slsea_logo எமது தூரநோக்கு

இலங்கையை ஓர் சக்திப் பாதுகாப்பு வாய்ந்ததாகத் திகழ வைப்பது எமது தூரநோக்காகும்

எமது செயற்பணி

நிலை பெறுதகு தன்மை வாய்ந்த சிறந்த செயன் முறைகளைத் தழுவி இயற்கை வளங்களையும், மனித வளங்களையும் மற்றும் பொருளாதார வளங்களையும் பாதுகாத்து சக்திப் பாதுகாப்பை அடையும் பொருட்டு இலங்கைக்கு வழிசமைத்து தேசிய அபிவிருத்திப் பயணத்தில் ஆராய்ச்சி, வசதி, ஆய்வு மற்றும் அபிவிருத்தி இன்னும் அறிவு முகாமைத்துவம் என்பவற்றின் ஊடாக சுதேசிய சக்தி வளங்களையும் ஏனைய சக்தி வளங்களையும் பாதுகாத்து அபிவிருத்தி செய்வதற்கான நாட்டின் அனைத்து வகை முயற்சிகளுக்கும் வழி காட்டுவது எமது செயற்பணியாகும்

இநிவஅச ஆரம்பம்

இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடிரசுப் பாராளுமன்றத்தினது 2007 இன் 35 ஆம் இலக்க இலங்கை நிலை பெறுதகு வலு அதிகார சபைச் (E-நூலக உப-வகுதிச் சட்டங்களுக்கான தொடர்புடைய) சட்டம் சட்டமாக்கப் பட்டதைத் தொடர்ந்து இந்த இலங்கை நிலை பெறுதகு வலு அதிகார சபை 2007 ஆம் ஆண்டு ஒற்றோபர் மாதம் 01 ஆம் திகதி தாபிக்கப் பட்டது. சக்தி உற்பத்தி மற்றும் சக்திப் பயன்பாடு ஆகியவற்றில் புதிய ஒரு நிலை பெறுதகு மட்டத்தை நோக்கி இலங்கையை நகரச் செய்யும் வகையில் இந்த அதிகார சபை ஓர் உன்னத உயர் நிறுவனமாக விளங்குவதன் அவசியத்தையும், அதன் ஊடாக நாட்டினுள் சுதேசிய சக்தி வளங்களை அதிகரித்து சக்தி வினைத் திறனை மேம்படுத்துவதன் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் பொருட்டு இந்த இலங்கை நிலை பெறுதகு வலு அதிகார சபை தாபிக்கப் பட்டது