புதிய மின் சக்தி மறுமலர்ச்சிக்கு அமெரிக்க ஆதரவ..
17 0

Posted by  in Latest News

புதிய மின் சக்தி மறுமலர்ச்சிக்கு அமெரிக்க ஆதரவூ..

இலங்கையின் பொருளாதாரத்தை சுட்டெரிக்கும் டீசல் மின் உற்பத்தி நிலையங்களுக்கு பதிலாக தேசிய மின் உற்பத்தியில் 70மூ பசுமை மின் மற்றும் மீள்புத்தாக்க வளங்களை பயன்படுத்தி உற்பத்தி செய்ய கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதி அவர்களின் “சுபீட்சத்தின் நோக்கு” விற்காக டலஸ் அலஹப்பெரும அவர்களின் தலைமையில் மின் சக்தி அமைச்சில் அமுல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள தேசிய மின்சக்தி திட்டத்திற்கு தேவையான அனைத்து ஒத்துழைப்புகளையூம் பெற்று கொடுக்க தயாராக உள்ளதாக அமெரிக்க இராச்சியத்தின் இலங்கை உயர் ஸ்தானிகர் அலினா பி. டெப்லிட்ஸ் வலியூறுத்துகிறார்.
நேற்று காலை மினசக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெமவூடன் அதிகாரப்பூர்வ கலந்துரையாடலின் போது திருமதி அலினா இந்த கருத்துக்களை தெரிவித்தார். இந்த சந்திப்பு மின்சக்தி அமைச்சின் வளாகத்தில் நடைபெற்றதுடன் அமெரிக்க இராச்சியத்தின் பொருளாதார துறை தலைமையாளர் திருமதி சுசன் எப் வோக் அவர்களும் மற்றும் மின்சக்தி அமைச்சின் செயலாளர் திருமதி வசந்தா பெரேரா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பையூம் இராஜதந்திர உறவூகளை மேம்படுத்தும் நோக்கில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் இலங்கை மின் சக்தி துறையின் எதிர்கால திட்டங்கள் மற்றும் மேம்பாட்டு முறைகள்; குறித்து மின்சக்தி அமைச்சர் மற்றும் அமெரிக்க இராச்சிய பிரதிநிதிகளிடையே விரிவாக கலந்துரையாடல் இடம்பெற்றது.
கலந்துரையாடலில் தமது கருத்துக்களை வெளியிட்ட அமைச்சர் அவர்கள் தேசிய மின் உற்பத்திக்கு பசுமை மற்றும் மீள்புத்தாக்க சக்தி வளங்களின் பங்களிப்பு 70% ஆகவூம்இ டீசலின் பங்களிப்பு 5% ஆகவூம் குறைக்கப்படும் என குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள் இது தொடர்பாகஇ தற்போதுள்ள மீள்புத்தாக்க வள ஆதாரங்களை உருவாக்கவூம்இ புதிய வள ஆதாரங்களை ஆராயவூம் திட்டங்கள் உள்ளதென மேலும் தெரிவித்தார்.
இலங்கையின் மின்சக்தி துறையின் முன்னேற்றத்திற்காக மீள்புத்தாக்க சக்தி மேம்படுத்தல் தொடர்பில் தேவையான தொழினுட்ப ஒத்துழைப்பை வழங்கவூம்இ இந்நாட்டில் புதிய மீள்புத்தாக்க திட்;டங்களை நிறுவூதல் தொடர்பில் தமது நாட்டின் முதலீட்டாளர்களின் கவனத்தை ஈர்க்கவூம் முயற்சிப்பதாக குறிப்பிட்ட அமெரிக்க இராச்சிய பொருளாதார தலைமையாளர் சுசன் எப் வோக் அவர்கள்இ இந்நாட்டில் மீள்புத்தாக்க சக்தி திட்டங்களை நிறுவூதல் தொடர்பில் சலுகை கடன் முறையை அமுல்படுத்த யோசணை உள்ளதாகவூம் தெரிவித்தார்.

Leave a comment

* required