02 0

Posted by  in Latest News

மின்சக்தி அமைச்சகம் மற்றும் சூரியசக்தி, காற்றுவலு மற்றும் நீர் மின் உற்பத்தி கருத்திட்டங்கள் மேம்பாட்டு அமைச்சகம் ஆகியவை ஒரே கட்டிடடத்தில்…

நிர்வாக திறன் மற்றும் பொது வசதிக்காக ஒரு மின்சக்தி அமைச்சகம் மற்றும் சூரிய, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்டங்களை இராஜாங்க அமைச்சின் கட்டிடங்களை மேலிக விரயமின்றி ஒரு கட்டிடத்தில் பராமரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
எதிர்கால மின் இலக்குகளை அடைவதற்கான நோக்கத்துடன் மின்சக்தி அமைச்சிற்கு இணையாக புதிய அரசாங்கத்தின் கீழ் சூரியசக்தி, காற்றுவலு மற்றும் நீர் மின் உற்பத்தி கருத்திட்ட மேம்பாட்டு அமைச்சகம் நிறுவப்பட்டது. இந்த நோக்கத்திற்காக ஒரு இராஜாங்க அமைச்சானது நிறுவப்பட்டதுடன், முக்கிய அதிகாரிகளை இராஜாங்க அமைச்சிற்கு நியமித்ததனை தொடர்ந்து, மின்சக்தி அமைச்சின் வசதிகளானது மட்டுப்படுத்தப்பட்ட கட்டிடத்திற்கு ஏற்பட்ட சிரமங்கள் மேலும் மோசமடைந்தது. எவ்வாறாயினும், எழுந்துள்ள நிர்வாக சிக்கல்களையும், மேற்கண்ட அமைச்சகங்களுக்காக இரண்டு தனித்தனி இடங்களுக்கு செலவழிக்க வேண்டிய பாரிய தொகையையும் கருத்தில் கொண்டு, மின்சக்தி அமைச்சகம் மற்றும் சூரியசக்தி, காற்றுவலு மற்றும் நீர் மின் உற்பத்தி கருத்திட்ட மேம்பாட்டு அமைச்சு இல 437, காலி வீதி, கொழும்பு 03 இற்கு இரண்டு அமைச்சுகளையும் நிறுவ தீர்மானிக்கப்பட்டது.
முன்னர் மின்சக்தி அமைச்சால் பராமரிக்கப்பட்ட கட்டிடத்திற்கு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ரூ. 4,229,415.00 மாத வாடகைக்கு இருக்கும் இலங்கை நிலைபெறு தகுவலு அதிகார சபையும் மற்றும் கொழும்பு 03 டீ.ஏ குரே கட்டிடத்தில் ரூ. 550,000.00 மாத வாடகைக்கு இயங்கும் லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் முக்கிய கிளையில் ஒரு பகுதஜயை கொண்டுவருவது பொருளாதார ரீதியாகவும் நிறுவன ரீதியாகவும் சாதகமாக இருக்கும்.
அமைச்சு மற்றும் அனைத்து இணைந்த நிறுவனங்களையும் ஒரே கூரையின் கீழ் கொண்டுவருவது பொதுமக்களுக்கு திறமையான சேவையை வழங்க அவர்களுக்கு உதவும், மேலும் இது அரசாங்கத்திற்கு செலவுக் குறைப்பு வழிமுறையாகவும் இருக்கும். எனவே, எதிர்காலத்தில் அனைத்து அமைச்சும் அதன் துணை நிறுவனங்களும் ஒரே இடத்தில் அமைந்திருக்கும் ஒரு கட்டடத்தை நிர்மாணிப்பதாக நம்புவதாக மின்சக்தி அமைச்சானது தெரிவித்துள்ளது.

Leave a comment

* required