“சீதாவக்க கங்கை நீர் மின் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த பகுதியில் எந்தவிதமான பாதிப்பையூம் ஏற்படுத்தாது.”
06 0

Posted by  in Latest News

“சீதாவக்க கங்கை நீர் மின் திட்டத்தை செயல்படுத்துவது குறித்த பகுதியில் எந்தவிதமான பாதிப்பையூம் ஏற்படுத்தாது.”
(சீதாவக்க கங்கை நீர் மின் திட்ட பொறுப்பான அதிகாரிகள்)
“இப்பகுதியில் வளர்ச்சி பிடிக்கவில்லை என்றால்இ சீதாவக்க கங்கை நீர் மின் திட்டத்திற்கு மக்கள் எதிர்ப்பு இருந்தால் திட்டத்தை நிறுத்துங்கள்…”
(மின்வலு மற்றும் எரிசக்தி மற்றும் தொழில்துறை அமைச்சர் ரவி கருணநாயக்க)

சீதாவக்கை கங்கை நீர் மின் திட்டத்தை நிர்மாணிப்பதை குறித்து இப்பகுதி வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் அச்சுறுத்தப்படலாம் என அப்பகுதியில் வசிப்பவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பொருத்தமான தீர்வைக் காணும் நோக்கத்துடன் முன்னாள் மின் மற்றும் மீள்புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலபிட்டிய, மக்கள் பிரதிநிதிகள், பிரதேச செயலாளர்கள் மற்றும் திட்ட அலுவலர்கள் சமீபத்தில் மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க அமைச்சில் சந்தித்தனர்.
இலங்கை மின்சார சபை குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க நீண்ட கால உற்பத்தி திட்டத்தை திட்டமிட்டுள்ளது. நீர், காற்று, சூரிய, நிலக்கரி, டீசல், அணல் மின், எண்ணெய் மற்றும் எரிவாயூ போன்ற பல்வேறு மூலங்களின் பயன்பாடு தேசிய முறைமையின் தேவை மற்றும் செலவு அடிப்படையில் கருதப்படுகிறது. 2015-2034 உற்பத்தி திட்டத்தின் படி, சீதாவக்கை கங்கை நீர்மின்சார திட்டம் நிர்மாணிக்கபட்டு, மேலும் 2022 ஆம் ஆண்டில் தேசிய கட்டத்தில் ஆண்டுக்கு 54 கிகாவாட் மின்சாரம் சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது.
சீதாவக்கை கங்கை நீர் மின் திட்டத்தின் சுற்றுச்சூழல் ஆய்வு தயாரிக்கப்பட்டு சுற்றுச்சுழல் அதிகார சபைக்கு அனுப்பப்பட்டுள்ளது. சீதாவக்கை கங்கா நீர் மின் திட்டம் 98 ஏக்கர் நிலத்தை உள்ளடக்கும். அதில் பெரும்பாலானவை, 56 ஏக்கர், சீதாவக்கை நதி. மீதமுள்ள 22 ஏக்கர்களில் லாலன் பிளான்டேஷன் லிமிடெட் நிறுவனத்திற்கு சொந்தமானது, மேலும் 16 ஏக்கர் தனியார் நிலங்கள் மட்டுமே பிரதேச செயலாளர் தெதியோவிட்டைக்குகு சொந்தமான அரசு நிலங்களாக உள்ளன.
சீதாவக்கை கங்கை நீர் மின் திட்டத்தால் பாதிக்கப்பட்டுள்ள ஒரே வீடுகள் அல்லாது ருகாசல் பாலம் மற்றும் அதன் அணுகல் வழியாகும். இதற்காக வாகனங்களுக்கு எளிதாக செல்லக்கூடிய வகையில் சாலை மற்றும் அணுகல் பாதிப்பிற்கு உள்ளாகும் மக்களுக்கு மேலாக, திகலை வழியில் அடிக்கடி வெள்ளத்தால் பாதிக்கப்படும் 40 கடை வீதியில் இருந்து 01 கி.மீ வரை மீட்டெடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் உடயோகம மற்றும் மல்தெனிய இணைக்கும் புதிய பாலம் அமைத்தல் மற்றும் இர ஹத பானவிற்கு எளிதான வழி உள்ளிட்ட பகுதி மக்களுக்கு இந்த திட்டம் பயனளிக்கும்.
சீதாவக்கை கங்கை மின் உற்பத்தித் திட்டம் தெரணியகல பிரதேச செயலகப் பகுதியில் வெள்ள நிலைமையை பாதிக்கப்பட மாட்டாது என்றும் இத்திட்டத்தால் நீர்தேக்க கீழ் பகுதி மக்களையூம் பாதிக்காதெனவும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
உத்தேச சீதாவக்கை கங்கை நீர் மின் திட்டத்திமானது மின்சாரத் துறை, நாடு மற்றும் பகுதிக்கு பல நன்மைகள் பயக்கும் எனினும் எவ்வித ஆடசேபணைகளும் இருந்தால் இந்த திட்டத்தின் கட்டுமானத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடய பொறுப்பு அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்தார்.
இரு தரப்பினரும் இந்தத் திட்டம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகளுடன் கலந்துரையாடவில்லை என்று அப்பகுதி மக்கள் பிரதிநிதிகள் தெரிவித்தனர். அத்துடன் கலந்துரையாடல் இடம்பெறாமையால் தான் இவ்வாறான கருத்து வேறுபாடுகள் காணப்படுவதாக குறிப்பிட்ட அமைச்சர் அவர்கள் குறித்த கலந்துரையாடல் தொடர்பில் வழிமுறைகள் வழங்கப்பட்டது. அதன்படிஇ பேச்சுவார்த்தை நடத்திய 15 நாட்களுக்குள் பொறுப்பான அமைச்சரை சந்திக்க முடிவூ செய்யப்பட்டது.

Leave a comment

* required