29 0

Posted by  in Latest News

டீசல் – எரிபொருள் எண்ணெயின் எதிர்காலத்தை தீர்மானிக்க வாசு தலைமையிலான அமைச்சரவைக் குழு.

மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹபெருமவின் கோரிக்கைக்கு அமைய, தற்போதைய மின் உற்பத்தித் திட்டங்கள் குறித்து நடவடிக்கை எடுக்கவும், சாத்தியமான குறைபாடுகளை தீர்க்கவும் அமைச்சர்கள் வாசுதேவ நாணாயக்கார, பந்துல குணவர்தன மற்றும் ரமேஷ் பதிரன ஆகியோர் அடங்கிய அமைச்சரவை துணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

அமைச்சர் துணைக் குழுவின் பரிந்துரைகள் இரண்டு (02) வாரங்களுக்குள் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட வேண்டி உள்ளதுடன், அதன் முதல் குழு கூட்டம் மார்ச் 29 திங்கள் அன்று மாலை 03.00 மணிக்கு நடைபெற உள்ளது.

புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் அதிகபட்ச பயன்பாட்டில் 70மூ தூய்மையான எரிசக்தி மூலங்களிலிருந்து இருக்க வேண்டும் என்பது சுபீட்சத்தின் நோக்கின் இலக்கெனவும் அதன்படி, 2025 ஆம் ஆண்டில் டீசல் மற்றும் எரிபொருள் எண்ணெயை 5மூ ஆகக் குறைப்பதும், 2030 ஆம் ஆண்டில் அதை 1மூ ஆகக் குறைப்பதும் மின்சக்தி அமைச்சின் கொள்கையாகும என மின்சக்தி அமைச்சானது வலியுறுத்துகிறது.

இந்த கொள்கை கட்டமைப்பில், தற்போது அரச மற்றும் தனியார் துறைகளால் நடத்தப்படும் டீசல் மற்றும் எரிபொருள் மின் நிலையங்களின் எதிர்காலம் குறிப்பாக கருத்தில் கொள்ளப்படும்.

Leave a comment

* required