You are here:

Homeஎம்மைப் பற்றிசக்திக் கொள்கை

ministry_logo

இலங்கையின் சக்தித் துறை எதிர்நோக்கிய சவால்கள் எண்ணிலடங்காதவைகளாகும். மின்சாரத்தினதும் பெற்றோலிய உற்பத்திகளினதும் தொடர்ச்சியானவொரு விநியோகத்தை உத்தரவாதப்படுத்தும் வேளை, வளர்ந்து வரும் பொருளாதாரமானது சுதேசிய சக்தி வளங்களுக்கும் இறக்குமதி செய்யப்பட்ட கணிய எண்ணெய்களுக்கும் இடையிலான ஒரு திறமுறைச் சமநிலையைப் பேணவேண்டியுள்ளது. இலங்கையின் சனத்தொகையில் நான்கில் ஒரு பகுதி மக்களுக்கு இன்னும் வீட்டுத் தேவைகளுக்கான மின்சாரத்தை வழங்க வேண்டியிருக்கின்றது. வர்த்தக ரிதியில் இயங்கும் சக்தி நிறுவனங்கள் அவற்றின் நிதி சார்ந்த நிலைத்து நிற்கும் தன்மையையும் சேவைத் தரத்தையும் மேம்படுத்தும் பொருட்டு மேலும் வலுப்பெற வேண்டும் என தேவைப்படுத்தப்படுகின்றன. சக்திச் சேவைகள் விநியோகம், முதலீடு, இயக்கச் செயற்பாடு மற்றும் ஒழங்குறுத்துகை ஆகிய விடயங்களில் நாட்டு மக்களின் ஈடுபாட்டை அதிகரிக்கச் செய்வது அவசியமாகும். இந்த ஆவணமானது இலங்கையின் தேசிய சக்திக் கொள்கை இலக்குகளையும் திருப்புமுனைகளையும் பற்றி எடுத்துரைப்பதாகவும் அமைகின்றது. இவற்றினூடாக இலங்கை அரசாங்கமும் அதன் மக்களும் நாட்டின் மிலேனிய அபிவிருத்திக் குறிக்கோள்களை அடையும் விடயத்தை இலகுபடுத்தும் பொருட்டு எதிர் வரும் ஆண்டுகளில் சக்தித் துறையை அபிவிருத்தி செய்து நிருவகிக்க முனையலாம். சத்தித் துறை பற்றிய திட்டமில், முகாமைத்துவம் மற்றும் ஒழங்குறுத்துகை ஆகிய அம்சங்களை மேம்படுத்தும் பொருட்டும், இன்னும் உயிரணுத்திணிவுச் சக்தியை முக்கியமான ஒரு வர்த்தக சக்தி வளமாக மாற்றும் பொருட்டும் அதிகளவான மக்களுக்கு சுமக்கத்தகு விலைகளில் சக்திச் சேவைகளின் விநியோகத்தை விஸ்தரிக்கும் பொருட்டும் இந்தக் கொள்கை ஆவணத்தில் விஷேட புதிய முன்னெடுப்புகள் உள்ளடக்கப்பட்டிருக்கின்றன. ஒவ்வொரு கொள்கைப் பிரிவையும் அமுல்படுத்துவதற்கான நிறுவன சார் பொறுப்புக்கள் பற்றியும் குறிப்பிட்ட இலக்குகளை அடைவது தொடர்பான திறமுறைகள் பற்றியும் இந்த ஆவணத்தில் எடுத்துரைக்கப் பட்டுள்ளது. மின்வலு சக்தி அமைச்சு, இந்த வரைவு ஆவணம் பற்றி அதிகமான அக்கறையுடைய தரப்புகளுடன் கலந்தாலோசித்து, பொது மக்களினது கருத்துக்களைப் பெற்று இந்த இலங்கையின் தேசிய சக்திக் கொள்கையும் திறமுறைகளும் என்ற விடயத்தைப் பிரசுரிக்க முன்னர் தேவையான திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. மூன்று வருட காலப் பகுதி ஒன்றின் பின்னர் இந்த இலங்கையின் சக்திக் கொள்கையும் திறமுறையும் என்ற விடயம் மீளாய்வு செய்யப்பட்டு திருத்தப் படுதல் வேண்டும்.

