இலங்கை அரசாங்கத்தின் கோவிட் உடன் போராட ஜப்பானில் இருந்து அமெரிக்க டொலர் 9.6 மில்லியன் …
21 0

Posted by  in Latest News

இலங்கை அரசாங்கத்தின் கோவிட் உடன் போராட ஜப்பானில் இருந்து அமெரிக்க டொலர் 9.6 மில்லியன் …

மின் துறையின் வளர்ச்சிக்கு முழு ஆதரவு…

அமைச்சர் டலஸ் அலஹபெரும மற்றும் ஜப்பானிய தூதர் சந்திப்பின் போது தெரிவித்தார்.
இலங்கை அரசாங்கத்தால் இப்பிராந்தியத்தில் மிகவும் பயனுள்ள கொரோனா ஒழிப்பு நடவடிக்கைக்கு இலங்கையுடனான ஜப்பானின் வரலாற்று நட்பை அடையாளப்படுத்தும் வகையில் ஜப்பான் 9.6 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்குவதாகவும், இலங்கையின் மின்சாரத் துறையின் மேம்பாட்டிற்காக ஜப்பானுக்கு தொழில்நுட்ப மற்றும் நிதி உதவிகளை தொடர்ந்து வழங்கும் என்றும் இலங்கைக்கான ஜப்பானிய தூதர் திரு அகிரா சுகியாமா தெரிவித்தார்.
அண்மையில் அமைச்சக வளாகத்தில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹபெருமவுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது தூதர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
நிலையான அபிவிருத்தி இலக்குகளை அடைவதன் மூலம் தரமான மற்றும் மலிவான மின்சார சேவையை வழங்குவதே தனது நோக்கம் என்று அமைச்சர் டலஸ் அலஹபெரும குறிப்பிட்டார், ஜனாதிபதியால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கானது 2030 ஆம் ஆண்டில் இலங்கையின் மொத்த மின்சார உற்பத்தியில் 70% பசுமை மற்றும் மீள்புத்தாக்க ஆற்றலுடன் அடைவதே ஆகும்.
இலங்கையில் எரிசக்தி துறையை அபிவிருத்தி செய்வதற்கு தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளை அவர் பாராட்டுவதாகவும் இலங்கைக்கு எல்.என்.ஜி. மின் உற்பத்தி நிலையம் பெற்று கொடுக்கவும் எல்.என்.ஜி விநியோகிக்கவும் ஜப்பான் அரசின் கவனம் ஈர்க்கப்பட்டுள்ளதாக ஜப்பானிய தூதர் எச்.இ. திரு அகிரா சுகியாமா கூறுகிறார்.
இலங்கை மின் துறையை நவீனமயமாக்கும் பணியில் மின்சாரத் தொழிலாளர்களை சாதகமாக ஊக்குவிப்பதிலும் பாதுகாப்பதிலும் தொடர்பிலான உகந்த நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்கள் அதற்காக பெற்று கொடுக்கப்படும் சிறந்த தொழில்நுட்ப மற்றும் நிதி உதவியை வழங்கியதற்காக இலங்கை அரசாங்கத்தின் சார்பாக ஜப்பான் அரசுக்கும் ஜப்பான் மக்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
இந்த நிகழ்வில் ஜப்பான் அரசாங்கத்தின் முதல் செயலாளர் சிஹாரு ஹெஷியா மற்றும் ஜப்பான் தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் கெஞ்சி சாகயா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a comment

* required