பலநோக்கு கம்மா இரேடியேஷன் வசதி (MGIF)
ஏற்றுமதி நடபடிக்கை வலயத்தில் (ஏநவ) அதாவது பியகமவில் 2011 ஆம் ஆண்டு ஒரு வர்த்தக அளவிலான பலநோக்கு கம்மா இரேடியேஷன் வசதி (MGIF) தொழிற்படும். மதிப்பிடப் பட்ட கருத் திட்ட ஆகுசெலவு 608 மில்லியன் ரூபாவாகும். இந்தக் கருத் திட்டத்திற்கு மஹிந்த சிந்தனை திருப்புமுனை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கை அரசாங்கம் நிதியிடும். இந்த வசதியானது ஏற்றுமதிச் சந்தைக்கான வாசனைத்திரவியங்கள் மற்றும் மருத்துவப் பொருட்கள் முதலியவற்றின் தொற்றுநீக்கலுக்கு உதவியாக அமைகின்றது.
![]() |
தொற்றுநீக்கப்பட்ட கதிரியியக்க மருத்துவப் பொருட்கள் |
எக்ஸ்ரே – ப்ளரஷன்ஸ் நுட்பம் (XRF)
இந்த நுட்பமானது உலோகங்களிலுள்ள உலோகச் சேர்வுப் பதார்த்தங்களின் தரமான மற்றும் கணியப் பகுப்பாய்வை மேற் கொள்ள உதவும். XRF பரிசோதனை வசதிக்காக ISO/IEC 17025 ஐ அனுசரிக்கின்ற தர முறைமையும் தாபிக்கப் பட்டது.
![]() |
![]() |
ஒரு காஸ்டிங்கிலுள்ள (டாப்) உலோகச் சேர்வுப் பதார்த்தங்களை நிர்ணயித்தல் |
- காஸ்டிங் மாதிரி வீச்சு
- XRF நுட்பத்தின் அனுகூலங்கள்
- ஒரு தெளிவான நுட்பம்
- பல கூறுப் பகுப்பாய்வு நுட்பம்
- ஒத்தீட்டளவிலான குறை ஆகுசெலவு
- ஆகக்குறைந்த பகுப்பாய்வுக் காலம்