“மின் திட்ட தொழில்முனைவோரின் திறமையின்மை குறித்து கடுமையான முடிவுகளை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் …”
06 0

Posted by  in Latest News

“மின் திட்ட தொழில்முனைவோரின் திறமையின்மை குறித்து கடுமையான முடிவுகளை எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம் …”
அமைச்சர் டலஸ் வலியுறுத்துகிறார்.
“இது டிசம்பர் 2022 ஆம் ஆண்டிற்;குள் தேசிய கட்டத்தில் சேர்க்கப்பட வேண்டும். எந்தவொரு காரணத்தாலும் அந்த காலமானது எந்த வகையிலும் நீட்டிக்கப்படாது …”
இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க.

“திட்டங்கள் தொடர்பாக வரலாற்றில் இரண்டு சிக்கல்கள் எழுந்துள்ளன. அவற்றில் ஒன்று தனியுரிமை நிறுவனங்களின் அலட்சியம். மற்றொன்று கேள்வி மனுவை வென்ற தொழில்முனைவோரின் அலட்சியம். அவர்கள் தங்கள் செயல் மீதான ஆர்வத்தை இழக்கிறார்கள். இலங்கையில் இதுபோன்ற எத்தனை திட்டங்கள் உள்ளன? ஆனால் இந்த திட்டம் அப்படி இருக்க வேண்டியதில்லை. இது மிகவும் திறமையாக தொடங்கப்பட்டு வினைத்திறனான முறையில் செயற்படுத்தப்பட்டு நிறைவு செய்யப்படல் வேண்டும். ஒரு திட்டத்திற்கான டெண்டரை வென்ற பிறகு, அது விரும்பிய இலக்குகளை அடைய வேண்டும். அதற்கு தொழில் முனைவோர் ஆதரவை எதிர்பார்க்கிறோம். அவ்வாறு செய்ய முடியாத தொழில்முனைவோரைப் பற்றி நாம் நிலையான தீர்மானங்களை எடுக்க வேண்டியிருக்கும். அவ்வாறு செய்ய நாங்கள் தயங்க மாட்டோம். அரசாங்க தலைவராக, கோட்டாபய ராஜபக்ஷ முதல் முறையாக நாட்டிற்கு முன் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நாட்டின் முக்கிய ஆற்றல் ஆதாரமாக இருக்க வேண்டும் என்று அறிவித்தார். எனவே, அண்மை காலத்தில் கேள்வி மனு செயன்முறையை பின்பற்றி மிகவும் விரைவாக நிறைவுற்ற திட்டமாகவும் கேள்வி மனு செயல்பாட்டில் ஒரு சிறந்த செயல்முறையை விரைவாக இணைக்கும் பணி வரையில் தொழில்முனைவோரின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் எதிர் பார்ப்பதாக அமைச்சர் டலஸ் அலஹப் பெரும அவர்கள் தெரிவித்தார்.
சுபீட்சத்திற்கான நோக்கத்திற்கு ஏற்ப தேசிய கட்டத்திற்கு புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் பங்களிப்பை அதிகரிக்கும் பொருட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் 20 கட்டம் துணை மின்நிலையங்களை மையமாகக் கொண்ட 20 புதிய சூரிய மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ ஒப்பந்த அனுமதிக்கப்பட்டுள்ள அபிவிருத்தியாளர்களுக்கு கேள்வி மனு ஆவணங்களை சமர்ப்பிக்கும் நிகழ்வானது நேற்றைய தினம் அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற போது அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்கள் இந்த கருத்தினை வெளியிட்டார்.
அதன்படி, இந்த சூரிய மின் நிலையங்களின் கொள்முதல் ஒரு தொகுப்புக்கு 04 கட்டம் துணை மின்நிலையங்களைக் கொண்ட 5 தொகுப்புகளின் கீழ் செயல்படுத்தப்பட்டது. இந்த திட்டங்களுக்கான கொள்முதல் சர்வதேச போட்டி கேள்வி மனு முறைக்கு ஏற்ப மேற்கொள்ளபட்டுள்ளது. ஏலங்களை மதிப்பீடு செய்ய அரச நிதித் திணைக்களம் மற்றும் அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட கலந்துரையாடல் குழு மற்றும் தொழினுட்ப மதிப்பீட்டு குழு நியமிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட விலைநியமக் குழு, கொள்முதலின் கீழ் ஒரு அலகிற்கு மின்சாரம் கொள்முதல் செய்யவதற்கான மிக விலையை நிர்ணயித்து, தொழில்நுட்ப மதிப்பீட்டுக் குழுவின் பரிந்துரைகளின் பேரில் இந்த திட்டத்திற்கான மிகக் குறைந்த மனுதாரருக்கு ஒப்பந்நதம் வழங்க ஒப்புதல் அளித்தது.

