“எனது நோக்கம் நுகர்வோருக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தாத வகையில் மின்சாரம் வழங்குவதாகும்.”
03 0

Posted by  in Latest News

“அரசியல் தீர்மானங்களை உரிய முறையில் எடுக்காமையால் நுகர்வோர் 15% முதல் 20% வரை அதிகம் செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.”
“சுரிய பல சங்கராமய நிறுத்தப்படாது. அதன் வளர்ச்சி குறித்து ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது…”
“இரண்டு வாரங்களில் பொறியாளர்களுடன் கலந்துரையாடலுக்கு வந்து பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளுங்கள்…”
(கொழும்பில் நடைபெற்ற ஜூன் 26 ஆர்ப்பாட்டத்தில் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு அளித்த வாக்குறுதியை வலியூறுத்தி மின்வலு, எரிசக்தி மற்றும் தொழிற்துறை அபிவிருத்தி அமைச்சர் ரவி கருணநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.)
“அரசியல் தீர்மானங்களை சரியான நேரத்தில் எடுக்கப்படாததால்இ நமது அப்பாவி நுகர்வோர் மின்சார கட்டணத்தை விட 15% முதல் 20% வரை அதிகமாக செலுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் தான் நுகர்வோர் அதிகப்படியான கொடுப்பனவகளை நிறுத்த எங்கள் பொறியாளர்களின் யோசணைகளை அணுகி, அதன் அடிப்படையில் குறைந்த விலை திட்டத்தின் கீழ் மின்சார உற்பத்தி; திட்டத்தை நாங்கள் தொடங்கி உள்ளோம் இந்த திட்டத்தின் கீழ் குறைந்த விலையில் மின் உற்பத்தி செய்யக்கூடிய வழியானது நீர் மின் உற்பத்தியாகும். அதனை தொடர்ந்து குறைந்த விலை மின் உற்பத்தி மார்க்கங்களாக சிறிய நீர் மின்சாரத்இ நிலக்கரிஇ நிலக்கரி எல்.என்.ஜி. மீள்புத்தாக்க சக்தி பெற்றலிய எரிசக்தி ஆகிணன கண்டறிப்பட்டுள்ளன.
அடிப்படையில் நான் நுகர்வோர் மீது எந்த அழுத்தமும் இல்லாமல் மின்சாரம் வழங்க விரும்புகிறேன். அது தான் எனது நிலைப்பாடு அதற்கமையவே தான் நான் நடவடிக்கை எடுக்கின்றேன். ஒருபுறம் இ.மி.ச. க்கு இந்த ஆண்டு ரூ. 100 பில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளது. 100 பில்லியன் இது நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படுமானால் அதனால்தான் அது நடப்பதில்லை. சுற்றுச்சுழலைப் பாதுகாக்கும் அதே வேளையில் நுகர்வோர் வாங்கக்கூடிய விலையில் மின்சாரம் வழங்க வேண்டும். ”என்று மின் மற்றும் எரிசக்தி மற்றும் வணிக மேம்பாட்டு அமைச்சர் ரவி கருணநாயக்க கூறினார்.
மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சின் முன்னால் பல சுற்றுச்சுழல் அமைப்புகள் போராட்டம் நடத்திய பின்னர் ஜூன் 26 அன்று மின்வலு, எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சக வளாகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றினார். கலந்துரையாடலில் பல சுற்றுச்சுழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். டாக்டர். பீ. எம். எஸ் படகொட உட்பட அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
கலந்துரையாடலின் போதுஇ பல சுற்றுச்சுழல் அமைப்புகளின் பிரதிநிதிகள் எரிசக்தி கொள்கைஇ ஆற்றல் கலவை, மின்சக்தி பாதுகாப்புஇ பல்வகைப்படுத்தல் மற்றும் மின்சக்தி உற்பத்தி என்ற விடயங்கள் தொடர்பில் அமைச்சர் அவர்களால் விளக்கமளித்தனர். அதன்படிஇ குறைந்த விலையின் அடிப்படையில் மின்சாரம் உற்பத்தி செய்தல் தொடர்பில் மின்வலுஇ எரிசக்தி துறையின் மீள்புத்தாக்க் சக்தி வளங்களுக்கு உள்ளிட்டுள்ளதாகவூம், அதன் அடிப்படையில் முழு தீவையூம் உள்ளடக்கும் வகையில் தொடங்கப்பட்டுள்ள சுரிய மின்சக்தி திட்டத்தின் முன்னேற்றம் குறித்து ஆராய ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவூம் குறித்த குழுவின் தீர்மானத்தின் படி எதிர்வரும் காலங்களில் மென்மேலும் சூரிய சக்தியை விருத்தி செய்ய நடவடிக்கை எடுப்பதாக விடய பொறுப்பான அமைச்சர் தௌவூபடுத்தினார்.
சுரியபல சங்கராமய திட்டத்தை நிறுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என்ற குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும், தற்போதைய தேறிய மிகைஇ தேறிய மானி, தேறிய கணக்கு முறையின் நிதி தாக்கம் தொடர்பில் கவனத்தில் கொண்டு மின் நுகர்வோர் விருத்திக்காக எடுக்கக்கூடிய முறையான நடவடிக்கைகள் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
சுற்றுச்சுழல் அமைப்புகளுக்கு தங்கள் கருத்துக்களை தெரிவிக்க அமைச்சர் ஒரு வாய்ப்பை வழங்கினார். மேலும் இ.மி.ச. பொறியியலாளர்களுடன் இரண்டு வாரங்களுக்குள் அவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வூ காண கலந்துரையாடல் வாய்ப்பு வழங்குவதாக ஒப்புக் கொண்டார்.

Leave a comment

* required