இலங்கையின் மின் துறையில் வளர்ச்சி  குறித்து ரஷ்யாவின் கவனம் …
07 0

Posted by  in Latest News

• நிலக்கரி மற்றும் எரிவாயூ மின் உற்பத்தி நிலையங்கள் குறித்து ரஷ்ய அரசாங்கத்தின் சிறப்பு கவனம்
• இரு நாடுகளுக்கும் இடையிலான முதலீட்டு திட்டம்

ரஷ்ய இலங்கை இரு தரப்பு கூட்டிணைப்பை உறுதிப்படுத்தும் வகையில் ரஷ்ய அரசாங்கத்தின் தூதர் H.E. Yury Materiy  அவர்கள் மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் திரு. ரவி கருணநாயக்க உடன் நட்புறவூ கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் இலங்கை மின்சக்தி துறை தொடர்பில் விஷேட கவனம் செலுத்தப்பட்டது. இது வரையிலும் இலங்கையின் மின்சக்தி துறை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு எல்.என்.ஜி. மற்றும் நிலக்கரி தொடர்பில் கவனம் செலுத்தி உள்ளமை ரஷ்ய தூதரின் கவனத்தை ஈர்த்ததுடன் இது தொடர்பில் கவனத்தை செலுத்துவது இரு நாட்டிற்கும் நன்மை பயக்கும் என நம்புவதாக தெரிவித்தார்.
இலங்கையில் மின்சாரம் தயாரிப்பதற்கான பாரம்பரிய மற்றும் முதன்மை ஆதாரமாக நீர் உள்ளது என்றும், குறைந்த செலவில் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நுகர்வோருக்கு மின்சார சேவையை வழங்க முடியும் எனினும் தற்போது உள்ள அனைத்து நீர் வளங்களும் நீர் மின் உளற்பத்திக்காக பயன்படுத்துவதாக அமைச்சர் வலியூறுத்தினார். மேலும் நாளாந்தம் அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய நிலக்கரி, இயற்கை எரிவாயு போன்ற ஆதாரங்களில் ஈர்க்கப்பதாக ரஷ்ய தூதர் தெளிவுபடுத்தினார்.
தற்போது இலங்கை மின்சாரம் வழங்குவதற்கான உகந்த நிலையை எட்டியுள்ளது என்றும், அதிகரித்து வரும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய இலங்கையில் உத்தேச மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்பட உள்ளதாகவும் அமைச்சர் கருணநாயக்க தூதருக்கு விளக்கினார்.
ஆசிய நாடுகளிடையே ஒப்பிடுகையில் மின் உற்பத்தி மற்றும் மின்சாரம் தொடர்பாக இலங்கை சாதகமான நிலையில் உள்ளது என்றும், மின் துறையின் மேலும் வளர்ச்சிக்கு ரஷ்ய அரசாங்கத்தின் சார்பாக ஒப்புக்கொள்கிறேன் என்றும் அவர் கூறினார். நிலக்கரி மற்றும் இயற்கை எரிவாயு மின் உற்பத்தி நிலையங்களை நிறுவ இலங்கையில் முதலீடு செய்ய ரஷ்ய அரசாங்கமும் நிறுவனங்களும் ஊக்குவிக்கப்படும் என்று ரஷ்ய தூதர் அமைச்சர் கருணநாயக்கவிடம் தெரிவித்தார்.

Leave a comment

* required