“பாடசாலைகளில் எந்த அரசியலும் இருக்கக்கூடாது. அரசியலை பாடசாலை வாயிலிலே நிறுத்த வேண்டும் …
05 0

Posted by  in Latest News

“நம் நாட்டில் ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் இல்லை. மக்கள் எல்லாவற்றையூம் இலவசமாக பெற்று கொள்ள பழக்கப்படுத்திக் கொண்டுள்ளார்கள்.”
“எங்கள் எதிர்கால தலைமுறையை பாதுகாக்க,போதைமருந்து அச்சுறுத்தலை ஒழிக்க வேண்டும்”.

ரவி கருணநாயக்க
மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“இன்று நம் இளைஞர்களிடமிருந்து நமக்குத் தேவையானது நாட்டிற்காக ஒரு அர்ப்பணிப்பான சேவையாகும். இன்று நம் நாட்டை வலுப்படுத்த விரும்பினால், மூன்று முக்கிய காரணிகள் அவசியமாக உள்ளன. தேசிய பாதுகாப்புஇ தேசிய பொருளாதாரம் மற்றும் இளைஞர்களை அடிப்படையாகக் கொண்ட பொருளாதார அமைப்பு என்பனவாகும். தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதன் மூலம் நாட்டில் பயமல்லாது சுதந்திர வாழ வழிவகுக்க முடியூம். அதன் ஊடாக நாட்டில் அந்நிய முதலீடுகள் செய்யப்பட்டு தேசிய பொருளாதாரம் பலப்படுத்தப்படும். தேசிய பொருளாதாரத்தை நீர்த்துப்போகச் செய்ய நாம் அனுமதிக்கக் கூடாது. இன்று நமக்கு கிடைக்கும் பணம் தான் தமது நாளைய முதலீடு. எமது இளைஞர்கள் தான் எமது பலம் அந்த வளத்தை பாதுகாத்து கொள்ள நாம் முறையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். பாசாலைகளில் அரசியல் நிறுத்தப்பட வேண்டும் இல்லையெனில் முழு கல்வி செல்வமும் நிறுத்தப்படும். நான் அப்போதைய கல்வி அமைச்சர் லலித் அதுலத் முதலியின் சீடர். அதனால்தான் கல்வியில் முடிந்தவரை முதலீடு செய்கிறேன்” என்று மின்வலு மற்றும் எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க தெரிவித்தார்.
அருகே உள்ள பாடசாலை – சிறந்த பாடசலை எனும் எண்ணக்கருவின் கீழ் நாடு முழுதும் தெரிவ செய்யப்பட்ட பாடசகளை விருததி செய்யம் முகமாக கொட்டஹேன பிரின்ஸஸ் வித்யாலயாவில் கட்டப்பட்ட கட்டிடத்தினை மாணவர்களின் உரிமைக்காக கையளிக்கும் சந்தர்ப்பத்தில் சமீபத்தில் கொட்டஹேன பிரின்ஸஸ் வித்யாலயாவில் நடைபெற்ற விழாவில் பங்கேற்று அமைச்சர் இந்த கருத்துக்களை தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் கருணநாயக்க அவர்கள்;:
“எங்கள் பிரதமர் ரனில் விக்கிரமசிங்க 1978-79 வரை கல்வி அமைச்சராக இருந்த கால வரையறையில் கல்வியில் மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கினார். இந்த நாட்டில் காணப்படும் விஷேட முறை வேலை செய்பவருக்கு வேலை செய்ய விடாது தடுத்தலாகும். ஏதேனும் ஓர் பிரச்சினை ஏற்படுத்தி வேலை செய்ய விடாத தடுத்தலாகும். 15 முதல் 20 ஆண்டுகளுக்குப் பிறகுஇ அந்த கல்வி முறை மாறியது. மீண்டும் 2015 இல் கல்வியை ஒரு முக்கியமான இடமாக மாற்றினோம். கல்விக்கான ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.8% மட்டுமே இருந்தது. நாங்கள் அதை 3.4% அதிகரித்துள்ளோம்இ மேலும் 6900 கோடிகளை அபிவிருத்திக்காக ஒதுக்கியூள்ளோம்இ இதில் 100 மில்லியன் அருகேயூள்ள பாடசலை -சிறந்த பாடசலை எனும் எண்ணக்கருவிற்காகும். எமது கல்வி அமைச்சர் அவர்கள் பாரிய சேவையை புரிகின்றார். அவ்வாறு தான் நாம் மாற்றத்தை கொண்டு வந்துள்ளோம். கல்வியானது மிக முக்கிமான காரணியாகும்.
1977 – 1978 நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அப்போதைய ஜனாதிபதி ஜே. ஆர். ஜயவர்தன் அவர்களால் திறந்த பொருளாதாரத்திற்கு நாட்டை திறந்தார். நம் நாட்டில் ஒழுக்கம் இல்லை. எந்த அர்ப்பணிப்பும் இல்லை. எல்லாவற்றையூம் இலவசமாகப் பெறுவதற்கு மக்கள் பழக்கமாகிவிட்டனர். சிக்கல் என்னவென்றால், குறைந்த வருமானத்துடன் வரையறையல்லா தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றன. அதைத்தான் நாம் மாற்ற வேண்டும்.
மேலும், ஒழுக்கம் மீறப்பட்டால் ஒரு நாட்டை உருவாக்க முடியாது. இது இன்று நாட்டில் முக்கியமானது. அத்தகைய மக்கள் நாட்டையூம் பெற்றௌர்களையூம் நேசிக்காத ஒரு சமூகத்தால் நாட்டை முன்னோக்கி கொண்டு வர முடியாது. இதுதான் நாம் செய்ய வேண்டிய வித்தியாசம். போதைப்பொருளால் இன்று நம் இளைஞர்கள் வீணாகுகின்றனர். இன்று வணிகமயமாக்கப்பட்ட சமூகம் எப்படி இருந்தாலும், பெற்றௌர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நேரத்தை ஒதுக்க வேண்டும். இல்லையெனில்இ குழந்தைகள் இதற்கு அடிமையாகிஇ அறியாமல் தங்கள் உயிரை இழப்பார்கள். எனவேஇ நம் எதிர்கால சந்ததியினரைப் பாதுகாக்க வேண்டுமென்றால்இ போதைப்பொருள் அச்சுறுத்தல் அகற்றப்பட வேண்டும்” என குறிப்பிட்டார்.

Leave a comment

* required