 
இங்கு மேலும் பல கருத்துகளை வெளியிட்ட அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்கள்
அதிமேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்திற்கான நோக்கு கொள்கை கட்டமைப்பிற்குள் வெளிப்படும் முதல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டமாக இதை நாம் அறிமுகப்படுத்த வேண்டும். அதற்காக முதன்மையாக இராஜாங்க அமைச்சர் துமிந்தா திசாநாயக்கவிற்கு எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இதை ஒரு வெற்றிகரமான ஆரம்ப திட்டமாக மாற்றுவதற்கான அர்ப்பணிப்புக்காக மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா மற்றும் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹேமந்தா சமரகோனுக்கு நன்றி தெரிவிக்க இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள நாங்கள் விரும்புகிறோம். புதுப்பிக்கத்தக்க ஆற்றலை இ.மி.ச. விரும்புவதில்லை என்பது மிகவும் பிரபலமான குற்றச்சாட்டுகளில் ஒன்றாகும். இருப்பினும், இந்த திட்டத்தில், அவர்கள் அந்த கருத்தை உடைத்து, இலங்கை மின்சார சபையானது இதற்கு தேவையான அனைத்து வேலைகளையும் தாமதமின்றி செய்தனர். இதற்காக அவர்களுக்கு நன்றி தெரிவித்த அவர், தொழில்முனைவோராக, அவர்களும் தேசிய மின் கட்டத்தின் ஸ்திரத்தன்மைக்காக எங்களுடன் கைகோர்த்ததற்கு நாங்கள் நன்றி கூற கடைபட்டுள்ளோம் என்று கூறினார்.
இந்த நிகழ்வில் பங்கேற்ற இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, தொழில் முனைவோர் ஒப்பந்த கடிதங்களைப் பெற்று 9 மாதங்களுக்குள் இலங்கை நிலையான எரிசக்தி ஆணைக்குழுவில் பதிவு செய்து அதன் மூலம் தேவையான அனுமதிகளைப் பெறுமாறு கேட்டுக்கொண்டதுடன் அதற்கு பூரண ஒத்துழைப்பையும் தாம் வழங்குவதாக குறிப்பிட்டார். இதற்கு இலங்கை நிலையான எரிசக்தி ஆணைக்குழு முழு ஆதரவையும் வழங்கும். கடந்த காலங்களில் ஒப்பந்தங்களுக்காக அழைக்கப்பட்ட திட்டங்களுடன் ஒப்பிடுகையில் இந்த திட்டம் மிகவும் திறமையான மற்றும் இலக்கு பாதையுடன் முன்னேறும் என்று தான் நம்புவதாக இராஜாங்க அமைச்சர் கூறினார். ஒரு கால அளவு மற்றும் பின்தொடர்தலுடன், இந்த திட்டங்கள் அனைத்தும் டிசம்பர் 2022 க்குள் தேசிய கட்டத்தில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும் என்றும், அந்தக் காலங்கள் எந்த வகையிலும் காரணமின்றி நீட்டிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் சூரியசக்தி, காற்றுவலு மற்றும் நீர்மின் உற்பத்தி கருத்திட்ட மேம்பாட்டுத் துறை இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க, இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஹேமந்த சமரகோன் மற்றும் இலங்கை நிலையான எரிசக்தி ஆணைக்குழு மற்றும் இலங்கை மின்சார சபை மூத்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required