ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து (ஆஅவ) கிடைத்த உதவியைக் கொண்டு 52 மில்லியன் அ.டொ ஆகு செலவில் நிறைவு செய்யப் பட்ட RE6 என்ற கிராமிய மின்சாரமாக்கல் திட்டம் கிராமப் பகுதிகளின் சமூகப் பொருளாதார அபிவிருத்திற்காக நாட்டின் அனைத்து மாகாணங்களிலுமுள்ள 707 முழுமையான மின்சாரத் திட்டங்களுக்கும் 2087 குறை மின்னழுத்த மின்சார மார்க்க நீடிப்புகளுக்கும் மின்சாரத்தை வழங்கும் என எதிர் பார்க்கப் படுகின்றது. ஏறக் குறைய 141,000 நுகர்வோர் இந்தக் கருத் திட்டத்தினால் நேரடியாக நன்மை அடைந்து வருகின்றனர்.