Posted by superadmin in Latest News
“இது எதிர்கட்சியை ஒழிக்கும் ஒரு வரவுசெலவுத்திட்டம்…..”
” பலவீனத்தை ஒழித்து, சரியான ஒரு பாதையில் பயணிப்பதற்கு நாம் கடுமையாக முயற்சிக்கின்றோம்…..”
“எந்தளவு சவால்களை எதிர்நோக்க நேரிட்டாலும் நாம் மின்சார நுகர்வோருக்கு நன்மையை பெற்றுக் கொடுக்க அச்சமின்றி நடவடிக்கை எடுப்போம்….”
ரவி கருனாநாயக்க
மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர்
‘நாம் ஒரு வாக்குறுதியை அளிப்பது அதனை நிறைவேற்ற முடியும் என்றால் மட்டுமே. எமது கட்சி மற்றையவர்கள் போல் செய்ய இயலாத விடயங்களை கூறி, எதிர்கட்சியை ஏசிப்பேசுவதில்லை. எமது குறைபாடுகள் இருந்தால், அது பற்றி கட்சிக்குள் நாம் பேசி தீர்த்துக் கொள்வோம். எமக்கு தேவை மக்களுக்கு இன்றை விடவும் நாளையை ஒளிமயமான ஒரு நாளாக மாற்றுவதற்குத்தான். இது தேர்தலுக்கான வரவுசெவுத்திட்டம் என்று எதிர்கட்சிகள் கூறினாலும், இது எதிர்கட்சிகளை ஒழிக்கும் ஒரு வரவுசெலவுத்திட்டம் என நான் கூறுகின்றேன்’ என மின்வலு, சக்தி மற்றும் வியாபார அபிவிருத்தி அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள் குறிப்பிட்டார்கள்.
இன்று (06) காலையில், கெரவலப்பிட்டிய இரட்டை சுழற்சி அனல் மின்னுற்பத்திப் பொறித்தொகுதி வளாகத்தை பார்வையிடுவதற்காக விஜயத்தை மேற்கொண்டு அவதானித்த பின்னர், ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் அவர்கள் இவ்வாறு தெரிவித்தார்கள்.
மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரவி கருனாநாயக்க அவர்கள்,
‘எமது நாட்டின் அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளில் ஒன்றான மின்சாரத்தை குறைந்த செலவில் உற்பத்தி செய்து, குறைந்த விலையில் மின்சார நுகர்வோருக்கு விநியோகித்து, அவர்களுக்கு உதவுவதற்கே நாம் கவனம் செலுத்துகின்றோம். அவ்வாறு செய்யவில்லை என்றால் நிகழ்வது, எதிர்பாராத மின்னுற்பத்தி வீழ்ச்சியின் போது, அவசர மின்சாரக் கொள்வனவை செய்து, அதன் நிமித்தம் அதிக செலவு செய்வதாகும். இங்கு, அப்பாவி மின்சார நுகர்வோர் பற்றி சிந்திப்பதில்லை. நுகர்வோர் பற்றி சிந்தித்து, உற்பத்தித் தரப்புகளுக்கு சவால்களை ஏற்படுத்தி, அதிலிருந்து கிடைக்கும் நன்மைகளை மின்சார நுகர்வோருக்கு பெற்றுக் கொடுப்பதற்கான ஒரு வேலைத் திட்டத்திலேயே நாம் இறங்கியுள்ளோம். எந்தளவு சவால்கள் வந்தாலும், அச்சமின்றி அவற்றுக்கு முகம்கொடுத்து, செயல்படுவோம்’ எனவும் கூறினார்கள்.
வரவுசெலவுத்திட்டம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் அவர்கள்,
‘மட்டுப்பட்டளவான வளங்களை, மட்டுப்பாடற்ற தேவைகளுக்காக பயன்படுத்தி, இந்தத் தடவை வரவுசெலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. ஒரு அரசாங்கம் என்ற ரீதியில், முடியுமான வரையில் பொது மக்களுக்கு உச்ச பலனை பெற்றுக் கொடுப்பதற்குத்தான் எதிர்பார்க்கின்றோம். இதை விடவும் அதிகம் வழங்க முடியுமானால் நல்லது. அது பற்றி கவனத்தை செலுத்தி, குறைபாடுகள் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்துகொண்டு, இப்பொழுது நாம் செயல்பட்டு வருகின்றோம்’.
‘ஐக்கிய தேசிய கட்சி என்பது, ஏதாவது ஒன்றை கூறினால் அதனை செய்யும் ஒரு கட்சி. நாம், ஒரு அரசாங்கம் என்ற ரீதியில், வரவுசெலவுத்திட்டத்தை சமர்ப்பித்தது, சிறந்த முறையில் நிறைவேற்றி பொது மக்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுப்பதற்காகவேயன்றி, பயந்தல்ல. ஆளும் கட்சி, எதிர்கட்சி என்று போட்டி போடுவதால் அப்பாவி பொது மக்கள்தான் துன்பப்படுவது. ஆகையால், இந்த நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை ஒழித்து, ஏதாவது உடன்பாட்டிற்கு வந்து, ஒற்றுமையாக சேவை செய்யக் கூடிய ஒரு நிலையை உருவாக்கி, பொது மக்களுக்கு நன்மைகளை பெற்றுக் கொடுக்க வேண்டும்’.
ஜனாதிபதி அவர்களும், பிரதமரும் தற்பொழுது ஒன்றாக இணைந்து பணியாற்றுகின்றார்கள். ஏதாவது ஒரு இடத்தில் பலவீனம் ஏற்பட்டுள்ளது. அந்த பலவீனத்தை இல்லாதொழித்து, சரியான ஒரு முன்னேற்றப் பாதையில் பயணிப்பதற்கு நாம் கடுமையாக முயற்சிக்கின்றோம்’ எனவும் கூறினார்கள்.
இந்த அவதானிப்பு விஜயத்தில், மின்வலு, சக்தி மற்றும் மீளப்புதுப்பிக்கத்தகு சக்தி இராஜாங்க அமைச்சர் சம்பிக்க பிரேமதாச அவர்களும் கலந்து கொண்டார்கள்.