Posted by superadmin in Latest News
“நாட்டின் வளர்ச்சி தாமதத்திற்கு காரணம், அரசியல்வாதிகள் சரியான நேரத்தில் சரியான முடிவூகளை எடுக்காமை.”
“முக்கியமானது என்னவென்றால்இ யார் வாக்குறுதிகள் அளிக்கிறார்கள்இ ஆனால் அந்த வாக்குறுதிகளை யார் நிறைவேற்ற முடியூம்இ அவற்றை நிறைவேற்ற அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பது தான்”
ரவி கருணநாயக்க
மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்
“வெகு விரைவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற உள்ளது. ஒவ்வொரு நபரும் வாக்குறுதிகளை வழங்குவார், ஆனால் வாக்குறுதிகளை வழங்குவது முக்கியம் அல்ல. வழங்கிய அந்த வாக்குறுதிகளை யாரால் நிறைவேற்ற முடியூம், அவற்றை செயல்படுத்த அதிகாரம் யாருக்கு இருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அவசியம். நாம் எப்போதும் தைரியமான முடிவுகளை எடுக்க வேண்டும். இன்று நாட்டில் மிகப்பெரிய பிரச்சினை தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ள ஒரு தலைவர் இல்லாதது. நாம் எப்போதும் ஒவ்வொரு பின்னால் சென்று, ஒழிந்தொழிந்து நடவடிக்கை எடுத்தோமே தவிர, தன்னிச்சையாக தீர்மானம் செய்து பிரச்சினைகளை தீர்க்க முயற்சிக்கவில்லை. எங்கள் நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு எங்களுக்கு தெளிவான தலைமை, ஒழுக்கம், அன்பு மற்றும் அர்ப்பணிப்பு தேவை. சுதந்திரத்திலிருந்து நாங்கள் அனைத்தையும் இலவசமாக கொடுக்க திட்டமிட்டுள்ளோம். நாட்டில் வறுமையை ஒழிக்க எங்களால் முடிந்ததா, முன்பை விட வறுமை அதிகமாக இருக்கிறது. இது வரையில் அபிவிருத்தி அடைந்துள்ள நாடுகளை கவனத்தில் கொண்டால் எமக்கு தெளிவானது என்னவென்றால், அந்த அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மக்களுக்கு இலவசமாக எதுவும் வழங்கப்படவில்லை. ஏதேனும் இலவசமாக கொடுப்போமேயானால் வேறு ஒரு தரப்பினர் அதற்காக செலுத்துகின்றனர். இந்த ஏற்றத்தாழ்வு நீங்கும் வரை நாட்டை அபிவிருத்தி செய்ய முடியாது. ” மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருதி அமைச்சர் ரவி கருணநாயக்க வலியுறுத்தினார்.
இலங்கை மின்சார சபையில் புதிதாக சேர்க்கப்பட்ட 100 எழுதுனர்கள், சாரதிகள் மற்றும் அலுவலக உதவியாளர்களுக்கு நியமனக் கடிதங்களை ஒப்படைக்கும் விழாவில் பங்கேற்று அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
புதிய நியமனங்கள் நாடாளாவிய அடிப்படையில்இ தகைமைகளை ஆராய்ந்த பின்னர், அரசியல் கட்சி பாகுபாடின்றி சமநிலையாக அனைத்து பிரதேசத்திற்கு சமனான முறையில் நியமனங்கள்வழங்கப்பட்டதுடன் மின்வலு. மற்றும் மீள்புத்தாக்க சக்தி இராஜ்hங்க அமைச்சர் கௌரவ சம்பிக்க ப்றேமதாஸ அவர்களும்இ மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சின் மற்றும் இலங்கை மின்சார சபையின் சிரேஸ்ட அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மேலும் பேசிய அமைச்சர் கருணநாயக்க கூறினார்:
“இ.மி.ச. ஒரு வித்தியாசமான உலகம். உலகில் நூற்றுக்கணக்கானவர்கள் இ.மி.சபையில் வேலை தேடுகிறார்கள். இன்று நாங்கள் இந்த வேலைகளை ஐக்கிய தேசிய கட்சி வாக்காளர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து கட்சியின் வாக்காளர்களுக்கும்; வழங்கியுள்ளோம். எனவே நான் இவர்களிட் கோருவது என்னவென்றால், நியம் பாராது பணி புரியூமாறும்இ நிற அடிப்படையில் பணியை வரையறைப்படுத்த வேண்டாமெனவே ஆகும். இன்று நீங்கள் அனைவரும் இங்கு இணைந்து கொள்வது மேலும் பணிகளை வெற்றிகரமான முறையில் நிறைவேற்றவே ஆகும். இந்த நிறுவனத்தில் 8 மணிநேரத்தை செவிட வருகை தராது, வெற்றிகரமாக மாற்றுவதற்காக நீங்கள் இன்று சேர்கிறீர்கள் என்று நான் இந்த குழுவினரிடம் வலியூறுத்தினார், ஆனால் நாங்கள் இ.மி.ச. இல் ஒரு தீவிரமான மாற்றத்தை செய்ய வேண்டும், இல்லையெனில் அது நாட்டின் வளர்ச்சிக்கு ஒரு பெரிய தடையாக இருக்கும்.
