ஏற்கனவே 108 மில்லியன் அ.டொ ஆகுசெலவில் மின்சாரமாக்கப் பட்டுள்ள பகுதிகளுக்கு இடையில் மின்சாரமாக்கப் படாது காணப்படும் பின் தங்கிய பிரதேசங்களுக்கு மின்சாரத்தை வழங்கும் பொருட்டு 2010 ஆம் ஆண்டில் ஆரம்பமாகிய RE8 என்ற இந்தக் கருத் திட்டத்திற்கு ஈரான் இஸ்லாமியக் குடியரசு நிதி உதவியை வழங்குகின்றது. கடந்த காலங்களின் போது மின்சார வசதிகள் கிடையாதுள்ள ஏறக் குறைய 1000 மின்சாரத் திட்டங்களுக்கு இந்தக் கருத் திட்டத்தின் கீழ் ஏற்கனவே காணப் படுகின்ற பல குறை மின்னழுத்த மின்சார வலையமைப்பு நீடிப்புகளுக்கும் மின்சாரம் வழங்கப் படவுள்ளது. இந்தக் கருத் திட்டம் ஏறக் குறைய 180,000 கிராமியக் குடும்பங்களுக்கு நன்மை பயக்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது.