‘மின்சாரம் என்பது இனி ஒரு வாடிக்கையாளர் சேவை மாத்திரம் அல்ல”
01 0

Posted by  in Latest News

‘மின்சாரம் என்பது இனி ஒரு வாடிக்கையாளர் சேவை மாத்திரம் அல்ல”

“22 மில்லியன் மக்கள் தொடர்ந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.”

புதிய ஆண்டில் தனது கடமைகளைத் தொடங்குவதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகஹப்பெருமா கூறுகிறார்.
“நாங்கள் சவால்களை எதிர்கொண்டு அவற்றைக் கடக்க உழைத்தால் மட்டுமே நாம் வெற்றிபெற முடியும். உங்களால் அதை செய்ய முடியும். முழு நாடும் இன்று நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. மின்சாரம் இனி ஒரு வாடிக்கையாளர் சேவை மாத்திரம் அல்ல. 22 மில்லியன் மக்கள் தொடர்ந்து எங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பொறுப்புகள், நாங்கள் எங்கள் பொறுப்புகளை சரியாக நிறைவேற்ற வேண்டும், மின் துறை மெதுவாக முன்னேறி வருகிறது, ஒரு அங்குலம் கூட திரும்பி செல்ல நாங்கள் தயாராக இல்லை என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும வலியுறுத்துகிறார்.
இன்று (01) காலை மின்சக்தி அமைச்சின் 2021 ஆம்; ஆண்டு கடமை ஆரம்ப விழாவில் மின் சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் பல கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர், கடந்த ஆண்டு நாங்கள் சந்தித்த மன அழுத்தம் மற்றும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகள் காரணமாக இந்த ஆண்டு புத்தாண்டு பல சவால்களை எதிர்கொண்டுள்ளது. நாட்டை கட்டியெழுப்புமசுபீட்சத்திற்கான நோக்கிற்கு ஏற்ப, முழு தீவையும் மின்சாரம் மூலம் இயக்குவதற்கு அமைச்சின் ஊழியர்களின் அதிகபட்ச ஆதரவை எதிர்பார்ப்பதாக அமைச்சர் கூறினார், மேலும் ஒரு மின் துறையாக நாம் சவால்களை சமாளிப்பதில் முன்னோடிகளாக செயற்படல் வேண்டுமெனவும்; கூறினார. மின் சக்தி மற்றும் எரிசக்தி குடும்பத்தின் தந்தைமை பொறுப்பினை அன்புடன் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும், நாடு தனது மனசாட்சிக்கு ஏற்பவும் ஒரு குடும்பமாகவும் தனது கடமைகளையும் பொறுப்புகளையும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறியதுடன் போசில எரிபொருள் அற்ற ஓர் நாட்டை முன் கெர்ணடு வருவதாக அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மின் சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, சூரிய, காற்று மற்றும் நீர் உற்பத்தி கருத்திட்ட அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஹேமந்த சமரகோன் மற்றும் அமைச்சின் பிற மூத்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required