Posted by superadmin in Latest News
“அஸ்கிரிய மாநாயக்க தேரரின் கோரிக்கைகமைய மீண்டும் குரகல விகாரைக்கு மின் இணைப்பை பெற்று கொடுக்க உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது”
“இலங்கை மின்சார சபையின் மின்சார நுகர்வோருக்கு எதிர்வரும் காலங்களில் முற் கொடுப்பனவு மானிகள்”
ரவி கருணாநாயக்க
மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்
“குரகல விகாரைக்கு மின்சாரம் பெற்று கொடுக்குமாறு அஸ்கிரிய மாநாயக்க தேரரர் என்னிடம் கோரிக்கை முன்வைத்தார். மின்சார பெற்று கொடுத்தல் தொடர்பில் இதற்கு முன்னர் ஏதேனும் நடந்துள்ளது. தொல்பொருள் திணைக்களத்தின் மூலம் குரகலவிற்கு புதிய மின் இணைப்பு பெற்று கொடுக்க அனுமதி கடிதம் வழங்கப்பட்டிருந்ததுடன் அதன் அடிப்படையில் இலங்கை மின்சார சபை புதிய மின் இணைப்பை பெற்று கொடுக்க ஆயத்தம் செய்த போதும் தொல் பொருள் ஆய்வு திணைக்களத்தாலே அதற்கு மறுநாள் குறித்த அனுமதியை நிராகரித்து கடிதம் ஒன்று வெளியிடப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் குறுகிய கால வரையறையான 04 நாட்களுக்குள் 11 இலட்சம் தொகை செலவிட்டு குரகலவிற்கு பெற்று கொடுக்கவிருந்த புதிய மின் இணைப்பானது இடைநிறுத்தப்பட்டது. எனினம் அஸ்கிரிய மஹாநாயக்க தேரரின் கோரிக்கையின் அடிப்படையில் மீண்டும் குரகுல விகாரைக்கு மின் இணைப்பை பெற்றுக் கொடுக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக” மின்வலு. எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.
கடந்த தினம் கண்டி உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது அஸ்கிரிய மாநாயக்க தேரரை சந்தித்த பின்னர் ஊடகத்தின் கேள்விகளுக்கு பதிலளிக்கு சமயத்தில் இக்கருத்துக்களை வெளியிட்டார்.
கருணாநாயக்க அவர்கள் அஸ்கிரிய மாநாயக்க தேரரை சந்தித்த போது, அவர்கள் அமைச்சரிடம், கலாச்சார சமய ரீதியான பழமை வாய்ந்த பெறுமதி மகு குரகல விகாரைக்காக மின் வசதி அளித்தல் மிகவும் உன்னதமான விடயமென தேதர் அவர்கள் குறிப்பிட்டார். தேரர் அவர்களின் கோரிக்கையை செவிமடுத்த அமைச்சர அவர்கள் குரகல விகாரைக்கு மின்சாரம் பெற்று கொடுக்க இணக்கம் தெரிவித்தார்.
இலங்கை மின்சார சபை தொடர்பில் ஊடகத்திற்கு கருத்து வெளியிட்ட அமைச்சர் அவர்கள்.
“இலங்கை மின்சார சபைக்கு 50ஆம் ஆண்டு நிறைவூ பெறும் சந்தர்ப்பத்தில் நுகர்வோருக்கு முன்னுரிமை வழங்கி செயற்படும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படுகின்றது. நீண்டகாலமாக ஏகாதிபத்தியமாக காணப்பட்ட இலங்கை மின்சார சபை இது வரையில் நுகர்வோருக்கு முன்னுரிமை அளித்து செயற்பட ஆரம்பித்துள்ளது. அதன் அடிப்படையில் புதிய மின் கட்டண முறையொன்றை ஆரம்பித்து வீட்டு மின் இணைப்பை இரு வார காலத்திற்குள் பெற்று கொடுக்கவும்இ நுகர்வோரின் சிக்கல்கள் தொடர்பில் உடனடியாக தீர்வு வழங்கவும் புதிய நடவடிக்கைகள் பல அமுல்படுத்த இன்று இ.மி.ச சித்தி அடைந்துள்ளது.
அதேபோல் இது வரையில் நுகரப்படும் வீட்டு மின் மானிகளுக்கு பதிலாக முற் கொடுப்பனவு மின் மானிக்ளை எதிர்வரும் காலத்தில் அறிமுகப்படுத்த நாம் இது வைரயிலும் திட்டங்கள் தயாரித்து வருகின்றௌம். செப்தெம்பர் மாதம் இறுதியில் இந்த புதிய மீட்டர் திட்டத்தi அமுல்படுத்த வாய்ப்புள்ளதாக எதிர்பார்ப்பதாக” குறிப்பிட்டார்.