இ.மி.ச. மக்களுக்கு நெருங்கி முன்நோக்கி செல்லல்….
21 0

Posted by  in Latest News

இ.மி.ச. மக்களுக்கு நெருங்கி முன்நோக்கி செல்லல்….

நுகர்வோர் நலனுக்காக மின்சக்தி அமைச்சர்கள் மற்றும் ஏனைய அதிகாரிகளுடனான கலந்துரையாடல்

மின்சக்தி துறையின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் அவற்றை எதிர்கொள்ளும் தடைகள் மற்றும் அண்மை நாட்களில் ஏற்பட்டுள்ள இத்தகைய இடையூ+றுகளைத் தடுத்தல் தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து தீர்மானித்தல் தொடர்பிலான் சிறப்பு கலந்துரையாடல் நேற்று (20) பிற்பகல் இலங்கை மின்சார சபை தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.

சிறப்பு கலந்துரையாடலில் மின்சக்தி அமைச்சர் டலஸ் அலஹப்பெருமஇ இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்கஇ அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேரா மற்றும் இலங்கை மின்சார சபையின்; தலைவர் விஜித ஹேரத் மற்றும் மின்சக்தி அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

அண்மையில் நாடு முழுவதிலும் உள்ள மின்சார நுகர்வோருக்கு சிரமத்தை ஏற்படுத்திய மின் தடை குறித்து சிறப்பு கவனம் செலுத்தப்பட்டதுடன் இந்த விவகாரம் குறித்து விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட ஏழு உறுப்பினர் குழுவின் அறிக்கையைப் பெற்ற பின்னர் தேவையான நடவடிக்கை எடுப்பதாகவூம் விடய பொறுப்பு அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.

இலங்கை மின்சார சபை (இ.மி.ச) இலங்கையில் முக்கியமான சேவையை வழங்கும் இலங்கையின் முன்னணி அரசு நிறுவனங்களில் ஒன்றாகும்இ மேலும் இது எந்தவொரு இலாப நோக்கமும் இல்லாமல் சமூக நலனுக்காக செயற்படல் வேண்டுமெனவூம்இ இலங்கை மின்சார சபையின் இருப்பு நுகர்வோரை தங்கியதெனவூம் மின்சக்தி அமைச்சானது நுகர்வோருக்கு சலுகை வழங்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படல் Nவூண்டுமெனவூம் அமைச்சர் அவர்கள் மேலும் தெரிவித்தார்.

அதன் அடிப்படையில் மின்சக்தி துறையின் முனு;னேற்றத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் எவ்வித தயக்கமும் இன்றி நடைமுறைப்படுத்த தாம் மற்றும் இராஜாங்க அமைச்சரும் எதிர்பார்ப்பதாக அமைச்சர் அலஹப்பெரும அவர்கள் குறிப்பிட்டதுடன்இ ஏதேனும் காரணங்களால் இது வரையிலும் செயற்பாட்டிற்கு வரப்படாத மின் திட்டங்கள் குறுகிய கால வரையறைக்குளு; அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவூம் அதனை அமுல்படுத்துவதில் ஏதேனும் தடங்கல்கள் காணப்படின் அதனை எடனடியாக தமக்கு அறிவிக்குமாறும் குறித்த அதிகாரிகளுக்கு வலியூறுத்தினார்.
அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஒருங்க்ணைந்த அபிலாசையான வளமான நாட்டை உருவாக்குதல் நோக்கு தொடர்பில் நாம் அனைவரும் அர்ப்பணித்து செயற்படல் அவசியம் எனவூம்இ அபிவிருத்தியின் முன்னோடி என வர்ணிக்கும் வகையில் மின்சக்தி துறையானது முன்னேற்றப் பாதையில் செல்ல விரைவூப்படுத்தல் வேண்டுமெனவூம் அது தொடர்பில் தாம் தீர்மானம் எடுப்பதாகவூம் குறிப்பிட்டார்.
அண்மையில் ஏற்பட்ட அவசர மின் துண்டிப்பு காரணமாக சிரமத்திற்குள்ளான பொது மக்களிடம் தாம் மன்னிப்பு கோருதல் அமைச்சின் மற்றும் இலங்கை மின்சார சபையின் பொறுப்பென குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள்இ தனிப்பட்ட குறைபாடுகள் மூலம் தேசிய பொருளாதாரத்திற்கு மற்றும் பொது மக்களுக்கு பாரிய சேதத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டமை பொறுப்பற்றது எனவூம் எதிர்வரும் காலங்களில் அவ்வாறான தடங்கல்கள் இடம்பெறாத வண்ணம் செயற்படல் இலங்கை மின்சார சபையின் மிக் பாரிய பொறுப்பெனவூம் அவர் சுட்டிக்காட்டினார்.
பாரிய அர்ப்பணிப்புடன் தவறை சரி செய்ய சுமார் 10 மணிநேரம் உழைத்த மின் பொறியியலாளர்கள் உள்ளிட்ட ஊழியர்களுக்கு அமைச்சர் அவர்கள் நன்றி தெரிவித்தார்.

Leave a comment

* required