கதிரியியக்கத்துடன் சம்பந்தப்பட்டுத் தொழில்புரியும் தொழிலாளர்களைக் கண்காணித்தும், கதிரியியக்க மூல வளங்க ளையும் ரேடியோயிஸோடோப்பையும் பயன்படுத்துகின்ற (எக்ஸ்ரே வசதிகள் உள்ளிட்ட) வளாகங்கள் தொடர்பில் வழ மையான சோதனைகளை மேற் கொள்ளுவதன் மூலம் பாதுகாப்பு நியமங்களை அடையும் பொருட்டு அரச மற்றும் தனியார் துறை நிறுவனங்களுக்கு கதிரியியக்கப் பாதுகாப்பு சார்ந்த சேவைகளை இந்த பஅச வழங்கியும் வருகின்றது. இது தவிர, அதிகளவில் கதிரியக்கத் தாக்கத்திற்கு ஆளாகுவதிலிருந்து பொது மக்களைப் பாதுகாக்கும் முகமாக ஏற்று / இறக்குமதி உணவுப் பொருள் மாதிரி தொடர்பான பரிசோதனை மற்றும் சான்றுபடுத்தல் விடயத்தையும் இது மேற் கொள்ளுகின்றது.

image
ஒரு வைத்தியசாலையில் பணியாற்றும் கதியியக்கப் பாதுகாப்பு ஊழியர்கள்