்ற ஏனைய சக்தி மூலங்களும் முழு நாட்டிற்கும் விநியோகிக்கப்படுகின்றன.

மொ.உ.உ. (GDP) இல் 60% வீதத்திற்கும் அதிகளவில் பங்களிக்கின்ற வலிமையான ஒரு சேவைத் துறையைக்கொண்டு, இலங்கை சாதுர்யமான பொருளாதார அபிவிருத்திப் பாதையினூடாக தனது பயணத்தை தொடரும் என அபிவிருத்தி பொருளாதாரக் கட்டமைப்பு விதந்துரைத்துள்ளது. எவ்வாறாயினும், பொருளாதாரத்தின் சக்தி வலிமையை தற்போதைய உகந்த அளவுகளில் பேணுவதற்கும் உதவக்கூடிய எரிபொருள் மைய பொருளாதாரத்தை அறிவை நோக்கிய, பொருளாதாரமாக  நெறிப்படுத்தும் பெரும் முயற்சிகள் மேற்கொள்ளப்படு வருகின்றன. அடிக்கடி நிகழும் சக்தி நெருக்கடிகளினால் கட்டுண்டிருக்கின்ற உலகத்தில், சக்தியில் குறைந்தளவு தங்கியிருந்து, வலிமையான ஒரு பொருளாதாரமாக இலங்கையை வளர்த்தெடுப்பதற்கு இந்தக் கொள்கை வழிவகுக்கும்.

இந்தக் கொள்கை சக்திக் கைத்தொழிலை உலகலாவிய சக்திப் பரிவர்த்தனைக்கு நாட்டை தயார்படுத்துகின்ற தேசிய பொருளாதாரத்தின் ஒரு புத்தாக்க உந்துகைக்கான பொறுப்புடைய ஒரு மானியத்தால் சுமைப்படுத்தபட்ட உயிர்வாழ்வில் கவனம்செலுத்துகின்ற  ஒரு நிலையிலிருந்துஉயிர்ப்பாக மாற்றியமைக்கும். பிரஜைகளின் புதிய பொருளாதார சுதந்திரம் மக்களினால் செலுத்தப்படும் விலைகளின் செலவு பிரதிபலிப்பு எந்தவிதமான தயக்கமும் இன்றி ஏற்றுக்கொள்ளப்படும் அளவுக்கு சக்தி சார்ந்த சேவையின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு உகந்த சூழலை ஏற்படுத்தும். இந்தக் கொள்கை நீண்டகால அடிப்படையில், இலங்கை மக்கள் அனைவருக்கும் நன்மையளிக்கக்கூடிய வகையில் சக்தித் துறையை வினைத்திறன் வாய்ந்ததாகவும் பயனுள்ளதாகவும் நிருவகிப்பதற்கு சக்தித் துறை தொழில் வல்லுநர்களின் ஆற்றலை வலுப்படுத்துவதன் மூலம், சக்தித் துறையை போஷித்து வளர்த்தெடுப்பதற்கும் துணையாக அமையும்.

தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்பங்களின் மூலமாக சாத்தியமடைந்து நிதமும் வளர்ந்து வருகின்ற தொழில்நுட்ப ஆற்றல்களுக்கும் மற்றும் புதிய கூட்டிணைவு அளவுக்கும் மத்தியில், பரந்திருக்கும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தியின் வகிபங்கு தேசிய சக்தி விநியோகத்தில் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தியின் பங்கை தக்கவைத்துக்கொள்வதற்கான முக்கிய உந்துகைகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்படும். அதே போன்று, முழுப் பெறுமான சங்கிலியிலுமுள்ள சக்தி வினைத்திறன், அனுகூலமான அளவுகளில் சக்திக்கான கேள்வியின் அதிகரிப்பை பேணும் வகையில் மேம்படுத்தப்படும்.  இந்தக் கொள்கை முயற்சி காலநிலை மாற்றத்திற்கான ஒரு ஒருமுகப்பட்டிருக்கின்ற அர்த்தமுள்ள பயனுள்ள ஒரு பதிலீட்டிற்கு, சக்திக் கைத்தொழிலின் சகல அக்கறையுடைய தரப்புகளினதும் முயற்சிகளை கூட்டிணைப்பதன் மூலமாக, காலநிலை மாற்றத்தினால் வரும் சவால்களை எதிர்நோக்குவதற்கு இலங்கையின் தெளிவான பொறுப்பை உத்தரவாதப்படுத்தும்.

