மின்சக்தி அமைச்சரின்  ஆலோசணையில் கலுகெலே ஒளிமயமானது…..
10 0

Posted by  in Latest News

மின்சக்தி அமைச்சரின்
ஆலோசணையில் கலுகெலே ஒளிமயமானது…..

மின்சாரம் கனவாகவே மாத்திரம் காணப்பட்டஇ குப்பி லாம்புகள் பாவனையில் வாழ்ந்த ரிதிமாலியெந்த பிரதேச செயலகத்திற்கு சொந்தமான 60 குடும்பங்கள் வாழும் மிகவூம் பின் தங்கிய கிராமமான கலுகெலே வாழ் மக்களின் இருண்ட வாழ்க்கை தொடர்பில் இன்று (10) ஊடகத்தில் வெளியானதை தொடர்ந்துஇ உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கலுகெலே வாழ் மக்களின் வாழ்ழவ ஒளிமயப்படுத்தும் முகமாக தேவையான நடவடிக்கைகளை காலம் தாழ்த்தாது நடைமுறைப்படுத்துமாறு டலஸ் அலஹப்பெரும் அவர்கள் மின்சக்தி அதிகாரிகளுக்கு அறிவூரை வழங்கினார்.
பல ஆண்டுகளாக குறித்த கிராம வாசிகள் மின்சார வசதி இன்மை தொடர்பில் பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்த போதும் இது வரையிலும் அது தொடர்பில் எவ்விதமான வெற்றிகரமான தீர்வூகளும் கிடைக்கப்பட வில்லை. இது தொடர்பில் இலங்கை மின்சார சபையின் குறித்த பிரிவடம் வினவிய அமைச்சர் அவர்கள் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் குறித்த விடயம் தொடர்பில் சாதகமான பதிலை பெற்று தருமாறு வலியூறுத்தினார்.
மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்களின் ஆலோசணையின் பிரகாரம் செயற்பட்டஇ இலங்கை மின்சார சபை அதிகாரிகள் குறித்த விடயம் தொடர்பில் தேடியறிந்ததை தொடர்ந்துஇ 2017 ஆம் ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்ட ஊவா உத்தியானம் திட்டத்தின் கீழ் குறித்த கிராமத்திற்கு மின்சாரம் பெற்று கொடுக்க நடவடிக்கை எடுத்த போதும்இ மின் மார்க்கத்தை நிர்மாணிக்க தடையான காணப்பட்ட மரங்களை நீக்க மடோல்சீம தோட்ட நிறுவனம் மறுப்பு தெரிவித்தததை தொடர்ந்து குறித்த பகுதிக்கான மின்சார இணைப்பு வழங்கல் நிறுத்தப்பட்டுள்ளதென உறுதியானது. எனினும் இதுவரையிலும் குறித்த தோட்ட நிறுவன அனுமதியின் பிரகாரம் மின் மார்க்கத்தை நிர்மாணிக்க தடையாக காணப்பட்ட மரங்கள் நீக்கப்பட்டுள்ளன.
மேற் குறித்த விடயம் போல அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவிடம் இருந்த தகவல்கள் குறித்த விஸேட கவனத்தை செலுத்திய அமைச்சர் டலஸ் அலஹப்பெரும அவர்கள்இ உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் கலுகெலே கிராமத்திற்கு மின்சார வசதி அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு குறித்த பிரிவிற்கு அறிவூறுத்தல் வழங்கினார்.
அதன் அடிப்படையில் பல ஆண்டுகளாக இருளில் வாழ்ந்த கலுகெலே மக்களுக்குஇ மிகவூம் குறுகிய காலத்தில் மின் வசதி வழங்கி ஒளிமயப்படுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்க மின்சக்தி அமைச்சின் முன்னணியில் இலங்கை மின்சார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.

Leave a comment

* required