CFL மின்குமிழ் நியமப்படுத்தல்
இலங்கையிலுள்ள கம்பக்ட் ப்ளரஷன்ட் மின்குமிழ்கள் தொடர்பான நியமங்கள் மற்றும் முத்திரையிடல் பற்றிய நிகழ்ச்சித் திட்டம்
மின்சார உபகரணங்களும் சக்தி வினைத் திறனும்
வீட்டு மின் உபகரணங்களும் அலுவலக உபகரணங்களும் இலங்கையில் மின்சாரப் பாவனையில் 25% வீத மின்சாரத்தை நுகர்கின்றன. இந்த வீட்டு மற்றும் அலுவலகத் துறை சார்ந்த உபகரணங்கள் தான் போக்கு வரத்துத் துறைக்கு அடுத்ததாக சக்தி நுகர்வுத் துறையில் துரிதமாக வளர்ந்து வரும் இரண்டாவது துறையாக விளங்குகின்றது. 2007 ஆம் ஆண்டில் ஆகக் கூடிய விகித மின்சார நுகர்வு அதாவது 38.9% வீத மின்சாரம் வீட்டுத் துறையிலிருந்து பதிவாகியிருக்கின்றது. (மூலம்: இலங்கைச் சக்திச் சமநிலை–2007). இங்கு வீட்டுத் துறையில் காணப் படும் ஒளியேற்றல் மின்சாரப் பளு மிக முக்கியமானதாகும். பிரதானமாக வீடுகளின் நிகழும் அதிகமான ஒளியேற்றல் மின்சாரப் பளுக்கள் காரணத்தினால் நாளின் உச்ச மின்சாரத் (பி.ப 7:00 மணிக்கும் பி.ப 9:00 மணிக்கும் இடையில்) தேவை எழுவதாக அவதானிக்கப் படுகின்றது. அதிக சக்தி வினைத் திறனைப் பரம்பல் உபகரணங்கள் குறை சக்தி வினைத் திறனைக் கட்டுப் படுத்துகின்றது. அதே நேரம் இது ஒரு சக்தித் தீர்வாகவும் கருதப் படுகின்றது.
சக்திச் செயலாற்றுகை நியமங்களும் CFL மின்குமிழ்கள் சக்தி முத்திரையிடலும்
உற்பத்திப் பொருளில் ஆகக் குறைந்த சக்திச் செயலாற்றுகை நியமங்கள் குறிப்பீடு செய்யப் படுதலும் அதில் சக்தி முத்திரையிடப் படுதலும் வேண்டும் எனும் 2009 ஆம் ஆண்டு யூலை மாதம் 22 ஆம் திகதிய 1611/10 ஆம் இலக்க அரசாங்க வர்த்தகமானி அறிவித்தல் பிரசுரிக்கப் பட்டது.
குறித்த வர்த்தமானி அறிவித்தலின் கீழான முக்கிய தேவைப்பாடுகள் பின்வருமாறு:
- குறிப்பீடு செய்யப்பட்ட ஆகக் குறைந்த செயலாற்றுகை நியமத்தை அனுசரிக்காத CFL மின் குமிழ்களின் உற்பத்தி, இற்குமதி மற்றும் விற்பனை ஆகியவற்றுக்கான தடை
- உள்நாட்டுச் சந்தையிலுள்ள CFL மின்குமிழ் ஒவ்வொன்றின் மீதும் சக்தி முத்திரை பொறிக்கப் பட்டிருத்தல்
ஆங்கில மொழி அரசாங்க வர்த்தமானி அறிவித்தல்களுக்கான கீழிறக்கங்கள்
சிங்கள மொழி அரசாங்க வர்த்தமானி அறிவித்தல்களுக்கான கீழிறக்கங்கள்
உற்பத்தியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ஆகியோருக்கானதும் முகவர் நிலையங்களுக்கானதுமான வழிகாட்டல்களுக்கும் நடைமுறைகளுக்குமான கீழிறக்கங்கள்
சக்திச் செயலாற்றுகைக்கான நியமக் குறிப்பு: SLS1225
செயலாற்றுகைத் தரப் படுத்தல்
செயலாற்றுகைத் தரப்படுத்தல் என்பது CFL மின்குமிழ்களின் சக்திச் செயலாற்றுகையை மதிப்பிடுவதற்கான ஒரு சுட்டியாகும். மின்குமிழின் பயன்பாடு, சக்திக் காரணி மற்றும் நிற வெப்பநிலை ஒருங்கிசைவு ஆகியன இந்தச் செயலாற்றுகைத் தரப் படுத்தலில் அடங்குகின்றன. அதே நேரம் மின்குமிழ் பயன்பாடு 90% செயலாற்றுகைத் தரப் படுத்தலுக்குப் பங்களிப்புச் செய்கின்றது.