 

அறிமுகம்

உலகளாவிய சக்தித் தொழிற்துறையானது, அதிகரித்து வருகின்ற வழங்கல் விருப்பத் தெரிவுகள், புதிய சக்திகாவிகள் மற்றும் வளர்ந்து வருகின்ற தேவைகள் என்பவற்றின் விளைவாக ஒரு மாற்றத்திற்கான தீர்மானம் எடுக்கும் கட்டத்தை  அடைந்துள்ளது. ஏனைய பல நாடுகளைப் போல் இலங்கையும் அடுத்த சில தசாப்தங்களில் இந்த மாற்றங்களுக்கு முகம்கொடுக்க வேண்டியுள்ளதுடன் மேலும் சக்தித் துறையில் ஏற்படுகின்ற இத்தகைய மாற்றமானது பல முதனிலை வாய்ப்புகளுக்கு வழிவகுத்து நாட்டின் பொருளாதார வளர்ச்சியை வலிமை பெறச்செய்யும். சுற்றாடலுக்கு ஆகக்குறைந்தளவு சுமையுடன் அதிகளவான ஸ்தீரத்தன்மை, பாதுகாப்பு, தாங்கக்கூடிய வல்லமை மற்றும் நிலைபெறுதகு தன்மை என்பவற்றில் இலக்குக்கொண்டு, சக்தி நெருக்கடி நீங்கிய ஒரு எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் வகையில் சகல அரச மற்றும் தனியார் துறை தொழில்முயற்சிகளுக்கும், குடும்பங்களுக்கும், நிறுவனங்களுக்கும் ஒரு வளமான அத்திவாரத்தையிட்டு, தேசத்திற்கும் அதன் சமூக சந்தைப் பொருளாதாரத்திற்கும் வலுவூட்டுவதற்கான மாற்றத்தில் சக்தித் துறையை நெறிப்படுத்தும் வழிமுறைகளை இந்த சக்திக் கொள்கை எடுத்துரைக்கும்.

இலங்கை, ஐக்கிய நாடுகளின் மனித அபிவிருத்திச் சுட்டியில் நடுத்தர நிலையில் தரப்படுத்தப்பட்டுள்ளதுடன்இலங்கையின், ஆண்டுதலா மொ.உ.உ. சராசரியாக 4,065 அமெரிக்கடாலர் அளவில் காணப்படுகின்றது (2017)[1]. இந்தத் தசாப்த காலத்தினுள் உயர்-நடுத்தர வருமான மட்டத்தை அடையும் அரசாங்கத்தின் முயற்சியானது இலங்கைப் பொருளாதாரத்தில் சக்தியின் பங்களிப்பை மேலும் வலுப்படுத்தும். கடந்த மூன்று தசாப்த காலமாக நீடித்த உள்நாட்டு யுத்தத்தின் பின்னர், முன்னேற்றகரமான சமூக சந்தைப் பொருளாதாரத்தில் கால்பதித்துள்ள ஒரு தேசம் என்ற ரீதியில்,  படிப்படியான அணுகுமுறையிலும் பார்க்க, அபிவிருத்திற்கு முழுமையான அணுகுமுறை அனுகூலமாகஇருக்கும் .   நாட்டின் ஒவ்வொரு சமூகப் பொருளாதார செயற்பாட்டிலும் சக்தித் துறையின் கணிசமான தாக்கங்கள் காணப்படுவதால், சமூகப் பொருளாதார அபிவிருத்தி இலக்குகளோடுஇசைந்தஒரு சக்தி கொள்கை அவசியமாகும்.

இலங்கை ஒப்பீட்டளவில் குறைந்த சக்தி செறிவுடைய பொருளாதாரத்தைபேணுகிறது, அதாவது ஒரு மில்லியன் இலங்கை ரூபா. அளவான மொ.உ.உ. ஐ உற்பத்தி செய்வதற்கு, 0.47TJ அளவான வர்த்தக சக்தியை பயன்படுத்துகின்றது[2]. பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தும் அதே வேளையில் குறைந்தளவு சக்தி செறிவை பேணுவது இலங்கைக்குள்ள சவாலாகும். இலங்கை 100% மின்சார வசதியளித்தல் எனும் முக்கிய ‘மைல்கல்லை’ அடைந்தன் மூலமாகசகல பிரஜைகளுக்கும் நவீன சக்தி மூலங்களை வழங்குதல் எனும் இலக்கை பூர்த்தியாக்கி இருக்கிறது.

