லக்ஸபானா மின் உற்பத்தி நிலையம் அல்லது நீர்த்தேக்கத்திற்கு சேதம் விளைவிக்காத அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் நில உரிமையை ஒப்படைக்கத் தயார்.
04 0

Posted by  in Latest News

லக்ஸபானா மின் உற்பத்தி நிலையம் அல்லது நீர்த்தேக்கத்திற்கு சேதம் விளைவிக்காத அங்கீகரிக்கப்படாத கட்டுமானங்களின் நில உரிமையை ஒப்படைக்கத் தயார்.

“இ.மி.ச. க்கு சொந்தமான நிலங்களில் நிறுவப்பட்டு உள்ள பாடசாலை மற்றும் மருத்துவமனைகளுக்கு சட்ட ரீதியான உரிமைக்கு மாற்ற தயார்…”

என்கிறார் அமைச்சர் டலஸ்.

“லக்ஸபான மின் உற்பத்தி நிலையம் மற்றும் அதன் நீர்த்தேக்கங்களுக்கு அருகிலுள்ள இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) சொந்தமான நிலங்களில் தற்போது சுமார் 350 குடும்பங்கள் வீடுகள் அமைத்து வசித்து வருகின்றன. அவ்வாறே அந்த நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த மக்கள் நீண்ட காலமாக வாழ்ந்து வரும் நிலங்கள் சட்டப்படி இலங்கை மின்சார சபையை சார்ந்தது. 80 ஆண்டுகளான நீண்ட காலமாக இந்த மக்கள் பதிவாகியுள்ள இந்த இடம் தொடர்பில் தேடியறிந்து, மின்நிலையம் அல்லது நீர்த்தேக்கத்திற்கு தீங்கு விளைவிக்காத நிலங்கள் சம்பந்தப்பட்ட குடியிருப்பாளர்களுக்கு சட்ட ரீதியாக உரிமை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல் மின் நிலையம் கட்டப்படும் போது அச்சமயம் காணியை இழக்கும் மக்களை குடியமர்த்த விதுலிபுர கிராமத்தில், மற்றும் அப்பகுதியில் அமைந்துள்ள விதுலிபுர பாடசாலை மற்றும் மருத்துவமனைகளின் சட்டபூர்வமான நிலங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மாற்றவும் நாங்கள் நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்று மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹபெரும அவர்கள் குறிப்பிட்டார்.
மின் உற்பத்தி நிலையம் மற்றும் நீர்த்தேக்கம் அண்டிய பிரதேசத்தில் மற்றும் இலங்கை மின்சார சபையை சேர்ந்த நிலங்களில் வசிக்கும் அங்கீகரிக்கப்படாத குடியிருப்பாளர்களின் நிலப் பிரச்சினைக்கு சாத்தியமான தீர்வுகள் குறித்து நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க சமீபத்தில் நில அளவையாளர் துறைதிணைக்களம், இலங்கை மின்சார சபை, மின் உற்பத்தி நிலைய அதிகாரிகள் மற்றும் தொடர்புடைய குடியிருப்பாளர்களுடன் மேற் கொண்ட கலந்துரையாடலில் பங்கேற்றபோது அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
லட்ஸபான மின் உற்பத்தி நிலையத்தின் போது பாரம்பரிய நிலங்களை இழந்தவர்களுக்கு இலங்கை மின்சார சபையால் (இ.மி.ச.) விதுலிபுர கிராமத்தை நிர்மாணித்துள்ளது. மின் உற்பத்தி நிலையம் மற்றும் நீர்த்தேக்கத்திற்கு அருகிலுள்ள றநில அளவையாளர் திணைக்களத்தின் ஆய்வுகள், பாதுகாக்கப்பட்ட பகுதிகளிலும் வாழ்விடங்கள் கட்டப்பட்டுள்ளன என்பது தெரிய வந்துள்ளது, அவற்றில் சில நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தையும் பாதித்திருக்கக்கூடும் என தெரிய வந்துள்ளது. எனவே, இதுபோன்ற இடங்களில் எந்த அபிவிருத்தி பணிகளும் செய்யக்கூடாது என்று கலந்துரையாடலில் பங்கேற்ற இலங்கை மின்சார சபையின் சிரேஸ்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.
அதன்படி, அங்கீகரிக்கப்படாத நிர்மாணங்கள் குறித்து விரைவான ஆய்வு நடத்தவும், அந்த நிர்மாணங்களின் உரிமையாளர்களுக்கு மாற்றக்கூடிய நிலங்களின் உரிமையை மாற்ற நடவடிக்கை எடுக்கவும் இலங்கை மின்சார சபையின் தொடர்புடைய அதிகாரிகளுக்கு மின்சக்தி அமைச்சர் அறிவுறுத்தப்பட்டதுடன் 03 மாதங்களுக்கிடையே குறித்த அளவையியல் பணிகளை நிறைவு செய்து அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு நில அளவை திணைக்களத்திற்கு அறிவுறுத்தப்பட்டது. அதேபோல் லக்ஸபான மின் உற்பத்தி நிலையம் கட்டியதால் பாரம்பரிய நில உரிமையை இழந்த இவர்களுக்காக கட்டப்பட்ட விதுலிபுர கிராமத்தை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசநாயக்க, 80 ஆண்டுகளுக்கும் மேலாக இ.மி.ச. க்கு சொந்தமான நிலங்களில் வசித்து வரும் இந்த மக்கள் மீது சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும், கிடைக்கும் நிலங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறினார். மேலும் அதற்காக பணம் செலுத்தப்பட வேண்டும் என்றால், அது அறிவிக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

Leave a comment

* required