Posted by superadmin in Latest News
சுற்றாடல்நேய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் அடிப்படையிலான ஒரு எதிர்கால மின்னுற்பத்தித் திட்டம்…
24 மணித்தியாலமும், குறைந்த விலையில், தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்கும் ஒரேயோரு நாடாக இலங்கையை பரிவர்த்தனை செய்வதற்கான பல உபாயத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு நடவடிக்கை….
- ஆலோசனை சேவைகளை வழங்குவதற்கும் மற்றும் பயிற்சி வேலையரங்குகளை நடத்துவதற்கும் உலக வங்கி இணக்கம்
- குறைந்த செலவில் மின்னுற்பத்திக் கருத் திட்டங்களை தாபிப்பதற்கான நிதி உதவி
இலங்கை, இன்று எதிர்நோக்கி வருகின்ற பொருளாதார சவால்களுக்கு மத்தியில், மின்சக்தித் துறையின் அபிவிருத்திற்கு மேற்கொள்ளக் கூடிய மற்றும் மேற்கொள்ள வேண்டிய சகல நடவடிக்கைகள் தொடர்பாகவும் மற்றும் அவற்றின் நிமித்தம் வழங்கக் கூடிய உதவிகள் தொடர்பாகவும் கலந்துரையாடும் பொருட்டு, உலக வங்கியின் ஒரு பிரதிநிதிகள் குழு, மின்வலு சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்களை உத்தியோகபூர்வமாக சந்தித்தது.
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சின் வளாகத்தில் கடந்த தினம் இடம்பெற்ற இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, பல துறைகள் தொடர்பாகவும் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டதால், மின்சக்தித் துறையின் அபிவிருத்திற்கான பிரேரணைகளும் மற்றும் தீர்மானங்களும் தொடர்பில் பல உடன்பாடுகளை எட்டமுடிந்தது.
மின்சார விநியோகத்தில், இலங்கை உயர் மட்டத்தை அடைந்திருந்தாலும், மின்னுற்பத்திற்கு அதிக செலவு வாய்ந்த சக்தி மூலங்களுக்கு நகர்ந்து, உலகத்தில் ஏனைய நாடுகளில் தங்கியிருக்கும் அளவுக்கு மாறியுள்ளதாக உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு தெரிவித்தது.
மின்னுற்பத்திற்கு செலவு குறைந்த நீர் சக்தி மூலத்தில் தங்கியிருந்த இலங்கை, நீர் வளங்களின் மட்டுப்பட்டளவு மற்றும் நாளாந்தம் மின்சாரத்திற்கு அதிகரித்து வருகின்ற தேவையை பூர்த்தி செய்தல் ஆகியவற்றின் காரணமாக, அதிக செலவு வாய்ந்த மின்னுற்பத்தி முறைமைக்கு நகர நேர்ந்ததாகவும், ஏற்கெனவே மின்னுற்பத்தியை மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி மூலங்களுக்கு நகர்த்தும் பொருட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில். மின்னுற்பத்தியை முற்றிலும் குறைந்த செலவில், சுற்றாடல்நேய மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி வளங்களின் அடிப்படையில் மாத்திரம் மேற்கொள்வதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், விடயத்திற்கு பொறுப்புடைய அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழுவுக்கு தெனிவுபடுத்தினார்கள்.
அமைச்சர் அவர்கள் அவ்வாறு தெளிவுபடுத்திய பின்னர், மின்னுற்பத்தி, மின்சார செலுத்துகை மற்றும் மின்சாரப் பகிர்ந்தளிப்பு முதலிய செயற்பாடுகளை, செலவு குறைந்த விதத்தில், மிகவும் பாதுகாப்பாக அதே போன்று வினைத்திறன் வாய்ந்ததாக மேற்கொள்வதற்கு தேவையான தொழில் நுட்ப உபாயத்திட்டங்கள் பற்றி, இலங்கையின் மின்சக்தித் துறையில் ஈடுபடும் தரப்புகளை விழிப்பூட்டுவதற்கான ஆலோசனை சேவைகளை வழங்க மற்றும் பயிற்சி வேலையரங்குகளை நடத்த முடியும் எனவும், மற்றும் அதனூடாக, இலங்கை ஏனைய நாடுகளில் தங்கியிருக்கின்ற நிலையை மாற்றியமைப்பதற்கு முடியும் எனவும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு தெரிவித்தது.
மேலும், இலங்கையில் தாபிக்கப்பட்டுள்ள செலவு குறைந்த மின்னுற்பத்திக் கருத் திட்டங்கள் தொடர்பில் கவனத்தை செலுத்தி, அதன் நிமித்தம் நிதி உதவியை வழங்கக் கூடிய சாத்தியம் இருப்பதாகவும், இலங்கையை பிராந்தியத்தில் ஏனைய நாடுகளுக்கு இடையில், முழு நாடும் உள்ளடங்கும் வகையில், 24 மணித்தியாலமும் குறைந்த விலையில், தொடர்ச்சியாக மின்சாரத்தை விநியோகிக்கக் கூடிய ஒரு நாடாக பரிவர்த்தனை செய்வதற்கு தேவையான உபாயத்திட்டங்களை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் உலக வங்கியின் பிரதிநிதிகள் குழு, மின்வலு சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்களிடம் தெரிவித்தது.