main10pic1

சக்தி உற்பத்தித் துறைக்கான நுழைவின் பயனாக, இந்தக் கம்பனி தென் கிழக்காசியப் பிராந்தியத்தில் முதன்மையான ஒரு சுயாதீன சக்தி உற்பத்தி அமைப்பாக மாறியுள்ளது. இந்த நடபடிக்கையில், கம்பனி பொறியியல், கொள்வனவு, நிர்மாணம், மின்னுற்பத்திப் பொறித் தொகுதிகளின் இயக்கப் பராமரிப்பு போன்ற விடயங்களில் தேர்ச்சியையும் அனுபவத்தையும் பெற்றுள்ளது. இன்று, லங்கா ட்ரான்ஸ்போfமர்ஸ் லிமிற்றட் (LTL) உலக நியமங்களைத் திருப்திப்படுத்தி பல மின்னுற்பத்திப் பொறித்தொகுதிகளைப் பராமரித்து வருகின்றது. கம்பனி நிர்மாணித்து பராமரித்து வரும் மிக நவீன மின்னுற்பத்திப் பொறித்தொகுதி யாதெனில் 300 மெ.வொ கொள்திறனுடைய இணைந்த சுழற்சி மின் பொறித்தொகுதியாகும். இது, கன எரி எண்ணெய்யில் தற்பொழுது இயங்கி வரும் பல எரிபொருள் கொள்திறனுடைய ஒரு மின்னுற்பத்திப் பொறித்தொகுதியாகும்.

2009 ஆம் ஆண்டின் புள்ளிவிபரங்களைக் கருத்திற்கொள்ளும் போது, தற்பொழுது இந்த LTL 424 மெ.வொ அனல் சக்தி உற்பத்திக் கொள்திறனைக் கொண்டுள்ளது. சுயாதீன சக்தி உற்பத்தி அமைப்புகளின் மூலம் இந்த LTL நிறுவனம் மொத்த அனல் சக்தி உற்பத்தியில் 25% வீதமான சக்தியை விநியோகித்துள்ளது.

நிர்மாணிக்கப்பட்ட மின்னுற்பத்திப் பொறித்தொகுதியில் கிடைக்கக்கூடிய மிக நவீன தொழில் நுட்பங்களின் பயன்பாடு, ஆகக்குறைந்த சாத்தியமான ஆகுசெலவில் அதிகளவான வினைத் திறன்களையும் மின்சார விநியோகத்தையும் அடைய இயலச் செய்துள்ளது.

thum1 thum2 thum3