இ.மி.ச தனது 50 ஆண்டு நிறைவை இன்று கொண்டாடுவதால், இ.மி.ச. புதிதாக வித்தியாசமாக சிந்திக்க வேண்டும். இந்த நிறுவனமும் நாட்டை உலகத்துடன் இணைக்கும் திட்டத்தில் ஈடுபட வேண்டும். இது மூன்று பகுதிகளாக செய்யப்பட வேண்டும். ஒரு பகுதி வாடிக்கையாளர். வாடிக்கையாளரைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். அதன்படி, முந்தைய ஏகபோகத்தை மாற்ற வேண்டும். அதனால்தான் நுகர்வோர் மன்னர் எனும் எண்ணக்கருவi உருவாக்கினோம். இது வாடிக்கையாளருக்கு உடனடி மற்றும் தரமான சேவையையூம் வழங்க வேண்டும். ஒரு வாடிக்கையாளர் கடந்த காலத்தில் மின் சிக்கலைப் புகாரளிக்கும்போது, அந்த நிலை சரி செய்ய இரண்டு அல்லது மூன்று நாட்கள் ஆகும். இருப்பினும்இ நிலைமை மாறிவிட்டது மற்றும் இலங்கை மின்சார சபையால் ஒரு விரைவான சேவையை வழங்க முடிந்தது. நிறுவனம் மக்களுடன் நெருக்கமாகிறது. இன்று எங்கள் வாடிக்கையாளர்களில் சுமார் 72 இலட்சம் பேர் உள்ளனர். ஒரு மாதத்திற்கு ஒரு முறையாவது வாடிக்கையாளர்களை நாடும் ஒரே நிறுவனம் இ.மிச. ஆகும். இலங்கை மின்சார சபை என்பது மக்களுடன் அதிக உணர்ச்சியூடன் செயல்படக்கூடிய ஒரு அமைப்பாகும்.
இலங்கை மின்சார சபை இந்த ஆண்டு பத்தாயிரம் கோடி இழப்பை சந்தித்து வருகிறது. இந்த இழப்புக்கு முக்கிய காரணம்இ எங்கள் உற்பத்தி செலவு விற்பனை செலவை விட அதிகம். எந்த நிறுவனத்தை இந்த வழியில் இயக்க முடியும்? இந்த இழப்பைக் குறைக்க, நாங்கள் எளிதாக விற்பனை விலையை அதிகரிக்க முடியும். ஆனால் உற்பத்தி செலவைக் குறைப்பதன் மூலம் அந்த இழப்பைக் குறைக்க விரும்புகிறௌம். ஆரம்ப நாட்களில் விறகிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. நாங்கள் பின்னர் நீர் மின்சக்திக்கு மாறினோம். மோசமான வானிலை காரணமாக, புதுப்பிக்கத்தக்க ஆதாரங்கள் மற்றும் வெப்ப மின் நிலையங்கள் மாற்றப்பட வேண்டியிருக்கிறது. நம் நாட்டின் அதிகரித்து வரும் மின்சார தேவையை எங்களால் இன்னும் போதுமான அளவில் வழங்க முடியவில்லை. அதனால்தான் நிலக்கரி போன்ற குறைந்த விலை ஆதாரங்களுக்கு செல்கிறோம். ஆனால் பல்வேறு குழுக்களிடமிருந்து எதிர்ப்புக்கள் உள்ளன. இந்நிலையால் நாம் சூரியஇ காற்று மின் சக்திக்கு மாறினோம ஊநுடீ பொறியாளர்கள் சு+ரிய காற்று போன்ற ஆதாரங்கள் முக்கியமல்லஇ ஏனெனில் அவை நிரந்தர மின் உற்பத்தி திட்டங்கள் அல்ல என்று கூறினார்கள். அது உண்மைதான். எனவே 2012 இல் எல்.என். ஜி தொழில்நுட்பத்திற்கு செல்ல முடிவு செய்தோம். என்னும் நாம் இன்னமும் அந்நிலையை அடையவில்லை. இ.மி.ச. ஓர் திட்டமிடப்பட்ட செயற்பாடு உள்ளது. ஆனால் அது செயலில் இல்லை. இலங்கை மின்சார சபை மாத்திரம் இதற்கு பொறுப்பு கூறமுடியாது. அரசியல்வாதிகள் சரியான நேரத்தில் சரியான தீர்வை வழங்காமையே இந்த தாமதத்திற்கு காரணம். இவற்றின் இறுதி தீர்வு தான், எரிபொருள் பயன்படுத்தி அதிகவிலையில் மின் உற்பத்தி இடம்பெறல். எரிபொருள் ஊழலிற்கான காரணம் இதுவேயாகும்.
நாம் சரியான முறையில் உற்பத்தி திட்டங்களை சமர்ப்பித்துள்ளோம். இந்த திட்டங்கள் மூலம் நிலக்கரி, எல்.என்.ஜி. மீள்புத்தாக்க சக்தி மூலம் முடிந்தள்வு மின் உற்பத்தியை செய்ய திட்டமிட்டுள்ளோம். இது தொடர்பிலும் பல தடைகள் எழுந்துள்ளன. எவ்வாறான நாட்டை அபிவிருத்தி செய்வது. எனவே தான் உடனடி மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். முடிந்தவரை நுகர்வோரை பாதுகாக்க வேண்டும். மின் உறப்த்தி போலே மின் செலுத்துகை மின் விநியோகம் ஆகியவற்றில் காணப்படு சிக்கல்களை நாம் தீர்க்க வேண்டும்” என குறிப்பிட்டார்.