15 0

Posted by  in Latest News

“ஐக்கிய தேசிய முன்னனி குறுகிய ஒரு காலப் பகுதியில் நாட்டிற்கு பெற்றுக் கொடுத்த அபிவிருத்தி மிகவும் முக்கியமானது……..”
” நாம் தமிழ் தேசிய கூட்டணிக்கு எந்த விதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. வேண்டுகோள் விடுக்கவுமில்லை. அது பற்றி கூறும் கதை முற்றிலும் பொய்யானது…..
நாம் ஏற்கெனவே, வரண்ட காலநிலைக்கு முகம்கொடுக்கக் கூடிய, குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய ஒரு திட்டத்திற்கு நகர்ந்திருக்கின்றோம்…….”

ரவி கருனாநாயக்க

மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்

 

‘நட்பு ரீதியில் ஒற்றுமையாக செயல்படுவதுதான் முக்கியம். அதற்கு பல தடைகள் எழுந்துள்ளன. இத்தகைய தடைகளை எல்லாம் கடந்து, பொது மக்களின் நலன் கருதி, ஒற்றுமையாக செயல்படுவதுதான் மிக முக்கியம். ஜனாதிபதி அவர்களின் வரவுசெலவுத்திட்டச் செலவினத் தலைப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டதனூடாக, யார் என்ன சொன்னாலும், பாராளுமன்றத்திலுள்ள ஒற்றுமை எவ்வளவு என்று தெரிகின்றது’ என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்கள்.

வவுனியா பிரதேசத்தில்  நிர்மாணிக்கப்பட்ட ஒரு மெகாவொட்டு என்ற வீதத்தில் தேசிய மின்சார முறைமைக்கு மின்சாரத்தை இணைக்கும் பொருட்டு உத்தேசிக்கப்பட்டுள்ள சூரிய சக்தி மூல இரண்டு மின்னற்பத்திக் கருத் திட்டங்களை திறந்து வைக்கும் வைபவத்தில் நேற்று (14) கலந்து கொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள்,

‘நாம் சூரிய சக்தி மின்னுற்பத்திக் கருத் திட்டம் என்ற எண்ணக்கருவை இதற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர் ஏற்படுத்தினாலும், பல தடைகளின் காரணமாக நாம் மிகவும் மந்த கெதியிலேயே அந்த எண்ணக்கருவை நோக்கி பயணித்துள்ளோம். எமது நாட்டில் இத்தகைய எண்ணக்கருவை செயற்படுத்தியதனூடாக மின்னுற்பத்திற்கு பெருமளவில் நன்மை கிடைத்துள்ளது. இந்த சூரிய மின்னுற்பத்தி நிலையத்தினால், எமது அனல் மின்னுற்பத்தி நிலையத்தின் தேவை குறையும். அதுதான் எமக்கு தேவை. மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களை வியாபிக்கச் செய்வது மிகவும் முக்கியமானது. இந்த சூரிய சக்தியிலுள்ள ஒரேயொரு பலவீனம்தான், இரவு நேரத்தில் இந்த சூரிய சக்தியை பயன்படுத்த முடியாதிருப்பது. ஆகையால், நாம் தற்பொழுது சூரிய சக்தி மின் கலங்களை பாவிக்கின்றோம். எமது நாட்டின் அபிவிருத்தி ஒவ்வொரு மூலை முடுக்குகளுக்கும் வியாபித்துள்ளது. இந்தப் பிரதேசத்தில் சூரிய சக்தி மற்றும் காற்று சக்தி போன்ற மின்னுற்பத்தி நிலையங்களை அதிகளவில் அபிவிருத்தி செய்வதற்கு நாம் நடவடிக்கை எடுப்போம்’.

‘எமக்கு தெரியும், ஒவ்வொரு வருடமும் வரண்ட காலநிலை ஏற்படுகின்றது என்று. அத்தகைய காலப் பகுதியில், மின்சக்தித் துறையில் எழும் பிரச்சினைக்குரிய நிலையை சமாளிப்பதற்கு உபாயத்திட்டங்களை இனங்கண்டு, நிலையான ஒரு தீர்வை பல வருடங்களாக பெற்றுக் கொள்ள இயலாதிருந்தது. எனினும், நாம் ஆட்சிக்கு வந்த குறுகிய ஒரு காலப் பகுதியில், இந்த வரண்ட காலநிலைக்கு முகம்கொடுக்கக் கூடிய ஒரு மின்னுற்பத்தித் திட்டத்தை தயாரித்துள்ளோம். குறைந்த செலவில் மின்சாரத்தை உற்பத்தி செய்யக் கூடிய ஒரு திட்டத்தை நாம் இப்பொழுது ஆரம்பித்துள்ளோம்’. எனவும் கூறினார்கள்.

இதன் போது, இன்றைய அரசியல் நிலை பற்றி ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள்…,

‘நாம் தமிழ் தேசிய கூட்டணிக்கு எந்த விதமான நிபந்தனைகளையும் விதிக்கவில்லை. வேண்டுகோள் விடுக்கவுமில்லை. அது பற்றி கூறும் கதை முற்றிலும் பொய்யானது. நிபந்தனைகளை விதிப்பது தீவிரவாதிகளே. நாட்டின் அபிவிருத்திற்கு தடைகளை ஏற்படுத்தும், நல்ல முன்னேற்றகரமான பயணங்களை தடுக்கும் நபர்கள். யார் நினைத்தது, வவுனியா பிரதேசம் இந்தளவு அபிவிருத்தி அடையும் என்று. எனினும், இன்று இந்தப் பிரதேசம் பாரியளவில் அபிவிருத்தி அடைந்துள்ளது. இந்த அபிவிருத்தியின் சமநிலையை ஊடகங்கள் மக்களுக்கு அறியப்படுத்த வேண்டும். ஐக்கிய தேசிய முன்னனி குறுகிய ஒரு காலப் பகுதியில் நாட்டிற்கு பெற்றுக் கொடுத்த அபிவிருத்தி மிகவும் முக்கியமானது. இது மிகவும் முன்மாதிரியான ஒரு வேலைத் திட்டம். நாம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் தேர்தலை சந்திக்க தயாராகவுள்ளோம். சகல எதிர்கட்சிகளும் ஒன்றிணைந்தாலும், எந்த விதத்திலும் மாற்றம் ஏற்படப் போவதில்லை. எமது கட்சி ஒற்றுமையாக சேவை செய்வதுதான் முக்கியம்’ எனவும் குறிப்பிட்டார்கள்.

Leave a comment

* required