பொதுவான பிரவேசத்தின் மத்தியிலான பொருளாதார வளர்ச்சி தொடர்ந்தும் அதிகரித்த சக்தி விநியோக கொள்ளாற்றலை தேவைப்படுத்துகின்றது. சக்தி மாற்றீட்டின்வினைத்திறனை மேம்படுத்தி, கேள்வி அதிகரிப்பை சமாளிக்க முடியும். குறைந்தளவான ஒரு சக்தி செறிவு நிலையை பேணுவதற்கான தொடர் முயற்சிகள் பொருளாதாரத்திலும் அதே  நேரம் சுற்றாடலிலும் குறைந்தளவு சுமையை ஏற்படுத்த தேவைப்படுத்துகிறது. அதிக பொருளாதார வளர்ச்சிக்கு மத்தியில் இந்தக் குறிக்கோளை அடையும் நிமித்தம், ஊக்குவிப்புகள் மைய கொள்கையினூடான கேள்வி முகாமையில் அதிகரித்த முயற்சிகள் தேவைப்படுத்தப்படும்.

வர்த்தக அளவில் அதிகளவு சக்தியை நுகரும் போக்குவரத்துத் துறையைவினைத்திறனுடன் முகாமை செய்வதற்கு சக்திப் பாவனையை பயனுள்ளதாக கட்டுப்படுத்தும் வகையிலான, கொள்கைத் தலையீட்டு நடவடிக்கைகளினூடாக பெற்றோலியம் சார் உற்பத்திகளுக்கு புறம்பாக ஏனைய சக்தி மூலங்களின் பாவனையை தூண்டுவதும்போக்குவரத்து உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தியுடன் கூடிய மிகவும் வினைத்திறன் வாய்ந்த முறைமைகளுக்கான போக்குவரத்து முறைகளைதரமுயர்த்தலும்அவசியமாகும்.

பெரும்பான்மையான நீர்மின் வளம் ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டுள்ளதால், நாட்டின் முதன்மை சக்திப் பிரிவில் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தியின் (மீ.ச.) ஒப்பீட்டளவிலானஅதிக பங்களிப்பு தொடர்ச்சியாக குறைவதை  தவிர்க்கமுடியாது. வீட்டு சக்திப் பாவனை  உயிர்ச்சுவட்டு எரிபொருட்களின் பாவனையை நோக்கி நகர்வதால், சகல வகையான சக்தி வடிவங்களதும்அதிகரித்து வரும் சக்தித்தேவை உயிர்ச்சுவட்டுஎரிபொருட்களின் பாவையைக்கொண்டு பூர்த்தி செய்யப்படுகின்றது. நீர் வளங்கள்பல்வேறு தேவைகளுக்கு பயன்படும்,விவசாய தேவைக்கும் மற்றும் குடிநீருக்கும் அடுத்ததாக மூன்றாவது  முன்னுரிமையாக மின்னுற்பத்தி விளங்குகிறது. அதிலும் மகாவலி II ஆம் கட்ட அபிவிருத்தி சிக்கல் தன்மை வாய்ந்ததாகும். கடந்த தசாப்தங்களில் 55% வீதத்தில் பேணப்பட்ட அளவில், ஆரம்ப சக்தி விநியோகத்தில் மீளப்புதுப்பிக்கத்தகு சக்திகளின் பங்களிப்பை பாதுகாப்பதற்கும் மற்றும் மேம்படுத்துவதற்கும் ஒரு முன்மாதிரியான கொள்கை நகர்வு எதிர்பார்க்கப்படுகின்றது.

நம்பத்தகுந்த, வினைத்திறனூடான செலவு, போட்டி ரீதியானவிலை நிர்ணயம் பெறும்சக்தி சேவைகளின் விநியோகத்திலிருந்து பல்வகை சக்தி மூலங்களை சமூக சந்தை பொருளாதாரத்திற்கு பல்லினப்படுத்தும் கருமத்தை உறுதிசெய்யும் நிமித்தம், சக்தித் துறையை அபிவிருத்தி செய்தல் மற்றும் நிருவகித்தல் ஆகிய சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இலங்கை,திட்டங்களை எவ்வாறு வகுக்க வேண்டும் என்ற அம்சங்களை, தேசிய சக்திக் கொள்கை மற்றும் மூலோபாயங்கள் முன்வைக்கின்றன.

