இது நவீன மின்சார புரட்சியின் ஆரம்பம்! “மீள்புத்தாக்க மின்சக்தியின் பெருமைமிக்க திருப்புமுனையான ‘தம்பபவனி” நாட்டில் கட்டப்பட்டு வரும் முதல் காற்றாலை பண்ணை பூங்காவாகும்.”
06 0

Posted by  in Latest News

இது நவீன மின்சார புரட்சியின் ஆரம்பம்!
“மீள்புத்தாக்க மின்சக்தியின் பெருமைமிக்க திருப்புமுனையான ‘தம்பபவனி” நாட்டில் கட்டப்பட்டு வரும்
முதல் காற்றாலை பண்ணை பூங்காவாகும்.”

நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்காக மீள்புத்தாக்க எரிசக்தியைப் பயன்படுத்துவது குறித்த தனது அரசாங்க கொள்கை அறிக்கையில் சேர்த்த முதல் அரசாஙடக தலைவரான அதிமேதகு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷ அவர்கள் எனவும், மின்சக்தி பாதுகாப்பு மற்றும் மின்சக்தி தன்னிறைவு ஆகியவற்றில் கவனம் செலுத்தும் ஒரு அரசாக மின்சார செலவைக் குறைப்பதன் மூலம் மக்களுக்கு மிகவும் நிலையான, தொடர்ச்சியான, வசதியான மற்றும் செலவு குறைந்த முறையில் மின்சக்தியை வழங்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் அதற்காகவே மின்சக்தி புரட்சி ஆரம்பமாகி உள்ளதெனவும் மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹபெரும அவர்கள் தெரிவித்தார்.

நாட்டின் மின் உற்பத்தியில் எதிர்கால திருப்புமுனையை குறிக்கும் வகையில் இந்நாட்டில் நிறுவப்பட்ட, டிசம்பர் 08 ஆம் தேதி திறந்து வைக்கப்படும் தம்பபவனி காற்றாலை மின் நிலைய பூங்கா குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று (06) காலை மின் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தில் நடைபெற்ற சிறப்பு ஊடகவியலாளர் கூட்டத்தில் அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.

அமைச்சர் மேலும் பல கருத்துக்களை வெளியட்ட அமைச்சர் அவர்கள், “மீள்புத்தாக்க சக்தியை உருவாக்கக்கூடிய வழிகள் தொடர்பில் ஆராய்வதற்கும், தொடர்புடைய நிபுணர்களின் ஆலோசனையைப் பெற்று இது தொடர்பில் அமைச்சரவை பத்திர அனுமதி கிடைக்க பெற்றது 2014 மார்ச் மாதத்தில் ஆகும்;. அப்போதைய ஜனாதிபதி தற்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களாகும். ஒரு அரசியல்வாதியாகவும், தலைவராகவும், அவர் தனது சகாப்தத்தில் ஆரம்பித்த பணிகள் பலனளிப்பதைக் கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைவார். கடந்த 7 ஆண்டுகளில் இந்த நாட்டில் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் தொடங்கப்படவில்லை. நாம் வரலாற்றை சுட்டி காட்டவில்லை. எவ்வாறாயினும், இதன் மூலம் நம் நாட்டின் பொருளாதாரத்திற்கு செய்யக்கூடிய பங்களிப்பு குறித்து கவனம் செலுத்தப்படல் வேண்டும். ஒரு நாடு என்ற வகையில், ஒவ்வொரு ஆண்டும் மின்சார தேவை அதிகரித்து வரும் நிலையில், மீள்புத்தாக்க மின்சக்;தி உற்பத்தியில் நாம் கவனம் செலுத்த வேண்டும். தம்பபாவனி காற்றாலை பண்ணையால் எதிர்வரும் 10 ஆண்டுகளுக்குள் 800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும்”என்றார்.
மன்னார் மாவட்டத்தில் தம்பபவனி காற்றாலை மின் பூங்கா அமைப்பதில் பல முக்கிய காரணிகள் கவனத்தில் கொள்ளப்பட்டுள்ளன. இது 100மூ சூழல் நட்புறவுடன் அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதிப்பைத் தடுக்கும் பொருட்டு, காற்றாலை பண்ணைகளில் பொதுவாகக் காணப்படாத கதிர் வீச்சுகளும்; கூட ஒவ்வொரு காற்றாலைக்கும் வடிவமைக்கப்பட்டுள்ளன, குறிப்பாக இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்குச் செவிசாய்த்து, அவர்களின் கருத்துக்களை அனுமதிப்பதன் மூலமும், மன்னார் வலயத்திற்கு இதன் மூலமான தாக்கத்தையும் ஆய்வு செய்து, மக்களின் குடி நீர் மற்றும் கழிவுகளின் போக்குவரத்து தொடர்பிலும் மன்னார் உட்பட முழு வலயத்திலும்; உள்ள மக்களின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சியை மையமாகக் கொண்டு இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று அமைச்சர் டலஸ் அலஹபெரும மேலும் தெரிவித்தார்.