சக்திக் கணிப்பீடு
செயலாற்றுகைத் தரப்படுத்தலுக்கான மதிப்பீட்டு அடிப்படையில் நட்சத்திரக் கணிப்பீட்டு அடையாளங்கள் குறித்தொதுக்கப் படுகின்றன. அதிகளவான நட்சத்திர அடையாளங்களை உடைய CFL மின்குமிழ்கள் அதிக சக்தி வினைத் திறன் வாய்ந்தனவாகும்.
சக்தி முத்திரையிடல்
நட்சத்திரக் கணிப்பீட்டு அடையாளங்கள் தவிர சக்தி முத்திரையிடல் நடபடிக்கையில் கீழ்காணும் விடயங்களும் கிடைக்கக் கூடியனவாக உள்ளன.
- உற்பத்தியாளர் பெறுமானம் குறித்த உபகரணத்தின் கணிக்கப்பட்ட சக்தி (வொட்களில்)
- ஒரு ஆய்வு கூடப் பரிசோதனை மேற் கொள்ளப் பட்டதன் பின்னர் உபகரணத்தின் உண்மையான சக்தி நுகர்வு (வொட்களில்)
- உண்மையான சக்தி நுகர்வின் அடிப்படையில் மாதம் ஒன்றுக்கான சக்தி நுகர்வு நாள் ஒன்றுக்கான 4 மணித்தியால இயக்கத்தைக் கருத்திற் கொண்டு)
- மாதிரி இலக்கம்
- வர்த்தகக் குறியீடு
Energy Labeling and guidelines for CFL
< ![endif]–>
CFL மின்குமிழ்களுக்கான சக்தி முத்திரையிடலும் வழிகாட்டல்களும்SLS: 1225 என்ற நியமத்தின் கீழான கம்பக்ட் ப்ளரஷன்ட் மின்குமிழ்களுக்கா ஏனைய தேவைப்பாடுகள்
எதிர்காலச் செயற்பாடுகள்
சக்திச் செயலாற்றுகை நியமங்கள் தயாரிக்கப்படும் உபகரணங்கள்
·கூரை மின்விசிறிகள்
·வீட்டுக் குளிர்சாதனப் பெட்டிகள்
·பலாஸ்ட்டுக்கள் – சமபடுத்திகள்
·லைனியர் ப்ளரஷன்ட் மின்குமிழ்கள்
·தூண்டும் மோட்டார்கள்
·அறைகளுக்கான குளிரூட்டிகள்
CFL மின்குமிழ்களுக்கான சக்தி முத்திரையிடலும் வழிகாட்டல்களும்SLS: 1225 என்ற நியமத்தின் கீழான கம்பக்ட் ப்ளரஷன்ட் மின்குமிழ்களுக்கா ஏனைய தேவைப்பாடுகள்
எதிர்காலச் செயற்பாடுகள்
சக்திச் செயலாற்றுகை நியமங்கள் தயாரிக்கப்படும் உபகரணங்கள்
·கூரை மின்விசிறிகள்
·வீட்டுக் குளிர்சாதனப் பெட்டிகள்
·பலாஸ்ட்டுக்கள் – சமபடுத்திகள்
·லைனியர் ப்ளரஷன்ட் மின்குமிழ்கள்
·தூண்டும் மோட்டார்கள்
·அறைகளுக்கான குளிரூட்டிகள்