இலங்கையிலுள்ள சக்தி வினைத் திறன் வாய்ந்த கட்டிடங்களுக்கான செயன்முறை விதிக்கோவை
கட்டிடங்களின் தொழிற் பாடு, மற்றும்/குடியிருப்பாளர்களின் சுகாதாரம் மற்றும் சௌகரிகம் ஆகிய கருமங்களுக்கு அழுத்தமின்றி ஆகக் குறைந்த சக்தி நுகர்வின் கீழ் மேற் கொள்ளப்பட வேண்டிய வடிவமைப்பு, நிர்மாணம் மற்றும் பராமரிப்பு ஆகியவற்றை இயலச் செய்வதற்கான வர்த்தகக் கட்டிடங்கள், கைத் தொழில் வசதிகள் மற்றும் பாரியளவான வீடமைப்புத் திட்டங்கள் என்பன தொடர்பான சக்தி வினைத் திறன் திட்டத்தை மற்றும் / அல்லது வடிவமைப்புகளை அறிமுகப் படுத்துதல். வர்த்தகக் கட்டிடங்களில் காணப் படும் திட்டத்தில் அல்லது வடிவமைப்புகளிலுள்ள சக்தி வினைத் திறனுக்கான தகவு திறன்களையும் ஆகக் குறைந்த நியமங்களையும் விதித்தலும் இணக்கப்பாட்டை நிர்ணயிப்பதற்கான தகவு திறன்களை ஏற்பாடு செய்து வழங்குதலும். ஆகக் குறைந்த நியமங்களை விஞ்சி சக்தி வினைத் திறன் திட்டங்களை ஊக்குவித்தல்.