எதிர்வரும் டிசம்பர் 8 ஆம் திகதி தேசத்திற்கு பரிசாக வழங்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் திட்டம் 103 மெகாவாட் மின்சாரத்தை கட்டத்திற்கு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட 141 மில்லியன் அமெரிக்க டொலர் மொத்த முதலீட்டின் மீதமுள்ள தொகையில் மேலும் 06 டர்பைன்களை பொருத்த அமைச்சரவையின் ஒப்புதல் பெறப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இதற்கு பிறகு இந்த மின்சக்தி மேம்பாட்டு நடவடிக்கைகளை அரசு மற்றும் தனியார் துறைகளின் ஆதரவோடு விரிவுபடுத்துவதாக நம்புகிறேன் என்று கூறிய அமைச்சர்; அவர்கள், அதன் திட்டங்களை வகுப்பதில் இலங்கை மின்சார சபையின்; பலம் மற்றும் திறன்களைப் பாராட்டுவதாகவும் அமைச்சர் கூறினார். உலகின் உயர் தரம் வாய்ந்த காற்றாலை மின் உற்பத்தி தொழில்நுட்பத்துடன் தம்பபவனி பூங்காவை வழங்க இலங்கை மின்சார சபை (இ.மி.ச.) தயாராக உள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.
நாட்டில் போசில எரிபொருட்களிலிருந்து மின்சாரம் தயாரிக்க சுமார் 30 ரூபாய் செலவாகிறது, ஆனால் காற்றாலை மின்சாரம் உற்பத்திக்கு ஒரு அலகிற்கு சுமார் ரூபாய் 8 முதல் 9 வரை செலவாகிறதுதுடன் இது நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் நிவாரணம் மற்றும் நாட்டிற்கு ஒரு ஆசீர்வாதம் என்று கூறிய அமைச்சர், இது அடுத்த 20 ஆண்டுகளுக்குள் 8000 மில்லியன் அலகு மின்சாரத்தை நாட்டிற்கு வழங்கப்படும் என அமைச்சர் அவர்கள் குறிபிட்டார்.
அதேபோல் காற்றாலை மின்சக்தியில் இருந்து மின்சாரம் தயாரிப்பதன் மூலம் அடுத்த 20 ஆண்டுகளுக்குள் நாட்டிலிருந்து 2,000 மில்லியன் லிட்டர் டீசலை எரியாமல் சேமிக்க முடியும் என்றும், இது குறைந்தபட்சம் 5.7 மில்லியன் மெட்ரிக் டொன் கார்பனை சுற்றுச்சூழலுக்கு வெளியேற்றுவதை தடுக்கும் என்றும் அமைச்சர் கூறினார்.
தம்பபாவனி காற்றாலை மின் பூங்கா தேசிய கட்டத்தில் ஒரு மீள்புத்தாக்க மின் நிலையமாக சேரும் வரையும், அரசியல் பின்னணியைப் பொருட்படுத்தாமல், அனைத்து பங்குதாரர்களுக்கும் இந்த செயல்முறைக்கு அவர்கள் அளித்த பங்களிப்புக்காக அமைச்சர் தனது நன்றியைத் தெரிவித்தார். அதேபோல் மீள்புத்தாக்க எரிசக்தி மூலம் நமது தேசிய பொருளாதாரத்தை வலுப்படுத்த முற்படும் எந்தவொரு தொழில்முனைவோருக்கும் 7 ஆண்டு வரி சலுகை வழங்கப்படும் என்றும் இது தொடர்பான பல புதிய தொழில்கள் எதிர்காலத்தில் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எதிர்காலத்தில் சியம்பலாண்டுவில் முதல் சூரிய பூங்காவைக் கட்டுவதாக எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் இலங்கை மின்சார சபை தலைவர் விஜித ஹெரத் மற்றும் இலங்கை மின்சார சபையின் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required