Posted by superadmin in Latest News
மின்சக்தி அமைச்சின் மீள்புத்தாக்க மின்சக்தி வேலைத்திட்டங்களுக்கு
இத்தாலி அரசின் ஒத்துழைப்பு…..
கழிவு முகாமைத்துவத்திற்கு தீர்வாக கழிவுப் பொருட்களில் மின்சார உற்பத்தியை மேற்கொள்ளல் வேலைத்திட்டம் தொடர்பில் பலன் வாய்ந்த கலந்துரையாடல்…
அகற்றப்படும் கழிவுகள் தொடர்பில் வர்த்தக ரீதியாக பெறுமதியை சேர்த்து, கழிவு பொருட்களை பயன்படுத்தி மின்சாரத்தை உற்பத்தி செய்தல் மூலம் இலங்கையின் மின்சக்தி துறைக்கு மிக்ப் பெரிய பங்களிப்பை பெற்று கொடுக்க வாய்ப்புள்ளமையால் அதற்காக தம் நாட்டின் ஒத்துழைப்பை வழங்க வழங்க முடியும் எனவும் இலங்கைக்கான இத்தாலிய தூதர் எச்.இ. செல்வி ரீட்டா மானெல்லா வலியுறுத்துகிறார்.
அண்மையில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெருமவுடன் அதிகாரப்பூர்வ கலந்துரையாடலில் கலந்து கொண்டபோது தூதர் இதனை தெரிவித்தார்.
இதுவரையிலும் இலங்கையில் மின் துறை இலாபகரமான மீள்புத்தாக்க சக்தி வளங்களை நோக்கி நகர்ந்து வருவதால், குப்பை போன்ற மாற்று எரிசக்தி வளங்களை முயற்சிப்பது மிகவும் பொருத்தமானதாக இருக்கும் என்று தூதர் கூறியதுடன் அதற்காக தமது நாடு முதலிடுவதற்கு வாய்ப்பு காணப்படுவதாக அமைச்சர் டலஸ் அலஹப்பெருமவிற்கு குறுpப்பிட்டார்.
தற்போது பல நாடுகளில் ஒரு பெரிய பிரச்சினையாக இருக்கும் கழிவுகளை அகற்றும் பிரச்சினைக்கு தீர்வாக இதுபோன்ற ஒரு திட்டத்திற்கு தனது ஆதரவை வழங்கியதற்காக மின்சக்தி அமைச்சர் இத்தாலிய தூதருக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல் அதி மேதகு ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் நிலையான மின்சக்திக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்றமையால், கழிவு பொருட்களை பயன்படுத்தி மின்சக்தி உற்பத்தி செயல்முறை இலங்கைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
சூழல் மாசுபடுதல் அதேபோல் சுற்றுச்சூழல் மாசுபாட்டிற்கும் காரணமாக அமைந்துள்ள இந்த கழிவு பிரச்சினைக்கு ஓர் பொருளாதார மதிப்பைக் கொடுப்பதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிக்கக்கூடிய ஒரு முறையாக பயன்படுத்தி மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவித்து அது தொடர்பில் மேலும் ஆய்வு செய்யப்படும் எனவும் அது இந்நாட்டின் நாளாந்த மற்றும் சமூக வரைவிற்கு அதேபோல் மின்சக்தி துறைக்கு ஒரு தீர்வாகுமாயின் கழிவு முகாமைத்துவத்திற்கு தீர்வாக கழிவுப்பொருட்களைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் முறையைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அலஹபெரும மேலும் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் இலங்கையில் உள்ள இத்தாலிய தூதரகத்தின் வணிகச் செயலாளர் ஆண்ட்ரியா பக்ரினியும் கலந்து கொண்டார்.