Posted by superadmin in Latest News
‘தம்பப்பன்னி நிலத்தில், தம்பபவனி பவன் ரொதின் மின்சார புரட்சி தொடங்கப்பட்டுள்ளது …’
• முதல் எல்.என்.ஜி மின் நிலையம்
• முதல் சூரிய சக்தி பூங்கா
• முதல் கழிவு மின் நிலையம்
வெகு விரைவில் தேசத்திற்கு பங்களிப்பு பெற்று கொடுக்கப்படும் ….
(முதல் காற்றாலை மின் பூங்காவை தேசிய கட்டத்தில் சேர்ப்பதற்கான பொன்னான தருணத்தில் பங்கேற்ற, மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹபெரும வலியுறுத்துகிறார்.
‘மீள்புத்தாக்க எரிசக்தியை நோக்கி மின் துறையின் திசையை வழிநடத்த இன்று எடுக்கப்பட்ட இந்த பிரமாண்டமான நடவடிக்கைகள் வரலாற்றில் தங்க எழுத்துக்களில் பதிக்கப்படும். அதேபோல் இன்று தொடங்கப்பட்ட இந்த மீள்புத்தாக்க புரட்சி இங்கே நிறைவுற போவதில்லை. சுபீட்சத்தின் நோக்கில்; நாட்டின் வளர்ச்சி பயணத்தின் மேற்கொள்ளும் எதிர்வரும் 4 ஆண்டுகளில், இப்போது இன்னும் சில சிறந்த திருப்புமுனைகளை குறிக்க நாங்கள் தயாராக உள்ளோம். ஜனவரி முதல் வாரத்திற்குள் கெரவலப்பிட்டியவில் கட்டப்படும் முதல் எல்.என்.ஜி மின் உற்பத்தி நிலையத்திற்கு அடிக்கல் நாட்டுதல், சியம்பலாண்டுவில் முதல் சூரிய பூங்கா அமைத்தல், முதல் கழிவு மின் நிலையத்தை அமைத்தல் போன்ற எரிசக்தி துறையில் இன்னும் பல மைல்கற்களைக் குறிக்க நாங்கள் இப்போது தயாராக உள்ளோம் என்று மின் சக்தி அமைச்சர் டலஸ் அலஹபெரும அவர்கள் தெரிவித்தார்.
தேசிய கட்டத்திற்கு 103 மெகாவாட் மின்சக்தியை சேர்க்கும், மன்னாரில் உள்ள முதல் காற்றாலை மின் பூங்காவை, இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய கட்டத்திற்கு ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள் இக் கருத்துக்களை வெளியிட்டார்.
மேலும் பல கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் டலஸ் அலஹபெரும அவர்கள்,
எங்கள் கௌரவ பிரதமர் 2014 அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்து, இன்று அதன் வெற்றியை அனுபவிக்கும் ஒரு வரலாற்று தடம் பதித்த நாள். அதேபோல் ஒரு நாடாக மாத்திரமல்லாமல், மின் துறையும் வெற்றியை நோக்கி ஒரு மாபெரும் அடியை எடுத்த நாள் இது. அதிமேதகு ஜனாதிபதி இன்று இங்கு இல்லை என்றாலும், மீள்புத்தாக்க சக்தியை இந்த நாட்டில் மின்சக்தி வளத்தின்; முக்கிய ஆதாரமாக மாற்ற அவர் எடுத்த தீர்மானம் குறித்து ஒரு தேசமாக நாம் அவருக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும். முழு உலகமும் போசில எரிபொருட்களிலிருந்து விடுபட முயற்சிக்கும் ஒரு நேரத்தில், இலங்கை சுபீட்சத்தின் நோக்கு மூலம் மீள்புத்தாக்க மின்சக்தியை நோக்கி நகர்கிறது என்பதில் ஒரு நாடு என்ற வகையில் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும். இன்று நமது தேசிய பொருளாதாரத்தை மீள்புத்தாக்க மின்சக்தியுடன் சித்தப்படுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க திருப்புமுனையை குறிக்கிறது. சுற்றுச்சூழலுக்கு உகந்த இந்த காற்றாலை மின் நிலையத்தை தேசத்திற்கு நன்கொடையாக வழங்குவதற்கான இந்த வாய்ப்பை பூமியை மதிக்கும் மற்றும் நேசிக்கும் ஒரு தேசமாக பூமியின் எதிர்காலத்திற்கான ஒரு பொன்னான திருப்புமுனையாக விவரிக்க முடியும்.
