12 0

Posted by  in Latest News

“நாள் ஒன்றுக்கு இரண்டு மின் குமிழ்களை அணைத்து, மின்சாரத்தை சேமிப்பதற்கு உதவுங்கள்….”

“எந்த விதத்திலும் மின்சாரத் துண்டிப்பை அமுல்படுத்த போவதில்லை”

ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்

‘மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதியிலுள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைவடைந்து செல்கின்றது. ஆகையால், நாம் அனல் சக்தி மின்னுற்பத்தி நிலையங்களை பயன்படுத்தித்த வேண்டும். எமக்கு அவசர மின்சாரக் கொள்வனவை செய்வதற்கோ அல்லது மின்சாரக் கட்டணத்தை அதிகரிப்பதற்கோ அவசியமில்லை. ஆதலால், மின்சாரத்தை சிக்கனமாக பாவியுங்கள் என நான் எமது 65 இலட்சம் எண்ணிக்கையான மின்சார நுகர்வோரிடம் கேட்டுக் கொள்கின்றேன். மின்சார நுகர்வோரிடம் நான் கேட்டுக் கொள்வது, நாள் ஒன்றுக்கு இரண்டு மின் குமிழ்களை அணைத்து, மின்சாரத்தை சேமியுங்கள் என்று. இவ்வாறு செய்தால், நாள் ஒன்றுக்கு 100 மெகாவொட்டு அளவான மின்சாரத்தை சேமிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கும். சிக்கனமாக மின்சாரத்தை பாவிக்க வேண்டிய காலம் உருவாகியுள்ளது. நாம் எந்த விதத்திலும் மின்சாரத் துண்டிப்பை அமுல்படுத்தப் போவதில்லை. ஆகையால், அதற்கு தேவையான உதவிகளை எமக்கு செய்யுங்கள்’ என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் பொது மக்களிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார்கள்.

நிலவுகின்ற வரண்ட கலநிலையில், மின்சக்தித் துறை எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் பற்றி ஊடகங்களுக்கு அறியப்படுத்தும் நிகழ்வில் கலந்துகொண்ட வேளையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்கள்.

மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள்,

‘இன்றைய நாட்களில், மின்சாரத்திற்கு மிகவும் அதிக கேள்வி நிலவுகின்றது. இந்த நிலை, மேலும் 1 ½ மாத கால அளவுக்கு நீடிக்கும் என நான் நினைக்கின்றேன். மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்த பகுதிகளுக்கு கிடைக்கின்ற மழையும் இந்தக் காலப் பகுதியில் குறைவு. எனினும், பொது மக்களுக்கு தொடர்ச்சியாக மின்சார விநியோகத்தை வழங்குவதற்கு தேவையான ஒழுங்குகளை நாம் மேற்கொண்டு வருகின்றோம். எமது இ.மி.ச. திறமை வாய்ந்த பொறியியலாளர்களும் மற்றும் அனுபவம் வாய்ந்த பதவியணியினரும், நாமும் சேர்ந்து இந்த நிலையை சமாளித்துச் செல்வதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வோம்’.

‘10 வருட காலமாக, இந்த நாட்டின் மின்சாரத்திற்கான தேவைக்கு ஏற்ப ஒரு மின்னுற்பத்தி முறைமை தாபிக்கப்படவில்லை. எங்களால் செய்ய முடியுமான சிறு விடயம்தான், தத்தமது வீடுகளிலுள்ள இரண்டு மின் குமிழ்களை அணைத்து, மின்சாரத்தை சேமிப்பது. அவ்வாறு செய்தால், மக்களினது பிரச்சினையும் மற்றும் நாட்டின் பிரச்சினையும் தீரும்’ எனவும் கூறினார்கள்.

Leave a comment

* required