ஆழ்ந்த பல பின்னணிகளிலிருந்து தளம்பல்ஏற்பட்டதன் காரணமாக, இலங்கை கடந்த ஒரு சில தசாப்தங்களாக பல சக்தி நெருக்கடிகளை எதிர்-நோக்கியது. நாட்டின் சிறு புவியியல் பரப்பு மற்றும் அதன் மக்களின் சிக்கனம் வாய்ந்த வாழ்க்கை முறையுடன் இணைந்திருக்கும்உயிர்த்திணிவு சக்தி வளங்கள், ஆண்டு முழுவதற்குமானசூரியவொளி, அதிக மழைவீழ்ச்சி என்பவற்றின் குறிப்பிடத்தக்களவு பாவனையாக  இந்த அடிப்படைகளை இனங்காணலாம்.

இந்த ஆழ்ந்த அடிப்படைகளிலிருந்து தேசிய பொருளாதாரம்  போஷிக்கபட்டுள்ளதால், நாட்டிற்கு தொடர் மின்சார விநியோகத்தை வழங்குவதில் தேசிய மின்சார விநியோக பரப்பைவிரிவுபடுத்தில், இலங்கை, பிராந்தியத்தில் பலனை அறுவடைசெய்யும் முதலாவது நாடாக விளங்கியது. சக்தியின் ஆகக்குறைந்த சாத்தியமான உள்ளீட்டைக் கொண்டு, சக்தி முறைமைகளின் நம்பத்தகுதன்மை, நாட்டிற்கு அதிக பொருளாதார நன்மைகளை  வலுப்படுத்தி, நாட்டிற்கான சேவைகள் துறையை ஈர்த்துள்ளது. பொருளாதார சக்தி செறிவில்நிலையான வளர்ச்சியை அனுபவித்து வருகின்ற ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் பொருளாதாரங்களுடன் கூர்ந்து ஒப்பிடும் போது, இது சேவைகளை நோக்கிய பொருளாதாரத்தில் ஒரு கட்டமைப்பு சார்ந்த மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சுதேசிய மற்றும் பூகோள சக்தி விநியோகங்களின் நம்பத்தகுதன்மையும் மற்றும் விலையை சுமக்கக்கூடிய தன்மையும் மாறுநிலையிலுள்ள இந்த பொருளாதாரத்தில் மிகவும் விரும்பத்தகுந்த கூறுகளாக விளங்கும். காற்று மற்றும் சூரியவொளி போன்ற மின்னுற்பத்தியில்கடும் முனைப்பு இருக்கக்கூடிய போட்டி ரீதியில் அதிகரித்து வருகின்ற புதிதாக மதிப்பிடப்படும் வளங்களின் அபிவிருத்தியிலானஒரு எதிர்காலம் பற்றி நாடு ஆராய்ந்து வருகின்றது. அநேகமாக மிகவும் முக்கியமான சக்தி வளமாக விளங்குகின்ற உயிர்த் திணிவு சக்தி, தொழில் துறைஅனல் சக்தி விநியோகத்திற்கு தங்கியிருக்கக் கூடிய மற்றும் வீட்டு சக்திப் பாவனைக்கான ஒரு சக்தி வளமாகிய ஒரு எரிபொருளின் பாவனைக்கு பரிவர்த்தனை செய்வதன் மூலமாக, மேலும் அதிகளவு பெறுமதி வாய்ந்த பங்களிப்பை செய்யும்.

பெருமளவு சுதேசிய வளங்களை பயன்படுத்துவதற்கான மூலோபாயங்கள் மற்றும் சக்தி மாற்றுதொழில்நுட்பங்கள் என்பவற்றை அபிவிருத்தி செய்து‘சக்தியில் வலிமையான’ஒரு நாடாக உயர்ந்து விளங்குவது இலங்கையின் அபிலாஷையாகும். மேல்நிலைப் பெற்றோலிய வள அபிவிருத்தியிலிருந்து  கீழ்நிலைப் பெற்றோலிய வள அபிவிருத்திற்கு பல்லினப்படுத்தும் வகையில் பெற்றோலியத் துறையை வலுப்படுத்தும் நிமித்தம் தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் அதே வேளையில், மின்சாரத்தின் நிலையையும் ஒரு பெரும் சக்திக் காவியாக உயர்வடையச் செய்வதற்கான முயற்சிகளும் கூட மேற்கொள்ளப்படும். திரவநிலை பெற்றோலிய ஆதிக்கத்திலிருந்து ஏனைய சக்திக் காவிகளுக்கு, போக்குவரத்துத் துறையிலுள்ள சக்திப் பரிவர்த்தனை காத்திரமாக ஊக்குவிக்கப்படும். பூகோள வளங்களுக்கான சக்தி விநியோக மார்க்கங்களை பாதுகாக்கும் அதே வேளையில், சுதேசிய வளங்களின் அளவுகளை அதிகரிப்பதிலில் வளங்களை ஈர்க்கும் புதிய சக்திக் காவிகளை புதிதாகக்கண்டுபிடிப்பதற்கான ஆராய்ச்சி ஆய்வில் மின்சக்தித் துறை, புகழ் பெறும். எரிவாயு முனையங்கள், மின்னுற்பத்தி ஸ்தலங்கள் மற்றும் மின்சார செலுத்துகை மார்க்கங்கள் போன்ற முக்கியமான சக்தி உட்கட்டமைப்பு சார் பிரிவுகளுக்கு தேவையான காணி வளங்கள் பெற்றுக்கொள்ளப்படும் அதே வேளையில், சக்திக் களஞ்சியம், பாரம்பரிய சக்தி முறைமைகளை கட்டுப்-படுத்தி, இடவசதிகளையும் கால வரையறைகளையும் அதிகரிப்பதற்கான ஒரு அடிப்படைக் காவியாக கருதப்படும்.