இந்த மின்நிலையத்தின் சிறப்பு என்னவென்றால், இந்த திட்டத்தின் திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப அறிவை இ.மி.ச. கொண்டுள்ளது. கடந்த காலத்தைப் பார்க்கும்போது, மின் துறை அதன் நீண்ட பயணத்தில் பல சிறப்பு மைல்கற்களைக் கொண்டுள்ளது என்று தெரிகிறது. 1882 முதல் மின்குமிழை அறிமுகம் செய்தல், 1992 இல் முதல் 3 மெகாவாட் எரிவாயு மின் நிலையம் அறிமுகம், 1950 ல் லக்ஸபான நீர் மின் நிலையம் நிறுவுதல், லக்ஸபானவிலிருந்து கொலொண்ணாவை வரை முதல் மாற்றுகை பாதையை நிறுவுதல், 1976 இல் உக்குவல மின் நிலையத்தை நிறுவுதல் 2011 ஆம் ஆண்டில் முதல் நிலக்கரி மின் நிலையம் நிறுவப்பட்டது இவற்றில் குறிப்பிடத்தக்கதாகும். இவற்றுடன் இன்று எஞ்சியிருக்கும் இந்த பொன்குறி வரலாற்றில் அழியாததாகிவிடும். மன்னார் பூமியானது என்பது பல முக்கியமான ரகசியங்களை மறைத்து வைத்திருக்கும் பூமியாகும் அதனால்தான் இந்த பகுதி 2013 இல் எரிசக்தி பாதுகாப்பு மண்டலமாக நியமிக்கப்பட்டது. இந்த நிலத்தில் எரிவாயு வைப்புக்கள் உள்ளன, அவை நமது எதிர்காலத்தின் பிரகாசமான அறிகுறியாகும்.
இருளுக்கு தீர்வு ஒளி. இன்று, ஒரு தேசமாக, மீள்புத்தாக்க சக்தியில் இருந்து அந்த ஒளியைப் பெறுவதற்கான தேசிய உறுதியையும், போசில புதைபடிவ எரிபொருட்களிலிருந்து விடுபடுவதற்கான ஒற்றையாட்சி உறுதியையும் நாம் அனைவரும் கொண்டிருக்க வேண்டும். பல சிரமங்கள் இருந்தபோதிலும், இன்று தொடங்கியுள்ள இந்த புரட்சியின் மூலம், எரிசக்தி தன்னிறைவு மற்றும் சுதந்திரம் குறித்த ஒரு இலக்கை நாம் பெற முடியும்.
இந்த நேரத்தில், அனைத்து குடிமக்களும் ஒரு சுதந்திர தேசத்தில் பிறந்த ஒரு பெருமைமிக்க தேசமாக ஒன்றிணைந்து, தம்பபவனியிலிருந்து வீசும் காற்றினால் உருவாகும் மின் துறையின் திருப்புமுனையின் மூலம் சுபீட்சத்தின் நோக்கிற்கு உணர்வுட்டும் இத் தருணத்தில் அனைவரையும் வரவேற்பதாக’ அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் சூரிய, காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி திட்டங்களின் இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க, மீன்வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, அப்பகுதியின் மக்கள் தலைவர்கள் மற்றும் மின்சக்தி அமைச்சின் மூத்த அதிகாரிகள் பலர்கலந்து கொண்டனர்.