“இ.மி.ச. ஊழியர் பிரிவை நியமிக்கும் போது ஏற்பட்டுள்ள மொழி தொடர்பிலான சிக்கலான நிலையை வெகு விரைவில் நீக்குவோம்……”
29 0

Posted by  in Latest News

“ஜுலை மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் ஐக்கிய தேசிய கட்சியானது …. ஊடாக பயணத்தை தொடரவிருக்கின்றது”
“வெளி தரப்பினர் பரப்பும் கதைகளில் உண்மையில்லை சத்தியமில்லை. ஐ.தே.க. ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மேலும் தகவல் தெரிந்துள்ளது கட்சியின் உள்ள தரப்பினர் மாத்திரமேயாகும்…”


ரவி கருணாநாயக்க
மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“இ.மி.ச. ஊழியத்தில் சேவையமர்த்தலின் போது சில பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. விஷேடமாக பிரதேசத்திற்குரியவாறு ஊழியர்களை சேவைக்கமர்த்தவில்லை. இந்நிலையில் வட கிழக்கு பாகங்களில் மொழி தொடர்பில் ஓர் சிக்கல் காணப்படுகின்றது. அந்த காரணத்தால் மின்சார நுகர்வோர் சேவை பெற்று கொள்ளும் சந்தர்ப்பத்தில் மொழி பாவனையால் பல சிக்கல்களுக்கு முகங் கொடுத்து வருகின்றனர். நாம் வெகு விரைவில் குறித்த சிக்கலுக்கு தீர்வூ காண உள்ளோம்” என மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் குறிப்பிட்டார்.
அமைச்சர் அவர்கள் கடந்த தினம் வவூனியா க்றிட் உப நிலைய நிகழ்கால நிலையை பரிசீலனை செய்ய மேற்கொள்ளப்பட்ட ஆய்வூ களப் பயணத்தின் போதே ஊடகத்திற்கு கருத்து வெளிட்டு விடயங்களை குறிப்பிட்டார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் கருணாநாயக்க அவர்கள்இ
“வவூனியா க்றிட் உப நிலையத்தின் மூலம் நுகர்வோருக்கு வழங்கப்படும் சேவையை ஆய்வூ செய்யவே நான் இங்கு வருகை தந்துள்ளேன். யாழ்ப்பாணம்இ மன்னார். வவூனியாஇ ஆகிய பரந்த பிரதேசங்களை கண்காணிப்போம். அதன் மூலம் இந்த பிரதேசங்களில் நுகர்வோருக்கு சிறந்த சேவை வழங்கப்படுகின்றது.
ஐ.தே.க. உள்ளகம் இது வரையிலும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் அறிந்திருந்துள்ளது. எனினும் வெளிதரப்பு நபர்களின் கதைகளில் எவ்வித உண்மையூம் இல்லை. ஒரு கட்சியாக மேலும் 02 அல்லது 03 மாதத்தினுள் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் பொது மக்களுக்கு அறியத் தருவோம். அரசியல் கட்சியானது அடிக்கடி செயற்பாட்டில் ஈடுபடல் வேண்டும். ஜூலை மாதம் 01 ஆம் திகதி தொடக்கம் ஓர் கட்சியாக இணைந்து செய்த சேவைஇ கட்சியாளர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி மீண்டும் பணிகளை ஆரம்பிப்போம் என கூறினார்.

Leave a comment

* required