தொலைநோக்கு
“இலங்கையை ஆசியாவின் சக்திவலு கேந்திரமாக மாற்றுதல்”
பணிக்கூற்று
மின்சக்தி பிரிவு
தேசிய பொருளாதார சுபீட்சத்திற்காக தரமான, நம்பகமான, நிலைபேறான விலையைத் தாங்கக் கூடியவாறான மின்சார வழங்கலொன்றை உறுதி செய்தல்.
வலுசக்தி பிரிவு
“பொருத்தமான சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை அமுல்படுத்துவதன் ஊடாக சக்தி வளம் தொடர்பான கொள்கைகளை ஒழுங்கமைத்து சுற்றாடலுக்கு தீங்கு விளைவிக்காத நிலைபேறான சக்தி வழங்கலை உறுதிப்படுத்துதல் மற்றும் புதிய உள்நாட்டு சக்தி வளங்களை முன்பிருந்த சக்தி வளத்துடன் ஒருங்கிணைத்தல் மற்றும் இறக்குமதிகளை சிறந்த முறையில் முகாமைத்துவம் செய்தல் போன்றவற்றின் மூலம் குறைந்த விலையில் சக்தி வளங்களை கிடைக்கக்கூடிய வழிகளை ஏற்படுத்துவதன் மூலம் நாட்டின் சக்தி வளத் தேவையினை பூர்த்திசெய்தல்”
குறிக்கோள்கள்
- 2030ஆம் ஆண்டிற்குள்; மீள புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் 70மூ மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்
- மீள புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் அதிகபட்ச சாத்தியமான அபிவிருத்தியுடன்; 2025 ஆம் ஆண்டுடிற்குள் நாட்டின் மின்சார உற்பத்தித் திறனை தற்போதுள்ள 4,809 மெகாவாட்டிலிருந்து 7,629 மெகாவாட்டாக உயர்த்துதல்;
- பரிமாற்றல் வலைப்பின்னலை விருத்தி செய்தல்
- 2025 ஆம் ஆண்டிற்குள் 799 கிமீ முதல் 1,300 கிமீ வரையான 220 மஏ வலைப்பின்னல்
- 2025 ஆம் ஆண்டிற்குள் 2,361 கிமீ முதல் 3,000 கிமீ வரையான 132 மஏ வலைப்பின்னல்
- தரமான சேவையை வழங்குதற்கும் மற்றும் முழுமையாக உள்நாட்டு மின்சாரத் தேவையை பூhத்திசெய்வதற்குமான மின்சார விநியோக வலைப்பின்னலை விருத்தி செய்தல்
- 2025 ஆம் ஆண்டிற்குள் தொழில்நுட்ப மற்றும் வணிக முறையின் இழப்புகளை 9மூ இலிருந்து 8மூ ஆக குறைத்தல்
- உள்நாட்டில் மின்சார உபகரணங்களை உற்பத்தி செய்வதை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் மின்சார அமைப்பை தன்னியக்க வலைப்பின்னலாக(ளஅயசவ பசனை) ஆக மாற்றுதல்
- எரிபொருள் வழங்கற் சங்கிலி ஊடாக அதன் தரத்தினையும் நம்பகத் தன்மையினையும் உறுதிப்படுத்துதல்.
- பெற்றோலியப் பொருட்களை வினைத்திறனுடனும் செயற்திறனுடனும் பயன்படுத்துவதை ஊக்குவித்தல்.
- எரிபொருளை வினைத்திறனுடனும் செயற்திறனுடனும் பாதுகாப்பபான முறையில் களஞ்சியப்படுத்துவதினை உறுதி செய்வதோடு அதனை நாடு முழுவதிற்கும் விநியோகித்தல்.
- 2030ஆம் ஆண்டாகும் போது உள்நாட்டு எண்ணெய் மற்றும் இயற்கை வாயு உற்பத்தியை உச்சப்படுத்தி இலங்கையை சக்தி வளத் துறையில் தன்னிறைவடைந்த நாடாக மாற்றுதல்.
- 2050ஆம் ஆண்டாகும் போது காபன் அற்ற நாடாக பங்களிப்பு வழங்கும் முன்னணி நாடாக இலங்கையை மாற்றுதல்
- தரம்மிக்க நவீன மின்சார உபகரணங்கள் மற்றும் பசுமை எண்ணக்கருக்களை அமுல்படுத்துவதன் மூலம் வினைத்திறனுடன் மின்சாரத்தை நுகருவதற்கு ஊக்குவித்தல்
பிரதான நிறுவனங்கள்
மின்சக்தி பிரிவு
- இலங்கை மின்சார சபை
- வரையறுக்கப்பட்ட லங்கா மின்சார தனியார் கம்பனி (LECO)
- எல் ரி எல் ஹோல்டிங் (பிரைவேட்) லிமிட்டெட்
- இலங்கை நிலைபெறுதகு வலுசக்தி அதிகார சபை (SLSEA)
- இலங்கை அணுசக்தி சபை
- இலங்கை அணுசக்தி ஒழுங்கமைப்புப் பேரவை
- வரையறுக்கப்பட்ட(தனியார்) இலங்கை நிலக்கரி கம்பனி
- வரையறுக்கப்பட்ட(தனியார்) ஸ்ரீ லங்கா எனர்ஜீஸ் கம்பனி
வலுசக்தி பிரிவு
- இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தாபனம்
- வரையறுக்கப்பட்ட இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையம்
- இலங்கை பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை
- வரையறுக்கப்பட்ட திருகோணமலை பெற்றோலிய முனையம்
அமைச்சின் பிரிவுகள்
- நிர்வாகப் பிரிவு
- அபிவிருத்திப் பிரிவு
- கொள்கை, தொழிநுட்பம் மற்றும் ஆராய்ச்சி பிரிவு
- உற்பத்தி, பரிமாற்றல் மற்றும் விநியோக பிரிவு
- திட்டமிடல் பிரிவு
- பெறுகைப் பிரிவு
- நிதிப் பிரிவு
- உள்ளகக் கணக்காய்வுப் பிரிவு