ஐ.நா. அமைப்பின் நிலைபெறுதகு அபிவிருத்தி இலக்குகளின் (SDGs) 7-வது இலக்கை இணையாக அமையும் வகையில், அதாவது ஐ.நா. இலக்கினது ஒரு தசாப்த காலத்திற்கு முன்னர், 2020 ஆம் ஆண்டளவில் அனைவரும் சுமக்கக் கூடிய விலையில், நம்பத்தகுந்த, நிலையான, அனைவருக்கும் கிடைக்ககூடிய நவீன சக்தியை அடையக்கூடிய வகையில், இந்த சக்திக் கொள்கை பங்களிப்பு செய்யும். இலங்கை உயிர்ச்சுவட்டுஎரிபொருட்களின் தங்கிருக்கும் தன்மையை முதன்மைச்சக்திவிநியோகத்தின் 50% வீதத்திற்கு கீழானஒரு நிலைக்குக் குறைப்பதற்கும், 2015 ஆம் ஆண்டளவில் சகல முடிவுப் பாவனைகளிலும் நிலவிய 20% என்றளவான சக்திப் பாவனையை 2030 ஆம் ஆண்டளவில் குறிப்பாக குறைப்பதற்கும், இந்த சக்திக் கொள்கை பங்களிப்புச்செய்யும்.       காபன் சமநிலையை அடைவதில் இலங்கைக்கு இருக்கின்ற நோக்கத்தையும் மற்றும் 2050 ஆம் ஆண்டளவில் முழு சக்திப் பெறுமான சங்கிலிகளினதும் பரிவர்த்தனையின் தேவையையும் உணர்த்துவதற்கு, இந்த சக்திக் கொள்கை வழிவகுக்கும். ஐ.நா. இன் SDG குறிக்கோள்களின் 7-வது இலக்குக்கு அமைய அறிவு உற்பத்திகளையும், நிலைபெறுதகு சக்தித் தொழில்நுட்பங்களையும்  அபிவிருத்தி செய்வதன் மூலம், தென் பிராந்திய-தென் கூட்டுறவினூடாக,  அபிவிருத்தி அடைந்து வரும் ஏனைய நாடுகளுடனான எதிரிணை வாய்ந்த உறவுகளுக்கும், உள்நாட்டு சந்தைக்கும் நிலைபெறுதகு சக்தித் தொழில் நுட்பங்களை வழங்குகின்ற முக்கியமான உற்பத்தித் தொழிற்சாலைகளை தாபிப்பதற்கு தேவையான இடவசதிகளை ஏற்பாடு செய்வதற்கு இந்த சக்திக் கொள்கை துணையாக அமையும்.

இந்தக் கொள்கை ஆவணம்பின்வரும்மூன்றுபிரிவுகளைஉள்ளடங்கி இருக்கும்:

தேசிய சக்திக் கொள்கை: கொள்கை சட்டகத்தின் பத்துத் தூண்களையும் குறிக்கும்

செயற்படுத்தும் மூலோபாயங்கள் : கொள்கையை செயற்படுத்தல் தொடர்பான குறித்த மூலோபாயங்களை விவரித்தல்

முடிவுகள் விநியோக சட்டகம்: செயற்பாடுகள்மைல்கல்கள் மற்றும் பொறுப்புடைய நிறுவனங்கள் முதலிய விடயங்களை விவரித்தல்

