இலங்கைப் பராமணுசக்தி அதிகார சபை (பஅச) மின்வலு சக்தி அமைச்சின் செயல் நோக்கின் கீழ் வரும் ஒரு நியதிச்சட்ட சபையாகும். இந்த அதிகார சபை 1969 இன் 19 ஆம் இலக்க பரமாணுசக்தி அதிகார சபைச் சட்டத் தினால் தாபிக்கப் பட்டது. இந்த பரமாணுசக்தி அதிகார சபை, இலங்கையில் மருத்துவ, விவசாய, கைத் தொழில் மற்றும் சுற்றாடல் ஆகிய துறைகளின் அபிவிருத்திற்கு கணிசமான பங்களிப்பை நல்கக் கூடிய அதிக கதிரியியக்க மற்றும் ரேடியோயிஸோடோப் தொழில்நுட்பப் பிரயோகங்களைக் கொண்டு ள்ளது. மேற்குறித்த துறைகளிலுள்ள இந்தத் தொழில் நுட்பப் பயன் பாட்டை இலகுபடுத்தி ஏற்பாடு செய்து வழங்கும் பொறுப்பையும் சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப் பட்ட பாதுகாப்பான நியமங்களுக்கு இணங்க கதிரியியக்கம் மற்றும் ரேடியோயிஸோடோப் ஆகியவற்றின் அனைத்து வகைப் பாவனைகளையும் உத்தரவாதப் படுத்தும் பொறுப் பையும் இந்த பஅச கொண்டுள்ளது
தூரநோக்கு Vision
பாதுகாப்புக்கு உரிய கவனத்தைச் செலுத்தி அமைதி வாய்ந்த அணுசக்திப் பிரயோகங்களுடன் சம்பந்தப் பட்ட செயற் பாடுகள் தொடர்பில் தேசிய பொருத்தப்பாடு மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றின் மீது அழுத்தமுடைய மிகச்சிறந்த ஒரு நிலையமாக விளங்குவது இந்த பசஅ சபையின் தூரநோக்காகும்.
செயற்பணி Mission
நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில், ஆகுசெலவு பயன்மிகுந்த ஒரு விதத்தில் தரத்திற்கும் கணியத்திற்குமான குறிப்புடன் தனது ஆகக்கூடிய உள்ளாற்றலில் அணு சக்தித் தொழில் நுட்பப் பயன்பாட்டை இலகு படுத்துவதும்,
சாத்தியமான அயன் மயமாகும் கதிரியியக்கத்தின் தீங்குகளிலிருந்து தொழிலாளர்களையும், பொது மக்களையும் சூழலையும் பாதுகாத்து உத்தரவாதமளிக்கும் பொருட்டு, கதிரியியக்கப் பாதுகாப்பு மீதான சர்வதேச நியமங்களை அனுசரித்து ஒரு ஒழுங்குறுத்துகை நிகழ்ச்சித் திட்டத்தைச் செயற்படுத்துவதும் எமது செயற்பணியாகும்.