“இலங்கை மின்சார சபையின் நிதி நிலையை வசதியூட்டி பொதுமக்களுக்கு வசதியளிக்கவே துருக்கி பார்ஜ் கொள்முதல் செய்ய தீர்மானிக்கப்பட்டது”
29 0

Posted by  in Latest News

“உங்களால் யாராலும் முடியூமெனில் விலை குறைவாக மின்சாரத்தை கொள்முதல் செய்து காட்டுங்கள்….”
“எந்த வகையிலும் வீட்டு மின் அலகின் விலையை அதிகரிக்க விடமாட்டோம்”
ரவி கருணாநாயக்க
மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அபிவிருத்தி அமைச்சர்

“எமது தேவை என்னவெனில் குறைந்த விலையில் மின்சக்தியை உற்பத்தி செய்துஇ இலங்கை மின்சார சபையின் நிதி நிலையை முறையான வகையில் பேணலாகும். இதற்து தற்காலிகஇ மத்தியஇ நீணு;டகால தீர்வூ உண்டு. இதற்கான முதற் படிதான் நாங்கள் துருக்கி பார்ஸ் மூலம் செய்துள்ளோம். இதனை விட குறைந்த விலையில் இல்லையா என சிலர் கேட்கின்றனர். உங்களால் யாராலும் முடியூமெனில் விலை குறைவாக மின்சாரத்தை கொள்முதல் செய்து காட்டுங்கள் என நான் கூறுகின்றேன்” என மின்வலு எரிசக்தி மற்றும் தொழில்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்.
கடந்த தினம் அமைச்சின் வளாகத்தில் ஊடகவியலாளர்களால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிப்பதனை தொடர்ந்து அமைச்சர் கருணாநாயக்க அவர்கள் இவ்வாறு கருத்து வெளியிட்டார்.
இங்கு மேலும் கருத்து வெளியிட்ட அமைச்சர் அவர்கள்இ

“அவசரமாக மின்சாரம் கொள்வனவூ செய்யாதிருக்கவே நாம் முயற்சி செய்தோம். எனினும் ஏற்பட்டுள்ள சிக்கலான நிலையில் பற்றாக்குறை காரணமாக அதனை கடை பிடிக்க முடியாது போனது. தற்போது காணப்படும் மின்நிலையங்களின் உற்பத்தி கிரயம் ரூ. 30.00 இற்கும் அதிகமாகும். எனினும் அவசர மின்சக்தி கௌமுதல் செய்ய டெண்டர் கோரலின் போது உத்தேசிக்கப்பட்ட விலையானது அண்ணளவாக ரூ. 28.00இ ரூ. 30.00. ஒவ்வொரு வருடமும் ஒப்பந்தம் கோரப்பட்டால் விலை அதிகரிக்கின்றமையால் நாங்கள் 06 மாதத்திற்கு கொள்முதல் செய்ய தீர்மானித்தோம்.

இந்த அவசர மின்சக்தி கொள்முதல் தொடர்பில் பொதுமக்களிடையே தவறான அபிப்பிராயங்கள் எழப்பட்டது. இதன் மூலம் பாரிய தொகை வீணாவதாக போலி தகவல் பரவப்பட்டது. அதனால் இந்த கொள்முதலிடையே இந்த நிலையை மாற்ற சரி செய்ய பதிலீட்டு வழிகளை பயன்படுத்துமாறு நாங்கள் பொதுமக்களிடம் கோரினோம். அச்சமயத்தில் துருக்கி அரசிடமிருந்து ஓர் யோசணை முன்வைக்கப்பட்டது. ரூ. 24.98 அவர்களின் விலையாக காணப்பட்டது. சகல வரிகளுடன் அதன் விலையானது ரூ. 26.20 ஆகும். அதனட அடிப்படையில் நாங்கள் இது தொடர்பில் அமைச்சரவைக்கு யோசணை முன்வைத்துஇ தற்போது எமது மின் நிலையங்களை விட குறைவான விலைக்கு அனுமதி பெற்று கொள்ளப்பட்டது.

அவசர மின்சார கொள்முதல் தேவையென தீர்மானம் செய்தது நாமல்ல. இலங்கை மின்சார சபையின் உரித்தான அதிகாரிகள் தான் 470 மெகாவோட் மின்சார பற்றாக்குறை காணப்படுகின்றதெனவூம் அதனை உடனடியாக பெற்றுத்தரும்படியூம் கூறினார்கள். அதனாலே அவசர மின்சார கொள்முதல் செய்ய வேண்டிய நிலை ஏற்ப்பட்டது. சில தரப்பினர் மின்சார பற்றாக்குறையை நீக்கி மின்சார துண்டிப்பை தடுப்பது தொடர்பில் விருப்பம் இல்லை. இ.மி.ச உற்பத்தி செய்யூம் மின் அலகை விட தனியார் துறையிடம் மின்சார கொள்முதல் செய்வது மினவூம் இலாபகரமானது. எனினும் இதுவரையிலும் அதற்கான ஒப்பந்தங்கள் கைசாத்திடப்பட்டுள்ளமையால் அவற்றை மாற்ற முடியாது.

