வளமான ஓர் இலங்கையை கட்டியெழுப்பும் உன்னத கருமத்தின் அத்திவாரம் யாதெனில் திருப்தியான ஒரு மக்கள் சமூகத்தை உருவாக்குவதாகும். அதற்கான செயல்நடவடிக்கையின் பிரதான அங்கமாக மக்களுக்கு மின்சாரத்தை விநியோகிப்பதை குறிப்பிடலாம். அத்தகைய பாரிய பொறுப்பை ஏற்பதற்கு பொருத்தமான ஒருவனாக தேர்ந்தெடுக்கப்பட்டதையிட்டு நான் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன்.

மனிதனின் அனைத்து வகையான தேவைகளுக்கும் அடிப்படையாக அமைவது  மின்சாரமாகும். மனிதன் தொழில்நுட்ப ரீதியில் அடைந்துள்ள முன்னேற்றத்தையடுத்து நவீன உலகத்தில் அவனுக்கு மின்சாரம் இன்றியமையாத ஒரு தேவையாக மாறியுள்ளது. அத்தகைய ஒரு பாரிய தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு தொடர்ச்சியாக தரத்தில் உயர்ந்த மின்சாரத்தை விநியோகிக்க வேண்டும். அத்தகைய தேவையைப் பூர்த்தி செய்வது, விடயப் பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் எனக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பும் கடமையும்.

முழு நாட்டிற்கும் மின்சாரத்தை விநியோகிக்கும் கரும பணியை தொடர்ச்சியாகவும், உரிய காலத்திற்கும், உரிய முறையிலும் நிறைவேற்றும் பொருட்டு என்னுடன் இணைந்திருக்கின்ற மின்வலு சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சு, இலங்கை மின்சார சபை, இலங்கை தனியார் மின்சார கம்பனி, இலங்கை நிலைபெறுதகு வலு அதிகார சபை போன்ற நிறுவனங்களின் ஊழியர்கள் நட்புரீதியான பங்களிப்பை நல்க வேண்டும்.

நுகர்வோருக்கு சுமையை ஏற்படுத்தாத வகையில், அவர்களின் நாளாந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கும், சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில்களை உரிய முறையில் நிருவகித்துச்சென்று பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கும், முழு நாடும் உள்ளடங்கும் வகையில் மின்சாரத்தை விநியோகிக்கும் பொருட்டு இரவு பகல் பாராது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு, விடயப் பொறுப்பு அமைச்சர் என்ற ரீதியில் அந்த பொறுப்புப்பணியை நான் சரிவர நிறைவேற்றி வருகின்றேன் என்பதில் எனக்கு நம்பிக்கையுண்டு.

மின்வலு சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்திருக்கின்ற நிறுவனங்களினால் இலங்கை வாழ் மின்சார நுகர்வோருக்காக வழங்கப்படும் இந்த உன்னத சேவை பற்றி பொது மக்கள் உரிய முறையில் அறிந்துகொள்ள வேண்டும். அதே போன்று, தமக்குரிய நிறுவனங்களிலிருந்து பெற்றுக் கொள்ளக் கூடிய வசதிகளும் சேவைகளும் பற்றியும் நுகர்வோர் அறிந்திருப்பது அவசியமாகும்.

அதன் நிமித்தம் ஆரம்பிக்கப்பட்டுள்ள மின்வலு சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் இணையத்தளத்தை பயன்படுத்துவது மக்களுக்கு மிகவும் இன்றியமையாதாகும்.  தொழில் நுட்பம் இன்று முழு உலகத்தையும் ஒரு தனி வட்டமாக மாற்றி முன்னேற்றத்தின் உச்சகட்டத்தை அடைந்துள்ளது. இந்தத் தொழில் நுட்பத்திலிருந்து உச்ச பயனை அடையுமாறும், அந்தத் தொழில் நுட்பத்தினூடாக எனது அமைச்சினால் வழங்கப்படும் சேவைகள் பற்றி அறிந்து கொள்ளுமாறும், பெற்றுக் கொள்ளக் கூடிய நன்மைகளை பெற்றுக் கொள்ளுமாறும் எனது அன்பார்ந்த நுகர்வோரிடம் கேட்டுக் கொள்கின்றேன்.

கௌரவ ரவி கருணாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் தொழில் மேம்பாட்டு அமைச்சர்