அதிமேதகு ஜனாதிபதியின் ஆதரவின் கீழ் இந்த மாதம் 6 ஆம் தேதி சமூர்த்தி பெறுநர்களுக்கு இலவச மின்சார இணைப்புகளை வழங்குதல் கிரிபாவிலிருந்து தொடங்கப்படும்….. “
03 0

Posted by  in Latest News

அதிமேதகு ஜனாதிபதியின் ஆதரவின் கீழ் இந்த மாதம் 6 ஆம் தேதி சமூர்த்தி பெறுநர்களுக்கு இலவச மின்சார இணைப்புகளை வழங்குதல்
கிரிபாவிலிருந்து தொடங்கப்படும்….. “


டலஸ் அலகபெரும – மின்சக்தி அமைச்சர்

“ஆன்லைனில் விரைவாக பதிவு …”


இராஜாங்க அமைச்சர் துமிந்தா திசாநாயக்க.


இலங்கையில் 100% மின்சாரம் வழங்கல் திட்டத்தின் முன்னேற்ற மதிப்பீட்டில் பங்கேற்கும் அமைச்சர்கள் கருத்துக்களை வெளியிட்டனர்.

சுபீட்சத்தின்p நோக்கினை இலக்காக கொண்டு செயற்படும் மின்சக்தி துறை, குறைந்த வருமானம் மற்றும் இதுவரை மின்சாரம் வழங்கப்படாத சமுர்த்தி பெறுநர்களுக்கு இலவச மின்சார இணைப்புகளை வழங்குவதற்கான முதல் கட்டத்தை இந்த மாதம் 06 ஆம் திகதி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் செய்யுமாறு மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகபெரும குறித்த பிரிவினர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அனைவருக்கும் மின்சாரம் வழங்கும் திட்டம் குறித்த முன்னேற்ற மீள்ஆய்வுக் கூட்டத்தில் நேற்று (02) காலை அமைச்சக வளாகத்தில் சமுர்த்தி ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை மற்றும் மின்சக்தி அமைச்சகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடிய போது இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
சுபீட்சத்தின் நோக்கினை உணர்ந்து கொள்வதற்கான முதல் படியாக, நாடு பூராவும் மின்சாரம் இல்லாத நாட்டில் உள்ள அனைத்து வீடுகளையும் அடையாளம் கண்டு, இந்த ஆண்டு இறுதிக்குள் அவர்களுக்கு மின்சாரம் வழங்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகபெரும அவர்கள் தெரிவித்தார். குறைந்த வருமானம் மற்றும் சமுர்தி பெறுநர்கள் தீவு முழுவதும் காணப்படும் மின்சாரம் கிடைக்காதவர்களை அடையாளம் கண்டு இவர்களின் வுPடான பிரதான வலையமைப்பில் இருந்து எவ்வளவு து”ரம் என்பதையும், வீட்டின் கட்டுமாண நிலை தொடர்பிலும் அறிக்கை ஒன்றை மார்ச் 15 ஆம் தேதிக்கு முன்னர் சமர்ப்பிகச்குமாறு சமுர்த்தி ஆணைக்கழுவிற்கு மின்சக்தி அமைச்சர் அறிவுறுத்தியுள்ளதுடன் இந்த செயல்முறையை விரைவுபடுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர் இலங்கை மின்சார சபையின்; தலைவருக்கு அறிவுறுத்தினார்.
கலந்துரையாடலில் பங்கேற்ற சூரிய, காற்று மற்றும் நீர் உற்பத்தி கருத்திட்ட மேம்பாட்டுத் துறை அமைச்சர் துமிந்த திசாநாயக்க, அனைத்து இலங்கையர்களும் மக்களின் மின்சாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உறுதிபூண்டிருக்க வேண்டும் என்றும், சமூர்த்தி பெறுநர் குடும்பங்களுக்கு மின்சாரம் வழங்கப்பட வேண்டும் என்றும் கூறினார். மேலும் பிரதேச செயலகத்துடன் இணைந்து பிரதேச வாரியாக சம்பந்தப்பட்டவர்களை இணையம் மூலம் இலங்கை மின்சார சபை அதிகாரிகள் மூலம் அழைத்து பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

Leave a comment

* required