அறிமுகம்

1.1. சக்தி விநியோகம்:

இலங்கையில் காணப்படும் சக்தி விநியோக நடவடிக்கையானது உயிரணுத்திணிவுச் சக்தி, பெற்றோலியம் மற்றும் நீர்வலு ஆகிய மூன்று பிரதான சக்தி வளங்களின் அடிப்படையில் தங்கியிருக்கின்றது. 2004 ஆம் ஆண்டின் போது, நாட்டின் நீர்வலு உற்பத்தியானது 710.71 kTOE (ஆயிரம் டொன்கள் எண்ணெய்க்குச் சமனான) எனவும், அதே வேளை உயிரணுத்திணிவுச் சக்தி மைய சக்தி விநியோகமானது 4,513.3 kTOE எனவும் பதிவாகிக் காணப்பட்டன. இறக்குமதி செய்யப்பட்ட மசகெண்ணெய் மூலமும், டீசல் மற்றும் திரவநிலைப் பெற்றோலிய வாயுக்கள் (LPG) போன்ற அத்தகைய முடிவுப் பெற்றோலிய உற்பத்திகள் மூலமும் ஏறக்குறைய 4,131.9 kTOE ஏற்பாடு செய்து வழங்கப்பட்டது.  இது தவிர, மரபுரீதியற்ற சக்திவளங்கள், அதாவது (குறிப்பாக காற்று சக்தி) 3.6 kTOE என்ற அளவான அடிப்படை சக்தியை வழங்கியிருந்தது. இந்த மரபுரீதியற்ற சக்தி வளங்கள், சராசரியாக மொத்தம் ஏறக்குறைய 9,359.5 kTOE அடிப்படை சக்தி விநியோகத்தை வழங்கத் துணைபுரிந்தன. உயிரணுத்திணிவுச் சக்தி, மசகெண்ணெய் மற்றும் பெற்றோலிய உற்பத்திகள், இன்னும் நீர்வலு மற்றும் ஏனைய புதுப்பிக்கத்தகு சக்தி வளங்கள் என்பவற்றிலிருந்து 2004 ஆம் ஆண்டில் தேசிய சக்தி விநியோகத்திற்கான அடிப்படை சக்திப் பங்களிப்புகள், முறையே 48.2%, 44.2% மற்றும் 7.6% என்ற வீதங்களில் கிடைத்தன.  இலங்கையிலுள்ள மரபுரீதியற்ற சக்தி வளங்களின் பயன்பாடானது ஒப்பீட்டளவில் அதையொத்தவொரு அளவாகக் காணப்படுகின்றது. ஆகையால் அதன் பங்களிப்பு இன்று பேரேண்ட சக்திக் கண்ணோட்டத்தில் கணிசமானளவு குறைவடைந்து காணப்படுகின்றது.

1.2. சக்தித் தேவை அதிகரிப்பு:

