காலநிலை காரணிகள் குறித்த மின் சக்தி துறையை மேம்படுத்துவது குறித்து இலங்கை மாலைத்தீவுகள் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை
12 0

Posted by  in Latest News

காலநிலை காரணிகள் குறித்த மின் சக்தி துறையை மேம்படுத்துவது குறித்து இலங்கை மாலைத்தீவுகள் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தை

இலங்கை மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு மாலைத்தீவில் வேலை வாய்ப்புகளை வழங்க தயார்….

இலங்கையின் காலநிலைக் காரணிகளிலிருந்தும், மின் சக்தி துறையில் சாத்தியமான முன்னேற்றங்களிலிருந்தும் இலங்கை மின் சக்தி துறைக்கு பெறக்கூடிய மேம்பாடு குறித்து மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹபெரும மற்றும் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் ஒமர் ஏ.ராசக் ஆகிடீயாரிடையே சிறப்பு உத்தியோகப்பூர்வ கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டது.
இலங்கையில் நிலவும் சீரான வானிலை மற்றும் ஆண்டின் வெவ்வேறு காலங்களில் வானிலை மற்றும் காலநிலை காரணிகளின் மாறுபாடு குறித்து மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் அவர்களுக்கு மின்சக்தி அமைச்சர் விளக்கம் அளித்ததனை தொடர்ந்து தமமு நாட்டின் காலநிலை இதற்கு சமனானதென அவர் குறிப்பிட்டார். இந்த காலநிலை நிலைமைகள் மின் துறையின் மேம்பாட்டிற்கு எவ்வாறு பயன்படுத்தப்படலாம் என்பது குறித்து மின்சக்தி அமைச்சருடன் அவர்கள் நீண்ட நேர கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டனர்.
இலங்கையில் மின்சக்திதுறை பாரம்பரியத்திற்கு அப்பாற்பட்டது, இப்போது புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் கவனம் செலுத்துகிறது என்று மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகபெரும அவர்கள் மாலைத்தீவு உயர் ஸ்தானிகருக்கு தெரிவித்ததுடன் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சராக, நாட்டில் மின்சாரத்திற்கான தேவையை ஒரு தரம், தரம் மற்றும் செலவு குறைந்த முறையில் தொடர்ந்து பூர்த்தி செய்யும் பணி அவருக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதற்காக குறைந்த செலவில், தடையின்றிய தொடர்ச்சியான, தரமான மின்சாரம் திட்டமிடப்பட்ட முறையில் பெற பல்வேறு திசைகள் பின்பற்றப்படுகின்றனதெனவும் உயர் ஸ்தானிகர் அவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
தெற்காசியாவில் 24 மணி நேரம் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்கும் நாடு என்று பாராட்டப்பட்ட இலங்கை மின் சக்தி துறையை எண்ணி தான் மகிழ்ச்சி அடைவதாகவும், மின்சக்தி அமைச்சராக தனது தனித்துவமான பங்கிற்கு டலஸ் அஹபெருமவுக்கு நன்றி தெரிவித்ததாகவும் மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் வளர்ச்சியின் பாதையில் செல்லும் இலங்கைக்கு கௌரவமாகவும், மத்திய கிழக்கு மற்றும் இலங்கைக்கு இடையிலான நீண்டகால இருதரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவதற்கும் அடையாளமாக, ஓய்வுபெற்ற மருத்துவர்கள் மற்றும் தாதியர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகளை நாங்கள் எடுக்கலாம் எனவும் நேற்றைய தினம் அமைச்சக வளாகத்தில் நடைபெற்ற உத்தியோகபூர்வ கலந்துரையாடலின் போது மாலைத்தீவு உயர் ஸ்தானிகர் வலியுறுத்தினார்.

Leave a comment

* required