“மின் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதற்கான தேசிய தேவையை நாங்கள் ஒரு சவாலாக ஏற்றுக்கொள்கிறோம்…”
25 0

Posted by  in Latest News

“மின் உற்பத்தியை இரட்டிப்பாக்குவதற்கான தேசிய தேவையை நாங்கள் ஒரு சவாலாக ஏற்றுக்கொள்கிறோம்…”
இலங்கையின் முதல் மைக்ரோ க்றிட் மின் திட்டத்தை வெளிப்படுத்தி மின்சக்தி அமைச்சர்;
டலஸ் அலஹபெரும அவர்கள் குறிப்பிடடடார்.

“மின்சக்தி சவாலை எதிர்கொள்ளும் ஒரு நாடு என்ற முறையில், மின்சாரம் தொடர்பான மின்சாரத்தை நவீனமயமாக்குவது குறித்து இலங்கை கல்வி முறை அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். இந்த நாட்டில் வங்கித் துறை எந்த எல்லைகளும் அல்லது மாறுபாடுகளும் இல்லாமல் மின்சாரம் தொடர்பான பணிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். அதே போல் மின்சக்தி துறை நாட்டின் அனைத்து துறைகளிலும் கவனம் செலுத்தும் விடயமாக நிரலில் சேர்க்க வேண்டும். ஒரு நாடு என்ற வகையில் இந்த விடயங்களைப் பற்றிய சரியான விஞ்ஞான ஆய்வுக்குப் பிறகு வரும் தீர்மானங்களில் மட்டுமே நமக்கு முன்னோக்கி செல்லும் வழி காணப்படுகின்றது. நமது வரலாற்றில் தவறான இடம் பொதுத்துறையை தனியார் துறை என பிரிப்பதல், கோட்டைகளை உருவாக்குதல் போன்றனவாகும். நமது அரசு எதிர்கொள்ளும் தற்போதைய சவால்களை இதுபோன்ற பிளவுப்பட்டு வேறுப்பட்டு; வலுவாக தீர்க்க முடியாது என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும், ”என்று மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹபெரும அவர்கள் கூறினார்.
இலங்கையின் முதல் மைக்ரோ க்றிட் ஆரம்ப திட்டத்தை இலங்கை மின்சார தனியார் நிறுவனம் மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து நேற்று (24) பிற்பகல் கிங்ஸ்பரி ஹோட்டலில் அறிமுகப்படுத்தும் சந்தர்ப்பத்திலே அமைச்சர் இந்த கருத்துக்களை வெளியிட்டார்.
இந்த திட்டத்திற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி (ஆஅ.வ.) 1.8 மில்லியன் அமெரிக்க டொலர நிதியளித்துள்ளதுடன் மற்றும் டிமோ நிறுவனம், ஜெர்மன் எரிசக்தித் முன்னோடியான DHYBRID உடன் இணைந்து, மின் உற்பத்தி மற்றும் சேமிப்பகத்தை உள்ளடக்கிய ஒரு விரிவான மீள்புத்தாக்க மைக்ரோகிரிட் மின் தீர்வை வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மைக்ரோ கிரிட் மின் முறைமை இதுவரையிலும் நாடு முழுவதும் நுகர்வோருக்கு தொடர்ந்து மின்சாரம் விநியோகிக்க முன்மொழியப்பட்ட மாதிரியாகும்.
இங்கு கருத்து வெளியிட்ட மின்சக்தி அமைச்சர் அலஹப்பெரும அவர்கள்…….
