Posted by superadmin in Latest News
எதிர்வரும் மாதம் மன்னாரில் முதல் காற்றாலை பண்ணை திறக்கப்படுவதோடு இலங்கையில் எரிசக்தி புரட்சி தொடங்குகிறது.
மின்சாரம் ஒரு அடிப்படை மனித உரிமை. முழு மக்களின் அந்த உரிமை எதிர்வரும் ஆண்டில் உறுதி செய்யப்படும்
பொலனறுவையில் மின்சக்தி அமைச்சர் குறிப்பிட்டார்.
அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய அவர்களின் முதல் பதவி காலத்தில் இரண்டாம் ஆண்டு நிறைவின் பின் 2021 நவம்பர் 16 ஆம் தேதிக்கு முன்னர் இலங்கையில் மின்சார நுகர்வோரின் எண்ணிக்கை 100மூ ஆக இருக்க வேண்டும் என்று மின்சார அமைச்சர் டலஸ் அலஹபெரும சமீபத்தில் பொலனறுவைவில் தெரிவித்தார்.
பொலனறுவை மாவட்டத்தில் கிராம பொருளாதார மேம்பாடு தொடர்பில் செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் அவர்கள் இந்த கருத்துக்களை வெளியிட்டார். இந்தக் கூட்டம் பொலனறுவை மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.
மேலும் பல கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் அவர்கள்.
பொலனறுவை மாவட்டத்தில் மட்டும் 1359 குடும்பங்கள் மின்சாரம் இல்லாமல் உள்ளன. தற்போதைய அரசாங்கம் மின்சாரத்தை ஒரு அடிப்படை மனித உரிமையாக கருதுகிறது. எனவே, தொலைதூர மலை உச்சியில் கட்டப்பட்ட வீடுகளில் வசிக்கும் குடிமக்களுக்கு பிரதான வலையமைப்பிற்கு அணுக முடியாவிட்டால், அத்தகைய தொலைதூர பகுதிகளுக்கு சூரிய சக்தி மின்சாரம் வழங்க மின்சக்தி அமைச்சானது அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது.