Posted by superadmin in Latest News
“மின்சார சட்டத்தை மீறி ஒரு அமெரிக்க நிறுவனத்திடமிருந்து மின்சாரம் கொள்முதல் செய்ய அரசு நடவடிக்கை”
மேற்கண்ட தலைப்புடன் 2020 நவம்பர் 15 அன்று ஒரு வார இதழில் வெளியிடப்பட்ட செய்தி அறிக்கை முற்றிலும் தவறானது மற்றும் தொடர்புடைய அமைச்சரவை ஆய்வறிக்கையின் உண்மையான மற்றும் தெளிவான நோக்கமானது,
1. இலங்கைக்கான அமெரிக்க தூதர் மூலம் M / s New Fortress Energy என்ற அமெரிக்க நிறுவனம் முன்வைத்த திட்டத்தை 2019 ஆம் ஆண்டில் அரசாங்கத்திற்கு சமர்ப்பிக்க 5 ஆண்டுகளுக்கு மட்டுமேயான ஒரு திரவமாக்கப்பட்ட இயற்கை எரிவாயு (எல்.என்.ஜி) மூலம் செய்யப்படும் மின் உற்பத்தி அலகு ரூ .18 செலவில் வழங்கப்படத்தக்கது குறித்து எங்கள் அமைச்சானது ஆய்வு செய்துள்ளதுடன், தற்போதைய மின் உற்பத்தியுடன் ஒப்பிடும் போது மின் உற்பத்தியின் அதிக செலவுமிக்க டீசல் உற்பத்தியுடன் ஒப்பிடும்போது (ஒரு அலகிற்கு சுமார் ரூ .30.00) நாட்டிற்கு நன்மை பயக்கும் என்பதால் தொடர்புடைய தொழில்நுட்ப மற்றும் வணிக அம்சங்கள் உள்ளிட்ட விரிவான முன்மொழிவை கோருவதற்கும்,
2. குறித்த திட்டமானது பொருத்தமான திட்டமாக தொழில்நுட்ப மதிப்பீட்டால் உறுதிப்படுத்தப்பட்டால் மட்டுமே இதே போன்ற திட்டங்களை வழங்குவதற்கான வாய்ப்பை வேறு எந்த முதலீட்டாளருக்கும் வழங்குவதற்கும்,
3. அமைச்சரவையால நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தைக் குழு (CANC) ஊடாக இதுபோன்ற அனைத்து திட்டங்களையும் மதிப்பீடு செய்து, தொழில்நுட்ப ரீதியாகவும், நிதி ரீதியாகவும் பொருத்தமான ஒரு திட்டத்தைத் தேர்ந்தெடுப்பதற்கு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறும்.
மேலும், தலைப்புச் செய்த மற்ற குற்றச்சாட்டு என்னவென்றால், ஏப்ரல் 2021 இல் காலாவதியாகவுள்ள எம்பிலிப்பிட்டிய மற்றும் மாத்தறை “ஏஸ் பவர்” மற்றும் “சபுகஸ்கந்தை “ஆசியா பவர்” எரிபொருள் எண்ணெய் மின் உற்பத்தி நிலையங்களின் ஒப்பந்த காலத்தை 2023 ஆக நீட்டிக்க குறித்த அமைச்சரவை பத்திரத்தில் அனுமதி கோரப்பட்டது.
இந்த செய்தி நேரடியாக வாசகரை தவறாக வழிநடத்துகிறதுடன் குறித்த அமைச்சரவை பத்திரத்தில்;, அமைச்சரவை பத்திரத்தில் அமைச்சர் கோரியது என்னவெனில் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடனான ஒப்பந்தங்களை நீடிக்க இலங்கை மின்சார சபையின் வேண்டுகோளிற்கு இணங்க முதலில் இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்தின் (PUCSL) அனுமதியைப் பெற இலங்கை மின்சார சபைக்கு உத்தரவிட வேண்டும் என்றும், அந்த ஒப்புதல் பெறப்பட்டால், சம்பந்தப்பட்ட ஒப்பந்தங்களுக்கான திட்டக் குழு மற்றும் உடன்படிக்கை குறித்து கலந்துரையாட அமைச்சரவையால் ஒரு பேச்சுவார்த்தைக் குழுவை நியமிக்க திறைசேரி செயலாளருக்கு அறிவுறுத்துவதாகும்.
மிகவும் பொறுப்பான மற்றும் உண்மையுள்ள ஊடக பணியில் ஈடுபட்டுள்ள நீங்கள் இதற்கு தேவையான விளம்பரம் வழங்குமாறு கௌரவத்துடன் கேட்டுக்கொள்கிறோம்.