நாட்டின் பொருளாதார சமூக அபிவிருத்தி தொடர்பில் அதிகரித்து வருகின்ற சக்திக்கான தேவையைப் பூர்த்தி செய்யும் கண்ணோட்டத்தில் நோக்கும் போது, மொத்த அடிப்படை சக்தித் தேவை 2020 ஆம் ஆண்டளவில் ஏறக்குறைய 15,000 kTOE வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது ஏறக்குறைய 3% வீத ஆண்டு சராசரி அதிகரிப்பொன்றாகவிருக்கும். அநேகமாக, மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகிய உப துறைகள் அதிகமாக ஏறக்குறைய 7% – 8% வரையான ஆண்டு சராசரி வளர்ச்சி வீதங்களைக் கொண்டு காணப்படுகின்றன. நீர்வலு மின்சார உற்பத்தியும் உயிரணுத்திணிவுச் சக்தி மைய சக்தி விநியோகங்களும் மாத்திரமே இலங்கையில் அதிகளவில் கிடைக்கக்கூடிய சுதேசிய அடிப்படை சக்தி வளங்களாகக் காணப்படுகின்றன. இந்த சுதேசிய அடிப்படை சக்தி வளங்களை மாத்திரமே நெருங்கிய எதிர்காலத்தில் வரையறை ரீதியாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுகின்றது. இது முக்கியமாக மேலும் நீர்வலு சக்தி அபிவிருத்தியில் வரையறைகளுக்குக் காரணமாக அமையும் என்பதுடன், எஞ்சியிருக்கின்ற பாரிய நீர்வலு ஸ்தலங்களின் பிரயோகத்தில் குறை பொருளாதாரப் பயன்பாட்டிற்கும், இன்னும் மக்களின் படிப்படியாக அதிகரித்து வருகின்ற வாழ்க்கைத் தரத்தைக் கொண்டு அதிகரித்த உயிரணுத்திணிவுச் சக்திப் பயன்பாட்டிற்கும் வழிவகுக்கும். நடுத்தர காலத்தில், நாட்டின் அதிகரித்த அடிப்படை சக்தித் தேவைகளை பிரதானமாக இறக்குமதி செய்யப்பட்ட கணிய எண்ணெய்களின் மூலம் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதை இது கருதுகின்றது. நீண்டகாலக் கண்ணோட்டத்தில் நோக்கும் போது, சுதேசிய பெற்றோலிய வளங்களின் சாத்தியமான அபிவிருத்தியும், இன்னும் மரபுரீதியற்ற புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் துரித அபிவிருத்தியும் இலங்கையிலுள்ள கலப்பு சக்தி வளங்களின் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்த வழிவகுப்பதாக அமையும்.

1.3. சக்தித் துறை நிருவாகம்:

மின்சாரமும் பெற்றோலியமும் இலங்கையில் காணப்படும் இரண்டு பிரதான வர்த்தக சக்தி விநியோக உப துறைகள் ஆகும். இந்த இரண்டு உப துறைகளும் பெருமளவில் அரச உடமை நிறுவனங்களினால் கையாளப்பட்டு வருகின்றன. இன்று இந்தத் துறைகள் மறுசீரமைப்புகள் நடபடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன. உயிரணுத்திணிவுச் சக்தியும் முக்கியமானவொரு சக்தி அமைப்பாக மாறி வருகின்றது.

இலங்கை மின்சார சபை (இமிச), லங்கா இலெக்ட்ரிசிற்றி கம்பனி (ப்ரைவட்) லிமிற்றட் (லெகோ) ஆகிய அரச துறை நிறுவனங்கள் மின்சார விநியோகக் கைத்தொழிலை நிருவகித்து வருகின்றன. இலங்கை மின்சார சபை (இமிச) நிலையாகவும் கிடையாகவும் ஒரு மின்சார உற்பத்திக் கம்பனி, ஒரு தனி மின்சார செலுத்துகை – தொகை சக்தி வர்த்தகக் கம்பனி மற்றும் பல மின்சாரப் பகிர்ந்தளிப்புக் கம்பனிகள் போன்ற கம்பனிகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மின்சார மற்றும் பெற்றோலியக் கைத்தொழில்கள் அடங்கலாக அனைத்துப் பெளதீக உட்கட்டமைப்புத் துறைகள் தொடர்பிலும் ஒரு ஒழுங்குறுத்துகைக் கட்டமைப்பில் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இபொபஆ) ஏற்கனவே தொழிற்பட்டு வருகின்றது. பெளதீக உட்கட்டமைப்புத் துறைகளை ஒழுங்குறுத்தும் பொருட்டு 2002 இன் 35 ஆம் இலக்க இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுச் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (இபொபஆ) ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள போதிலும், தனியாள் கைத்தொழில் சட்டவாக்கங்கள் சட்டமாக்கப்பட்டு நடைமுறைப் படுத்தப்படும் நேரம் ஒழுங்குறுத்துகைப் பணியை மாத்திரம் நிறைவேற்றும் பொருட்டு அதற்கு அதிகாரத் தத்துவம் உரித்தளிக்கப்படும். இன்று, மின்சாரக் கைத்தொழிலும், நீர் சார்ந்த சேவைகள் கைத்தொழிலும் மற்றும் பெற்றோலியக் கைத்தொழிலும் மாத்திரம் இந்த இபொபஆ சட்டத்தின் கீழ் பட்டியல்படுத்தப்பட்டுள்ளன.

