மின்சாரமாக்கத்திற்கான பிரவேசம் 67.3% வீதம் என்ற குறைந்த அளவில் காணப் படுகின்ற இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் வசகிக்கும் 12,245 கிராமியக் குடும்பங்களுக்கு மின்சாரத்தை வழங்குவது இந்த உத்தேச கருத் திட்டத்தின் பிரதான குறிக்கோளாகும். இந்தக் கருத் திட்டத்தின் மொத்த ஆகு செலவு 2,346 மில்லியன் ரூபா ஆகும். 486 புதிய மின்சாரமாக்கல் (RE) திட்டங்களின் ஊடாக பின் தங்கிய கிராமங்க ளுக்கு மின்சாரம் வழங்கப் படவுள்ளது. மின்சார முறைமையின் நம்பத்தகு தன்மைமையை அதிகரிக்கும் பொருட்டு MV ஆளிகள் அறிமுகப் படுத்தப் படவுள்ளன.