JICA கருத்திட்டக் குழு மூலப் பிரேரணை ஒன்றுக்கான குறிப்பைக் கொண்டு, சராசரியாக 90 அலகுகளுக்குக் குறைந்த மின்சாரத்தை நுகர்கின்ற லெகோ மின்சார வாடிக்கையாளர்களுக்கு மத்தியில் 2,000 CFL மின்குமிழ்களைப் பகிர்ந் தளிக்கும் முன்னெடுப்பு நடபடிக்கையின் கீழ் கெசல்வத்தைப் பகுதியில் CFL மின்குமிழ் முன்னோடிக் கருத் திட்டத்தை லெகோ செயற்படுத்தியது.
வாடிக்கையாளர் தேவை கருதல், சக்திச் சேமிப்புச் சாத்தியம் பற்றிய பகுப்பாய்வு ஆகியவற்றை இனம் காணுவதும் செயற்பாட்டிலுள்ள இடையூறுகளை இனம் காணுவதும் இந்த CFL முன்னோடிக் கருத் திட்டத்தின் இலக்காகும். இந்தக் கருத் திட்டம் பாரிய கருத் திட்டமாக நகரும் நேரத்தில் இந்த அனைத்து வகையான தகல்களும் மிகவும் முக்கியமானதாக அமை யும்.