“நிலையான மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் அவ்வப்போது இடம்பெறும் மின் துண்டிப்பை நிலைக்கு கொண்டு வருவேன்…..”
15 0

Posted by  in Latest News

“நிலையான மின் உற்பத்தி திட்டத்தின் மூலம் அவ்வப்போது இடம்பெறும் மின் துண்டிப்பை நிலைக்கு கொண்டு வருவேன்…..”
“நாங்கள் நிதி அமைச்சினால் முறையாக நிதியளிக்கப்பட்டால்இ இந்த பிரச்சினைகள் ஏற்படாது.”
“நிதி அமைச்சானது சரியான முன்னோக்கு இல்லாமல் செயல்படுகின்றமையால் அரசாங்கத்தின் செலவினம் அதிகரிக்கின்றது”
“உலக வங்கியையூம் சர்வதேச நாணய நிதியத்தையூம் எங்கள் பிரச்சினைகளில் தலையிட முடியாது.”


ரவி கருணநாயக்க
மின்வலுஇ எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“கதிர்காமத்தில்; அவ்வப்போது மின்வெட்டு இருப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. இந்த நிலை கதிர்காமத்தில்; மட்டுமல்லஇ நாட்டின் பிற பகுதிகளிலும் ஏற்பட்டுள்ளது. இதற்கு முக்கிய காரணம் முறையான உற்பத்தி திட்டமின்மையாகும். இப்போது நாங்கள் சரியான உற்பத்தி திட்டத்தில் செயல்பட்டு வருகிறௌம். மேலும் 06 அல்லது 07 மாதங்களில் நிலையான உற்பத்தி திட்டத்தின். ஊடாக இந்த வகையில் அவ்வப்போது மின் துண்டிப்பை முழுதாக நிறுத்த முடியூம் என் நம்புகின்றௌம். இலங்கை மின்சாரசபை பொறியியலாளர்கள் மற்றும் ஊழியர்கள் உடன் கலந்துரையாடிஇ ஒரே தீர்மானத்திற்கு வந்தமை நிலையான மின் உற்பத்தி திட்டத்துடன் மின்சார முறைமையை பயணித்தலாகும்” மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி ரவி கருணாநாயக்க கூறினார்.
கதிர்காமத்தில்; கிரிவேஹேரா மற்றும் தேவலாய வளாகத்தில் நடந்த அலோகா பூஜை உட்பட பல சடங்குகளில் பங்கேற்ற பின்னர் ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் பதிலளித்தார்.
விடய பொறுப்பான அமைச்சராக திரு. கருணாநாயக அவர்களுக்கு கதிர்காம பஸ்நாயக்க நிலமே மற்றும் மொனராகலா மாவட்ட செயலாளர் ஆகியோர் கதிர்காம புனித பகுதிக்கு உதவி செய்ததற்கும்இ நுழைவு  மார்க்கத்தில் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செயதமைக்காகவூம் ஒரு ஜெனரேட்டரை வழங்கியமைக்கும் நன்றி தெரிவித்தார்.
மேலும் பேசிய திரு கருணநாயக்க,
“இலங்கை பெற்றௌலிய கூட்டுதாபனத்திற்கு இலங்கை மின்சார சபையால் 6900 கோடி செலுத்த வேண்டி உள்ளது. அதேபோல் நிதி அமைச்சிலிருந்து இலங்கை மின்சார சபைக்கு 8100 கோடி வரவிருக்கின்றது. நிதி அமைச்சானது எமக்கு நிதி வழங்க வேண்டிய நிலையமாகும். எனினும் நிதி அமைச்சானது இச்சந்தர்ப்பத்தில் வழங்கும் ஓரே தீர்மானம் கடன் பெற வேண்டும் என்பதாகும். கடன் பெற்றால் இலங்கை பெற்றௌலிய கூடடுதாபனத்திற்கும்இ இலங்கை மின்சார சபைக்கும் கடன் சுமை ஏற்படும். இவ்வாறு எந்தவொரு இலக்குமில்லாது பணி புரிவதால் அரசாங்கத்தின் செலவினம் அதிகரிக்கின்றது. வட்டி அதிகரிக்கின்றமையால் வங்கி வளமாகின்றது. என்ன நடந்தாலும் வீட்டு பாவனையாளர்களின் மின் கட்டணத்தை நாம் அதிகரிக்க மாட்டோம். உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியங்கள் எமது பிரச்சினையில் தலையிட காத்து கொண்டிருக்கின்றனர். நிதி அமைச்சு உமக்கு பணம் மாத்திரமே கொடுத்தால் இவ்வாறான சிக்கல்கள் ஏற்படாது.” என குறிப்பிட்டார்.

Leave a comment

* required