எந்த வகையிலும் சரி இவ்வாறான நிலை ஏற்பட்டமையால்இ வீட்டு மின் அலகு கட்டணத்தை அதிகரிக்க விட மாட்டோம். அந்த கொள்கையை நாம் பாதுகாப்போம். அதேபோல் எந்த வகையிலும் மின்சார துண்டிப்பிற்கு வழிவகுக்க மாட்டோம். அதற்காக நாம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டும். வருடாந்த மின்சார கேள்வி 6மூஇ 7மூ அளவில் அதிகரித்து வருகின்றது. அது அண்ணளவாக 350 மெகாவோட் அளவாகும். 2012 ஆம் ஆண்டு தொடக்கம் மீள்புத்தாக்க மின்சக்தியில் 400 மெகாவோட் சேர்க்கப்பட்டதேயொழிய புதிதாக ஒரு அலகேனும் முறைமைக்கு இணைக்கப்படவில்லை. எமது நாளாந்த தேவையான மின்சார தேவையை நீர் மின்னை பயன்படுத்தி பூர்த்தி செசய்து கொள்வோமேயானால் எவ்வித சிக்கலும் எதிர்நோக்கப்படாது. எனினும் இதுவரையிலும் அந் நிலையானு நீர்தேக்கங்களில் காணப்படும் பற்றாக்குறையால் மாறியூள்ளது. அதனால் எங்களுக்கு பதிலீட்டு வழி தேவையாக உள்ளது. மின்சார சபையால் உற்பத்தி செய்வதா அல்லது வெளி தரப்பில் குறைந்த விலையில் உற்பத்தி செய்ய வேலைத்திட்டமொன்றை அமுல்படுத்துவதா என நாம் தீர்மானிக்க வேண்டும். வரலாற்றில் முதல் தடவையாக நாம் இவ்வாறு குறைந்த விலையில் அவசர மின்சக்தி கொள்முதலை செய்துள்ளோம். இரண்டு வருடங்களுக்கு இதை விட குறைவான விலையில் மின்சாரத்தை கொள்முதல் செய்ய நாங்கள் எதிர்வரும் வாரம் ஒப்பந்தம் கோர ஏற்பாடு செய்துள்ளோம்.

துருக்கியிலிருந்து கொண்டு வரப்படும் இந்த மின் கப்பல் தேசிய முறைமைக்கு பாதிப்பை ஏற்படுத்தாதவாறு தொடர்புபடுத்த எந்த வழியில் முடியூம் நாம் தேடினோம். அதன் அடிப்படையில் காலிஇ கொழும்புஇ ஹம்பாந்தோட்டை ஆகிய துறைமுகங்களிலே குறைந்த தூரத்தில் இணைக்க முடியூம். அதன் ஊடாக காலிஇ ஹம்பாந்தோட்டை ஆகியவற்றை விட கெரவலபிட்டியவில் பொருத்துதல் வசதியென கண்டறியப்பட்டது. எனினும் நாம் கெரவலபிட்டியவில் 200 இல் 100 இற்கு தான் நாம் செலுத்துவோம். அந்த வகையில் 50மூ செலுத்த தான் நாம் ஒப்பந்தத்தை ஏற்படுத்தி உள்ளோம். காலியிலிருந்து நாம் மேலும் 65மூ பெற்று கொள்வோம். 400 இல் நாம் 115 மாத்திரமே பெற்று கொள்வம். எமக்கு தேவையான அளவ பெற்று கொள்ள துருக்கி நிறுவனத்தில் கப்பல்கள் இல்லை. அதனால் தான் 400 இல் 50% வீதம் வாங்க உத்தேசித்தோம். இந்த இரு கப்பல்களும் கொள்முதல் செய்யாது விட்டால்இ இமிசபைக்கு இந்த 06 மாதத்திற்கு 94 பில்லியன் செலவாகும். இந்த இரண்டு கப்பல்களும் வாங்கிhல் 93 பில்லியன் மாத்திரமே செலவாகும். அதன் அடிப்படையில் இந்த கப்பல்கள் கொள்முதல் செய்வதன் மூலம் இமிசபைக்கு 01 பில்லியன் இலாபம் ஈட்டப்படும். இந்த கணிப்பீடானது வரட்சி கால அடிப்படையிலே மேற்கொள்ளப்பட்டது. மழை காலம் ஏற்பட்டால் இந்த விலைகள் மேலும் குறையூம்.

எதிர்வரும் காலத்தில் நாம் சீனாவில் 300 மெகாவோட்இ யப்பானில் 300 மெகாவோட்இ இந்தியாவில் 300 மெகாவோட் ஆக 03 மின் நிலையங்களை கொள்முதல் செய்யவே நாம் தீர்மானித்துள்ளோம். இந்த அனைத்து மின் நிலையங்களும் 2022 இன் பின்னரே வரும். அது வரையில் எமக்கு மின்சார பற்றாக்குறை எதிர்நோக்க வேண்டிய நிலை ஏற்படும. மின்சக்தி சட்டத்திற்கமைய 43 -4 – C 11 பிரிவின் படி அவசர கொள்முதல் விலைஇ டெண்டர் விலையை விட சாதாரணமாணதெனின் குறித்த அவசர கொள்முதல் மேற் கொள்ள முடியூம். குறித்த செயன்முறையில் தான் நாம் மின் கொள்முதல் செய்கின்றௌமென குறிப்பிட்டார்.

Leave a comment

* required