ceb_logo

இலங்கை மின்சார சபை இலங்கையிலுள்ள மிகப் பெரிய மின்சாரக் கம்பனியாகும். இந்த இமிச ஏறக் குறைய ஒரு100% வீத சந்தைப் பங்கைக் கொண்டுள்ளது. இந்த சபை இலங்கையில் காணப் படும் மின் சக்தி உற்பத்தி, மின்சாரப் பகிர்ந்தளிப்பு, மின்சார செலுத்துகை மற்றும் மின்சாரத்தை சில்லறைக்கு விற்பனை செய்தல் ஆகிய பெரும் தொழிற்பாடுகள் மீது கட்டுப் பாட்டு அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இது நாட்டிலுள்ள இரண்டு ஒன்-க்றிட் மின்சாரக் கம்பனிகளில் ஒரு கம்பனியாகும். மற்றையது இலங்கை மின்சாரக் கம்பனியாகும். இமிச 2008 ஆம் ஆண்டில் அண்ணளவாக 4.1 மில்லியன் எண்ணிக்கையான நுகர்வோர் மின்சாரக் கணக்குகளைக் கொண்டு ஏறக் குறைய 110.9 மில்லியன் ரூபா தொகையை ஈட்டியிருந்தது.

இந்த இமிச 1969 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப் பட்டது. இந்த மின்சார சபை  தற்பொழுது மொத்தம் 2,684 மெவொ நிலையான ஒரு மின் சக்திக் கொள்திறனைக் கொண்டு இயங்கி வருகின்றது. இந்த மின் சக்திக் கொள்திறனில் 1,290 மெவொ மின்சாரம் அனல் சக்தி மின்சாரம் ஆகும். அதே போன்று 1,207 மெவொ மின்சாரம் நீர்வலு மின்சாரம் ஆகும். இமி சபை அம்மாந்தோட்டையில் காற்றுமூல சக்திப் பண்ணை என அழைக்கப் படும் அம்மாந்தோட்டை காற்றுச் சக்திப் பண்ணை ஒன்றுக்கு உரித்துடையதாகவும் இருக் கின்றது. இந்தச் சக்திப் பண்ணை ஐந்து டேர்பைன்களைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு டேர்பைனும் 600 கிவொ அளவானதாகும். இமிச விக்டோரியா அணைக் கட்டு போன்ற பல நீர்வலு சார்ந்த அணைக் கட்டுகளையும் மற்றும் நுரைச்சோலை அனல் சக்தி உற்பத்தி நிலையம் போன்ற மின்பொறித் தொகுதி களையும் நிருவகித்து வருகின்றது.

ceb7 ceb ceb3
ceb4 ceb5 ceb8

நீர்வலு உற்பத்தி

இமி சபையின் நீர்வலு உற்பத்தி நிலையங்கள் 2006 ஆம் ஆண்டின் போது 4289 ஜிவொம (GWh) அல்லது 45.7%  மின் சக்தி உற்பத்திற்குப் பங்களித்தன. இந்த நீர்வலு மின்சாரம் மகாவலித் தொகுதி, லக்க்ஷபானத் தொகுதி, சமனலவெவ மின்னுற்பத்தி நிலையம், குகுலேகங்கை ஆகிய மின்னுற்பத்தி நிலையங்களிலிருந் தும், இங்கினியாகலை, உடவளவை மற்றும் நிலம்பே ஆகிய இடங்களிலுள்ள மூன்று நீர்வலு மின்னுற்பத்தி நிலையங்களிலிருந்தும் கிடைத்தது. சிறியளவான நீர்வலு உற்பத்தித் தரப்புகள் 2006 ஆம் ஆண்டின் போது 346 ஜிவொம அல்லது 3.7% மின் சக்தியை உற்பத்தி செய்தன.

70 மெவொ நிலையான சக்திக் கொள்திறனை உடைய குகுலேகங்கை நீர்வலு மின்னுற்பத்திப் பொறித் தொகுதி 2003 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 19 ஆம் திகதி உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப் பட்டு வைபவ ரீதியாகத் திறந்து வைக்கப் பட்டது. இது குறிப்பாக இமி சபையின் நீர்வலு உற்பத்திக் கொள் திறனை மேலும் அதிகரிக்கச் செய்து கணிசமான சாதனையை அடைய வைத்த ஒரு நீர்வலு உற்பத்திப் பொறித் தொகுதியாகும். இது 1992 ஆம் ஆண்டில் சமனலவெவ மின்னுற்பத்தி நிலையம் உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கப் பட்ட பின்னர் முதலாவது ஆரம்பிக்கப் பட்ட நீர்வலு உற்பத்திப் பொறித் தொகுதியாகும்.

150 மெவொ கொள்திறன் உடைய நிர்வலு உற்பத்திக் கருத் திட்டத்தின் நிர்மாணப் பணியும் ஏற்கனவே ஆரம்பிக்கப் பட்டுள்ளது.

இந்தக் கருத் திட்டத்தின் காரணமாக இடம் பெயரவிருக்கும் மக்களுக்கு 50 இற்கும் அதிகமான அரசாங்க மற்றும் தனியார் கட்டிடங்கள் அடங்கலாக தலவாக்கலை நகர சபை, வாடி வீடு, திரைப்படக் கூடம், தமிழ் மகா வித்தியாலயம், மூன்று கோவில்கள், இரண்டு கிறிஸ்தவ ஆலயங்கள் முதலியவற்றுடனான 495 வீடுகளின் நிர்மாணப் பணியும் பூர்வாங்க வேலைகளும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. தலவாக்கலையிலிருந்து தவலத்தென்னை வரையான 33 கிமீ வீதி மேம்பாடு, 14 பாலங்கள் மற்றும் துளை மதகுகள், 150 பெட்டி வடிவ மதகுகள் என்பவற்றின் புனர்நிர்மாணம், கருத் திட்ட ஊழியர்களுக்கான வீடுகள் நிர்மாணம், 33 KV இரண்டு மின்சார செலுத்துகை மார்க்கங்களின் நிர்மாணம் போன்ற பணிகளும் இந்தப் பணிகளில் அடங்கு கின்றன.

நீர் திருப்புகை வசதிகள் உள்ளிட்ட (அணைக் கட்டுகள்) 12.9 கிமீ நீளமான தலைமை நீர்காவிக் குழாய் மார்க்கம், நிலகீழ் மின் குகை மற்றும் ஏனைய வசதிகள் பிரதான நிர்மாண சிவில் வேலைகளும் ஆரம்பிக்கப் பட்டுள்ளன. இந்தக் கருத் திட்டத்திற்கான மொத்த நன்கொடைப் பங்களிப்பு 33,265 மில்லியன் ஜப்பான் யென்கள் ஆகும். இலங்கை அரசாங்கத்தின் மொத்தப் பங்களிப்பு 5,952 மில்லியன் ரூபா ஆகும்.