“ஜனாதிபதி அவர்கள் நாட்டிற்கு இலக்கை வழங்கியுள்ளார். 2030 க்குள் மீள்புத்தாக்க மற்றும் பசுமை மின்சாரத்தினை 70% ஆக உயர்த்துதல். இந்த இலக்கைப் பின்தொடர்வதற்கு, இரண்டு இலக்குகளை அடைய வேண்டும், அவற்றில் ஒன்று தற்போதைய மின்சாரத்தை 2023 க்குள் இரட்டிப்பாக்குவதாகும். மற்றொரு குறிக்கோள் 2023 க்குள் டீசலை தங்கியுள்ள நமது பொருளாதாரத்திற்கு மின்சார பங்களிப்பு குறைந்தபட்சம் 5% க்கும் குறைவாக மாற்றல். இன்று அறிமுகப்படுத்தப்பட்ட மைக்ரோ க்றிட் தொழினுட்பம் இந்த குறிக்கோளை பின்பற்றுவதில் மிக் முக்கியமான தலையீட்டை வழங்குகின்றது. இன்று நாம் அனைவரும் இலங்கை தொழினுட்பத்தின் நவீனமயத்தை கண்ணுக்கூடாக காணப்பட்ட சாட்சியாளர்களாகின்றோம். இன்று மின் சக்தி துறையில் ஓர் திருப்பு முனை ஏற்பட்டுள்ளது. ஒரு தேசிய சவாலாகக் கருதப்படும் சக்தி மற்றும் ஆற்றல் விடயத்தில், அனைத்து வேறுபாடுகளையும் சமாளிக்க பல கட்சிகள் இன்று ஒன்றுபட்டுள்ளன, ஒரு நாடாக நாம் இந்த சவாலை ஏற்க வேண்டும்.
அரசியல் அகராதியில், அதிகாரப் பகிர்வு மற்றும் அதிகார வழங்கல் தொடர்பில் பல கருது;து வேறுபாடுகள்; உள்ளன. அரசியலில் இது ஒரு சாதாரண விடயம். ஆனால் மின்சக்திக்கான சவாலில், அதிகாரப் பகிர்வு, அதிகார வழங்கல், மிகவும் பயனுள்ள வழிமுறையாக இருப்பது உறுதி. தேசிய சவால்களை ஏற்றுக்கொள்வதற்கான சிறந்த எடுத்துக்காட்டு தான் இன்று நடைபெறும் இவ்விடயம். மின்சார சவாலில் எங்களுக்கு கவனத்தில் கொள்ள வேண்டியப ல விடயங்கள் உள்ளன. நியாயமான விலையில் மக்களுக்கு எவ்வாறு மின்சாரம் வழங்குவது. தடையற்ற தரமான மின்சார விநியோகத்தை எவ்வாறு வழங்குவது. சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது. இந்த சவால்களைப் பின்தொடர்வதில், அனைத்து கட்சிகளும் இன்று நாம் முன்வைத்துள்ள முன்னுதாரணத்தை அவர்களின் எதிர்காலத் திட்டங்களில் ஒரு முக்கிய வழிகாட்டியாகப் பயன்படுத்தும் என்று நம்புகிறேன்.
எங்கள் மின்சக்தி அமைப்பில் 10% நுகர்வோருக்கு இடையே கொண்டுவரும் இலங்கை மின்சார தனியார் நிறுவனம் இந்த மைக்ரோ கிரிட் திட்டத்தின் பங்காளிகளில் ஒன்றாகும். நம் நாட்டின் தேசிய மின் பொறியியல் கல்வியில் ஏறத்தாள 50% வழங்கும் மொரட்டுவை பல்கலைக்கழகம், அதிகபடியான மின்சாரம் கிரயத்தை ஏற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி, இந்த நாட்டில் நவீனமயம் மற்றும் தொழில்நுட்பத்திற்கு வரலாற்று உரிமை கொண்டுள்ள டிமோ, நிறுவனம் மற்றும் சர்வதேச நிறுவனமான ஜெர்மன் அரசாங்கத்தின் ஹைபிரிட் நிறுவனம் அனைத்தும் இந்த திட்டத்தில் பங்காளிகளாகும். இந்த கட்சிகள் அனைத்தும் ஒரு முக்கியமான தேசிய பணிக்காக இன்று ஒன்றுபட்டுள்ளன.
இந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பு திட்டத்தில் அர்ப்பணிப்புடன் வழிநடத்திய அனைவருக்கும் இலங்கை அரசு சார்பாக, மின்சக்தி அமைச்சானத்தை கௌரவத்தை தெரிவிக்கின்றது” என குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எஸ். எல். பீரிஸ், மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா, டிமோ நிறுவனத்தின் தலைவர் ரஞ்சித் பண்டிதகே, இலங்கை மின்சார தனியார் நிறுவன தலைவர் சட்டதரணி அதூல பிரியதர்ஷனா டி சில்வா, இலங்கை மின்சார சபை தலைவர் விஜிதா ஹெரத், ஆகுpயோர் பங்கேற்றனர்.

Leave a comment

* required