ஜப்பானின் மிகச் சிறந்த உயர் சக்திச் சேமிப்பு ஆற்றல்களையும் தொழில் நுட்பங்களையும் பயன் படுத்தி சக்தி வினைத் திறனை மேம் படுத்துவதன் மூலம் சக்தி நுகர்வில் அதிக வினைத் திறனை அடைவது “இலங்கையில் சக்தி வினைத் திறன் மேம்பாட்டு ஊக்குவிப்பு” என்ற இந்தக் கருத் திட்டத்தின் முழு மொத்தக் குறிக்கோளாகும்.
2017 ஆம் ஆண்டளவில் ஆரம்ப சக்திப் பரிமாணத்தை 500 TOE/SDR (மில்லியன்) இற்குக் குறையும் வகையில் குறைப்பது இதன் இலக்காகும்.
- உபகரணங்களுக்கான ஊக்குவிப்பு / ஊக்குவிப்பு சாராத திட்டங்களைத் தயாரித்தல்
- விழிப்புணர்வை ஏற்படுத்தும் பிரசார நடவடிக்கைகளை மேற் கொள்ளுதல்
பிரதான செயற்பாடுகளாவன:
- சக்தி வினைத் திறன் மேம்பாட்டு நிகழ்ச்சித் திட்டங்களுக்கான 10 ஆண்டுத் திட்டத்தைத் தயாரித்தல்
- தேர்ந்தெடுக்கப்பட்ட கைத் தொழில்களுக்கான சக்தி நுகர்வு நியமங்களைத் தயாரித்து இற்றைப் படுத்துதல்
- சக்திக் கணக்கெடுப்பாளர்களுக்கும் சக்தி முகாமையாளர்களுக்குமான உத்தியோகபூர்வ அனுமதி வழங்கல் திட்டங்களை அறிமுகப் படுத்துதல்
- உபகரணங்களுக்கான கட்டாய முத்திரையிடல் திட்டத்தை அறிமுகப் படுத்துதல்
- சக்தி நுகர்வுத் தரவுகளைக் கண்காணித்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல் ஆகியன தொடர்பான ததொநு உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல்
- இநிவஅ சபையின் ஏற்கனவே அமைந்திருக்கின்ற உபகரணங்கள் களஞ்சியகத்தை விஸ்தரித்தல்
- சக்தி வினைத் திறன் சார்ந்த முதலீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு நிதித் திட்டங்களைத் தயாரித் தலும் அவற்றை மேம் படுத்துதலும்
- தேசிய சக்தி முகாமையாளர் சான்றிதழ் பயிற்சி
சக்தி முகாமைத்துவம் பற்றிய வழிகாட்டி
இலங்கை நிலை பெறுதகு வலு அதிகார சபை (இநிவஅச) நாட்டிற்கான சக்தி முகாமையாளர் சான்றிதழ் திட்டத்தை அறிமுகப் படுத்தும் பொருட்டு இந்த வழிகாட்டல் ஆவணத் தயாரிப்பை முன்னெடுத்துள்ளது. இதனை இநிவஅச சக்தி முகாமையாளர் சான்றிதழ் பரீட்சைகளுக்கான குறிப்பு சாதனமாகப் பயன் படுத்தியுள்ளது.
சக்தி முகாமைத்துவ வழிகாட்டலுக்கான கீழிறக்கம்