leco_logo லங்கா இலெக்ட்ரிசிற்றிக் கம்பனியானது மின்சாரப் பகிர்ந்தளிப்புக்காக 17 ஆம் இலக்க இலங்கைக் கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு பெற்ற வரை யறுக்கப் பட்ட ஒரு தனியார் பொறுப்புக் கம்பனியாகும். இமிச, நஅஅச, அரசாங்கத் திறைசேரி மற்றும் நான்கு உள்ளூர் அதிகார சபைகள் (உஅச) ஆகியன இந்த லெகோ நிறுவனத்தின் இன்றைய பங்குதாரர்கள் ஆகும். வலையமைப்பு மேம்பாடுகள் தொடர்பில் நிதியீட்டைக் ஈர்ப்பதிலுள்ள சவாலை அடையும் தனது தனித்துவமான ஆற்றல், இந்த லெகோ கம்பனி வெற்றிகரமான ஒரு வர்த்தக ஸ்தாபனமாக விளங்குவதற்குக் காரணமாக அமைந்தது. லெகோ, ஆசிய அபிவிருத்தி வங்கியினால் (ஆஅவ) வாக்குறுதியளிக்கப் பட்ட நிதி உதவியைக் கொண்டு தன்னை குறுகிய ஒரு காலப் பகுதியினுள் வினைத் திறன் வாய்ந்த இலாபம் ஈட்டும் ஒரு வலையமைப்புக்கான தொழில் நுட்ப ரீதியில் இயங்கிய ஒரு வலையமைப்பு ஆதனமாக மாற்றிக் கொண்டது.

லெகோ 1984 ஆம் ஆண்டில் 12,000 நுகர்வோருக்கு மின்சாரத்தை வழங்கும் முகமாக கோட்டை நகர சபையிலிருந்து மின்சாரப் பகிர்ந்தளிப்பு முறைமைகளைப் பொறுப்பேற்றன் மூலம் தனது செயற் பாடுகளை ஆரம்பித்தது.

87% வீதமான உள்நாட்டு நுகர்வோரில் 46,000 வாடிக்கையாளர்களுக்கு நாம் மின்சாரத்தை விநியோகித்து வருகின் றோம். வர்த்தக மற்றும் கைத் தொழில் சார்ந்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 12% வீதம் ஆகும் என்பதுடன் நம்பகரமான வாடிக்கையாளர்கள் எஞ்சிய 1% வீதம் ஆகும். விற்பனை செய்யப் படுகின்ற மின்சாரத்தில் 44% மற்றும் 53% வீதமான மின்சாரம் முறையே வீட்டு மின்சார நுகர்வோரினாலும் வர்த்தக மற்றும் கைத் தொழில் நுகர் வோரினாலும் நுகரப் படுமாயின் எமது சக்திக் கொள்வனவு இணையங்களிலுள்ள 369 மெ.வொ நிலையான சக்திக் கொள்திறனைக் கொண்டு ஏறக் குறைய மொத்தம் 1000 ஜிவொ சக்தி விற்பனையாகும். எஞ்சிய 3% வீத மின்சாரத்தில் 1% வீத மின்சாரம் சமய வழிபாட்டு ஸ்தல வாடிக்கையாளர்களினால் நுகரப் படுவதுடன் 2% வீத மின்சாரம் வீதி மின்விளக்குகளுக்காகவும் நுகரப் படுகின்றது. 50% லெகோ வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு 150kWh இற்குக் குறைவான மின்சாரத்தையும், அதே நேரம் 10% வீதமான வாடிக்கையாளர்கள் மாதம் ஒன்றுக்கு 600kWh இற்குக் குறைந்த மின்சாரத்தையும், 90% வீதமான வாடிக்கையாளர்கள் 100kWh குறைவான மின்சாரத்தையும் நுகர்கின்றனர். எமது மின்சார வலையமைப்பினது மின்சாரப்பளு பகல் உச்ச நேரத்தில் ஏறக் குறைய 280 மெ.வொ மின்சாரமும் இரவு நேரத்தில் ஏறக் குறைய 300 மெ.வொ மின்சாரமும் என்ற அளவில் பயன்டுத்தப்படுகின்றது.

எமது தூரநோக்கு Our Vision

சுற்றாடல் நேய நவீன வியாபார நடவடிக்கையின் ஊடாக மக்களின் வாழக்கைக்கான ஒளியை வழங்கி மகிழ்வது எமது தூரநோக்காகும்.

எமது செயற்பணி Our Mission

தொடர்ச்சியான நவீன முன்னெடுப்புகளைக் கொண்டு மக்களுக்கு சிறந்த சக்தித் தீர்வுகளை வழங்குவது எமது செயற்பணியாகும்.