பெற்றோலிய சுத்திகரிப்பு வியாபார நடவடிக்கையில் இன்று தனித்துவமாக விளங்கும்  அரச உடமை நிறுவனமான இலங்கைப் பெற்றோலியக் கூட்டுத்தானத்தின் (சிபெற்கோ) மூல திரவநிலைப் பெற்றோலிய எரிவாயுட்களின் (LPG) மொத்த விநியோகத்தில் ஏறக்குறைய 15% வீத பங்களிப்பு தவிர LPG எரிவாயுக் கைத்தொழிலானது தனியார் உடமைகளுக்குச் சொந்தமானதாகவுள்ளது. இந்த சிபெற்கோ நிறுவனமானது பெற்றோலியப் பகிர்ந்தளிப்பு வியாபாரச் சந்தையில் இலங்கை இந்திய எண்ணெய்க் கம்பனியுடன் (லங்கா ஐஓசி) ஏற்கனவே போட்டியிட்டு வருகின்றது. மூன்றாவது நிறுவனமும் பெற்றோலியப் பகிர்ந்தளிப்பு வியாபாரத்தில் இணையலாம். ஆயினும்,  நிலகீழ் பெற்றோலிய அகழ்வுத் துறையின் தாராளமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் நடவடிக்கையினூடாக நாட்டிற்கும் அதன் நுகர்வோருக்கும் எதிர்பார்க்கப்பட்ட நன்மைகள் போதாமையின் காரணமாக இந்த வாய்ப்பானது அரசாங்கத்தினால் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இபொபஆ எதிர்காலத்தில் பெற்றோலிய உப துறை ஒழுங்குறுத்துநராக விளங்கும் என்பதுடன், பெற்றோலிய உப துறையின் எதிர்காலக் கட்டமைப்பு பற்றித் தீர்மானிப்பதற்கான அதிகாரத்தையும் கொண்டிருக்கும்.

மின்சாரம் மற்றும் பெற்றோலியம் ஆகிய உப துறைகள் போலல்லாது உயிரணுத்திணிவுச் சக்தியானது இன்னும் சம்பிரதாய ரீதியில் ஒழுங்கமைக்கப்படாத ஒரு உப துறையாகவே காணப்படுகின்றது. உயிரணுத்திணிவுச் சக்தி, மின்சார உற்பத்திற்கான ஒரு அடிப்படை சக்தி வளமாக விளங்குமிடத்து, அது தனது புதிய அபிவிருத்திப் பங்களிப்பைக் கொண்டு நிலையானதாக மாறக்கூடும். அதனால் இந்த உயிரணுத்திணிவுச் சக்தி உப துறையும் மிகவும் ஒழுங்கமைக்கப்பட்டதாக மாறும்.

“இலங்கையின் தேசிய சக்திக் கொள்கையும் திறமுறைகளும்” என்ற விடயம் இந்தக் கொள்கை ஆணவனத்தில் மூன்று பிரிவுகளின் கீழ் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

  • “இலங்கையின் சக்தித் துறையினது அபிவிருத்திற்கும் அதன் எதிர்காலப் பயணத்திற்கும் வழிகாட்டும் அடிப்படைக் கோட்பாடுகள் அடங்கிய “சக்திக் கொள்கைப் பிரிவுகள்”
  • “அமுலாக்கல் பற்றிய திறமுறைகள்” இது ஒவ்வொரு கொள்கைப் பிரிவையும் அடைவதற்கான அமுலாக்கல் வேலைச் சட்டகத்தை எடுத்துரைப்பதாக அமைகின்றது
  • “குறித்த இலக்குகள், திருப்புமுனைகள் மற்றும் நிறுவன சார் பொறுப்புக்கள்” இந்த விடயங்கள் குறித்த திறமுறைகளை அமுலாக்குவதற்கான தேசிய இலக்குகள், திட்டமிடல் மற்றும் நிறுவனசார் இலக்குகள் என்பவற்றை எடுத்துரைப்பதாக அமைகின்றது

View the full document in PDF format

download_button