அவ்வப்பொழுது வெளியிடப்பட்டுள்ள முன்னைய சகல கொள்கைகளையும்மூலோபாயங்களையும்திட்டங்களையும்வழிகாட்டல்களையும் இந்தக் கொள்கை மேலோங்கிநிற்கும். இந்தத் தேசிய சக்திக் கொள்கை மற்றும் செயற்படுத்தும் மூலோபாயங்கள்வெளிக்கள சூழலில் ஏற்படும் ஏதாவது பாரிய மாற்றங்களை கருத்திற்கொண்டுமீளாய்வுசெய்யப்படும் வரை செயல்வலுப்பெற்றிருக்கும். அத்தகைய கொள்கை மீளாய்வுகள் குறைந்த பட்சம்ஆறு ஆண்டுகளுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்படும். முடிவுகள் விநியோக சட்டகம் (தனித்தனியாக வெளியிடப்படும்) கொள்கை மற்றும் மூலோபாயங்கள் என்பவற்றுக்கு இணங்க, இரண்டு ஆண்டு இடைவெளிகளில் மீளாய்வுசெய்யப்படும்.

தேசிய சக்திக்கொள்கை

இலங்கையில் சமூக ரீதியான சமத்துவம் வாய்ந்த அபிவிருத்திற்கு உதவும் வகையில் பொருத்தமான, விலையில் மலிவான சக்தி சார்ந்த சேவைகளை வழங்கும் பொருட்டு தூய்மையான, பாதுகாப்பான, சிக்கனமான மற்றும் நம்பத்தகுந்த விநியோகங்களின் ஊடாக, சக்தி பாதுகாப்பை உறுதிசெய்தல் தேசிய சக்திக் கொள்கையின் அடிப்படை குறிக்கோளாகும். ஒவ்வொரு உப துறைக்கும் வெளியிடும் நிமித்தம் சட்டமுறையாக தேவைப்படுத்தும் 2009 ஆம் ஆண்டின்20 ஆம் இலக்க இலங்கை மின்சார சட்டத்தின் கீழ் தேவைப்படுத்தப்பட்டுள்ளவாறு மின்சார தொழில் துறை பற்றிய பொதுவான கொள்கை வழிகாட்டல்கள் போன்ற கொள்கை வழிகாட்டல்கள் தயாரிக்கப்பட்டு, இந்த தேசிய சக்திக் கொள்கையினது அடிப்படையில் வெளியிடப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றன.

பாதுகாப்பு, சமத்துவம் மற்றும் நிலைபெறுதகுதன்மை முதலிய பரிமாணங்களிலிருந்து வித்தியாசப்படும் கேள்விகளினூடாக தொழிற்பட்டு, இலங்கை இன்று இந்த மூன்று சக்திகளினதும் நெகிழ்தன்மை வாய்ந்த சமநிலையிலிருந்து நகர இருப்பதாக தென்படுகின்றது. ஆதலால்,முறையே மேம்பட்ட சமத்துவம், பாதுகாப்பு மற்றும் நிலைபெறுதகுதன்மை முதலிய அம்சங்களினூடாக சக்திகளை சமநிலைப்படுத்துவதற்கான முயற்சியில்சமூகத்திலும், பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் பரந்த பத்து தூண்களில்,தேசிய சக்திக் கொள்கை நிலைத்திருக்கின்றது.

  1. சக்தி பாதுகாப்பை உறுதிசெய்தல்
  2. சக்தி சார்ந்த சேவைகளுக்கு பிரவேசத்தை வழங்குதல்
  3. தேசிய பொருளாதாரத்திற்கு சக்தி சார்ந்த சேவைகளை அனுகூல செலவில் வழங்குதல்
  4. சக்தி வினைத்திறனையும் பாதுகாப்பையும் மேம்படுத்துதல்
  5. தற்சார்பை மேம்படுத்துதல்
  6. சுற்றாடலை பராமரித்தல்
  7. மீளப்புதுப்பிக்கத்தகு சக்தியின் பங்களிப்பை அதிகரித்தல்
  8. சக்தி துறையில் நல்லாட்சியை வலுப்படுத்துதல்
  9. எதிர்கால சக்தி உட்கட்டமைப்பு வசதிகளுக்கு காணிகளை பெற்றுக்கொள்ளல்
  10. புத்தாக்கத்திற்கும் தொழில்முனைவுக்கும்  வாய்ப்புகளை அளித்தல்

இந்த அணுகுமுறை கீழ்காணுமாறு வரைபு ரீதியாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

 
 

 

 

 

View the full document in PDF format