Posted by superadmin in Latest News
“தேசிய மின் கட்டத்திற்கு புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பங்களிப்பு 2030 ஆண்டு வரையில் 80% ஆக அதிகரிக்கும் …”
(சுரியஇ காற்று மற்றும் நீர் மின் உற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர்
துமிந்த திசாநாயக்க வலியூறுத்துகிறார்.)
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் செழிப்பான இலக்கின் பிரகாரம் 2030 ஆம் ஆண்டு வரையில் தேசிய மின்சக்தி முறைமையானது மீள்புத்தாக்க சக்தி பங்களிப்பு 80% ஆக உயர்த்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையூம் உடனடியாக மேற்கொள்வதாக சூரியசக்திஇ காற்று மற்றும் நீர் மின்னுற்பத்தி கருத்திட்ட இராஜாங்க அமைச்சர் துமிந்த திசாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.
2030 ஆம் ஆண்டிற்குள் மீள்புத்தாக்க சக்தி மேம்பாட்டு இலக்குகளை அடைய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேடியறிய பத்து உறுப்பினர்களை கொண்ட நிபுணர்கள் குழுவை சந்தித்த போது அமைச்சர் இதனை தெரிவித்தார். இந் நிகழ்வில் மின்சக்தி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராஇ இராஜாங்க செயலாளர் ஹேமந்த சமரகோன் ஆகியோர் உள்ளிட்ட அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இது குறித்து கருத்து தெரிவித்த நிபுணர் குழு உறுப்பினர்கள்இ மீள்புத்தாக்க வளங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக காணப்படாமையால்;இ இது தொடர்பாக சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று கூறினர். இலங்கையில் தற்போதுள்ள மீள்புத்தாக்க வளங்களால் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய போதுமானதா என்பதில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் அமைச்சரிடம் தெரிவித்தனர்.
தற்போது இலங்கையில் மின் துறையின் திசையானது மீள்புத்தாக்க சக்தி வளங்களை நோக்கி நகர்ந்துள்ளதுமையால் அதன் அடிப்படையில்; எதிர்கால வளர்ச்சி இலக்குகளை அடையஇ அரசாங்க துறைக்கு இணையாக மீள்புத்தாக்க சக்தி தொழில்முனைவோர் மற்றும் பொதுத்துறை முதலீட்டாளர்களை ஊக்குவிக்கக்கூடிய யோசணைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவூம் அமைச்சர் திஸாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.
அவ்வாறே மீள்புத்தாக்க சக்தி ஆற்றலுடன் நாட்டை செழிப்புக்கான பாதையில் கொண்டு செல்ல தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்றும்இ அனைத்து செலவூகள்இ அது தொடர்பிலான கால விரயம் மற்;றும் விரயாமாகும் பணம் ஆகியவற்றை எதிர்கொண்டு முடிவூகளை எடுக்க தயங்க மாட்டேன் என்றும் சுரியஇ காற்று மற்றும் நீர்மனுற்பத்தி அமைச்சர் திஸாநாயக்க அவர்கள் மேலும் வலியூறுத்தினார்.